இயற்கை வழி பூச்சி விரட்டி!

இயற்கை வழி பூச்சி விரட்டி! இயற்கை வழி பூச்சி விரட்டி!பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் ...

இயற்கை வழி பூச்சி விரட்டி!

இயற்கை வழி பூச்சி விரட்டி!பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது.
இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை.
தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் விரட்டிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் தாவரத்திலிருந்து விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை
1. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய்
2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். (எ.கா) எருக்கு, காட்டமணக்கு
3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள்- (எ.கா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள்- (எ.கா) பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை
தேவையான பொருட்கள்: (ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)
1. காட்டாமணக்கு – 1/2 கிலோ
2. குமிட்டிகாய் – 1/2 கிலோ
3. ஊமத்தை – 1/2 கிலோ
4. பீச்சங்கு – 1/2 கிலோ
5. சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ
6. எருக்கு – 1/2 கிலோ
7. அரளி – 1/2 கிலோ
8. நொச்சி – 1/2 கிலோ
9. சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ
10. ஆடா தோடா – 1/2 கிலோ
11. நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ
12. வேம்பு – 1/2 கிலோ
13. மாட்டு கோமியம் – 1/2 கிலோ
14. மாட்டு சாணம் – 1/2 கிலோ
15. மஞ்சள் தூள் – 1/2 கிலோ
மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின் இலை தழைகளை எடுத்து சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும். அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம்.பயன்படுத்தும் முறை:இலைவழி ஊட்டம்/தெளிப்பு: பத்து லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம்.சிறப்பான தன்மைகள்:
1 எளிதில் தயாரிக்கலாம்
2. குறைவான முதலீடு
3. தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது.
4. இயற்கையை பாதிக்காதவை
பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.
தகவல் மூலம் : முனைவர். ச. வள்ளல் கண்ணன், வேளாண் அறிவியல் மையம், ஆர்.டி.மலை அஞ்சல், குளித்தலை TK, கரூர்
தகவல் தொகுப்பு:Cas.பிரிட்டோ, கிராம வள மையம், செம்பட்டி

Related

விவசாயக்குறிப்புக்கள் 729418192360849792

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item