குடும்ப பட்ஜெட்டில் மருத்துவச் செலவு அதிகமாகிறதா... செலவு ரசம்- வைத்துச் சாப்பிடுங்கள். பட்ஜெட் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும்!

உ ணவு எப்படி மனிதருக்கு முக்கியமோ, அதைப்போலவே உறக்கமும். குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என்பது உலகளாவிய மருத்துவக் கணிப்பு. ...

ணவு எப்படி மனிதருக்கு முக்கியமோ, அதைப்போலவே உறக்கமும். குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என்பது உலகளாவிய மருத்துவக் கணிப்பு. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உறங்குபவர்கள், அதன் பிறகான பொழுதை மிகவும் உற்சாகமாகக் கடப்பார்கள். அவர்களின் செயல்திறனும் கூடுதலாக இருக்கும். `ஒரு மனிதன் தொடர்ந்து ஒரு வாரம் கண்ணயராமல் இருந்தால், அவனுக்கு நிச்சயம் மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மனித வடிவமைப்பில், உறக்கம் என்பது பிரதானமானது. பசித்தபோது உணவும் களைத்தபோது உறக்கமும் கட்டாயம் தேவை. அவை கிடைக்காதபட்சத்தில் உடலின் இயந்திரத்தன்மை குலைந்துபோகும்.

இன்று உழைப்புக்கேற்ற உணவு என்ற அடிப்படையே மாறிவிட்டது. கடினமான உணவைச் சாப்பிட்டுவிட்டு மேனி அசையாமல் வேலைசெய்கிறார்கள். கடும் பணி செய்பவர்களுக்கு அதற்கேற்ற உணவு வாய்க்கவில்லை. இந்த முரண்பாடே, இன்று அதிகரித்துவரும் நோய்களுக்கான அடிப்படை. `இந்தியாவில் சுமார் 60 சதவிகிதம் பேர், போதிய உறக்கமின்மையால் தவிக்கிறார்கள்’ என்கிறது ஒரு மருத்துவ அறிக்கை. இதற்கு, பல காரணங்கள் உண்டு. உறக்கமின்மையை ஆங்கில மருத்துவம் `insomnia’ எனக் குறிப்பிடுகிறது. `தொடர்ச்சியான உறக்கமின்மையால் மூளை பாதிக்கப்படலாம்’ என்றும் சொல்கிறார்கள். பலவிதமான உடற்கோளாறுகளுக்கு உறக்கமின்மை தொடக்கப்புள்ளி என்பதை மறக்கக் கூடாது.

நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம் இரண்டும்தான் நம் மூதாதையர்களின் ஆயுள் ரகசியம். கடும் உழைப்பு, அதற்கேற்ப சக்தியும் தரும் உணவு, கொண்டாட்டமான வாழ்க்கைமுறை, தடையற்ற உறக்கம் எனத் திட்டமிட்ட வாழ்க்கை அவர்களுடையது. உடலை உணவால் கட்டுப்படுத்தியதுதான் அவர்களின் ஆகப்பெரும் சாதனை. நோய்க்கு மருந்தாக மட்டுமின்றி உடல், உழைப்பு இரண்டின் தன்மைக்கேற்பவும் உணவை அமைத்துக்கொண்டார்கள்.

தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். உறக்கம் பாதிக்கப்படும். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள், வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகளே உறக்கத்தைத் தின்றுவிடும். மனதைப் பாதிக்கும் பிரச்னைகளாலும் உறக்கம் பாதிக்கும். இப்படி உடற்சிக்கல், மனச்சிக்கல் எனப் பல காரணங்களால் உறக்கம் பாதிக்கப்பட்டாலும், ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது இந்தப் பாரம்பர்ய ரசம்.

“செலவு ரசம் செய்ய தேவைப்படும் `சுண்டுகார செலவுப் பொருள்கள்’ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் நடக்கும் சந்தைகளிலும் கிடைக்கும். செலவு ரசம் என்பது மருந்தைப் போன்றது. கொங்கு பகுதிகளில் பெரும்பாலும் வாரம் ஒருமுறை இதைச் செய்து உணவில் சேர்த்துக்கொள்வார்கள். நம் உடல் என்பது ஓர் இயந்திரம். அவ்வப்போது அதைத் துடைத்துச் சுத்தம் செய்தால்தான் நன்றாகச் செயல்படும். அப்படி உடலைச் சுத்தம் செய்யும் மருந்துதான் `செலவு ரசம்’. தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் தரும். உடல் நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலக் கோளாறுகளுக்கும் இது ஏற்ற உணவு” என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி. 

செலவு ரசத்துக்கான ரெசிப்பியையும் தருகிறார் அவர்.

தேவையான பொருள்கள்:

சுண்டுகார செலவுப் பொருள்கள் - 1 பங்கு
(கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, வால்மிளகு, கருஞ்சீரகம், கடல் நுரை, சித்தரத்தை, வெட்டிவேர், பெருங்காயம் அடங்கியது. நாட்டு மருந்துக் கடைகள், வாரச் சந்தைகளில் கிடைக்கும்.
100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்).
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொத்தமல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

முதலில், பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டுகார செலவுப் பொருள்கள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லித்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் சிறிய வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்துவைத்துள்ள விழுதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு, கொத்தமல்லித் தழையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தூவி, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைவிட்டு இறக்குங்கள். சுடு சோற்றில் இதை ஊற்றிச் சாப்பிட, அமுதம் போன்று இருக்கும்.

செலவு ரசத்தில் அப்படி என்ன சிறப்பு?

``நம் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தச் செலவு ரசம். இதை, `மொத்த உடலுக்குமான மருந்து’ என்றும் சொல்லலாம். இதன் சிறப்பே அதன் சுவைதான். இதில் நிறைய மருத்துவப் பொருள்கள் கலந்திருந்தாலும், சுவையில் அந்தக் குணம் தெரியாது. வயிற்றுக்கோளாறுகள், வாயுசார்ந்த பிரச்னைகள், சுவாசச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும். இவை தவிர தாதுப்பொருள்கள், நார்ச்சத்து, வைட்டமின்களும் இதில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள், வயதானவர்கள், பிரசவம் முடிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் இருப்பவர்களுக்கு இது ஏற்ற உணவு. தாய்ப்பால் தரும் பெண்கள் இந்த ரசத்தைக் குடித்தால், குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி கூடும். உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமின்றி மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது. மனக்குழப்பங்கள் நீங்கி ஆழ்ந்து உறங்கவும் இந்தச் செலவு ரசம் உதவும்...” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.

குடும்ப பட்ஜெட்டில் மருத்துவச் செலவு அதிகமாகிறதா... செலவு ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். பட்ஜெட் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும்!
 Thanks to http://www.vikatan.com/avalkitchen

Related

மூலிகை சமையல் 6075557174253750133

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item