கடல் உப்பு, தேங்காய்ப்பால், வெந்தய இலை... பற்களைப் பாதுகாக்கும் எளிய வழிகள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உடல் நலத்தின் அழகு? பற்களில் தெரியும். அவ்வளவு பெருமைமிக்க பற்களை எப்படிப் பாதுகாப்பது? `எவ்வளவுதான் ...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
உடல் நலத்தின் அழகு? பற்களில் தெரியும்.
அவ்வளவு பெருமைமிக்க பற்களை எப்படிப் பாதுகாப்பது?
`எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துப் பராமரித்தாலும், பற்களில் ஏதாவது பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது’ என்பது இந்தத் தலைமுறையினரின் குற்றச்சாட்டு.

அந்தக் காலத்தில் வேப்பங்குச்சி, கருவேலங்குச்சி, ஆலங்குச்சி... என இயற்கை முறையில் பல் துலக்கிய நம் முன்னோர்கள், கடைசி காலம் வரை பற்கள் பளிச்சென்று இருக்கும்படி ஆரோக்கியத்துடனும் வைத்திருந்தனர். அவர்களைப்போல இந்தத் தலைமுறையினரும் தங்கள் பற்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
அதற்குச் சில வழிகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாமா?

இன்றைய தலைமுறையினரில் பலரும் அடிக்கடி பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களை செக்கப் செய்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், பற்களுக்கிடையே ரத்தக்கசிவு ஏற்படுதல், ஈறுகளில் வலி ஏற்படுதல் போன்றவை. இந்த மாதிரியான பிரச்னைகளைச் சில இயற்கையான பொருள்களின் உதவியால் நம்மால் தவிர்க்க முடியும். அவற்றில் சில இங்கே...

கடல் உப்பு
கடலிலிருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட இந்த உப்பில் நிறைய சத்துகள் நிறைந்துள்ளன. இந்த உப்பு மக்னீசியம், ஃப்ளோரைடு, பொட்டாசியம், கால்சியம் குளோரைடு ஆகிய தாதுக்களைக்கொண்டது. அந்தக் காலத்தில் இதை வீட்டுப் பொருள்களுள் ஒன்றாக வைத்திருந்தனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் பல் மருத்துவர்கள் பற்களில் சிகிச்சை நடந்த பின்னர், உப்புநீரில் வாய் கொப்பளிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். அப்போழுதுதான் பல்வலியோ, கோளாறோ விரைவாகக் குணமடையும், இன்ஃபெக்‌ஷன் ஏற்படாமல் இருக்கும். ஆக, கடல் உப்பு பல் பாதுகாப்பில் இன்றியமையாத ஒன்று.

தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பாலைத் தண்ணீருடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை நன்றாகக் கொப்பளித்தால், வாயில் உள்ள கொப்புளங்கள், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆகியவை குணமாகி நல்ல தீர்வு கிடைக்கும்.

வெந்தய இலை
வெந்தயச் செடியின் இலைகளை எடுத்து, அதை நன்றாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். அதை ஆறவைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப் புண்ணுக்கும் ரத்தக்கசிவுக்கும் உடனடித் தீர்வு கிடைக்கும்.

விட்ச் ஹசல் (Witch Hazel) என்னும் மூலிகைச் செடி
இந்தச் செடிக்கு இயற்கையாகவே தோல்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் குணம் உண்டு. இந்தச் செடியின் இலைகளைத் தண்ணீரில் கலந்து கொப்பளித்து வந்தால், ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். அதோடு, ஈறுகளிலும் பற்களுக்கிடையிலும் ஏற்படும் ரத்தக்கசிவையும் குறைக்கும். மேலும், தொண்டைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும். மருத்துவர் பரிந்துரைத்த பிறகு பயன்படுத்தலாம்.

பெப்பர்மின்ட் எண்ணெய்
பெப்பர்மின்ட் எண்ணெய் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதைப் பயன்படுத்துவதால், உடல் குளிர்ச்சியடைந்து நாக்கிலுள்ள புண்கள், வாயில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும்; வாயிலிருந்து வெளிப்படும் துர்நாற்றமும் குறையும்.

மேலே சொன்ன பொருள்கள்தான் வாய் மற்றும் பற்கள் தொடர்பான மருந்துகளிலும் முக்கியமாக இடம்பெறுபவை. மேலும், உடலில் எந்தப் பகுதியில் தொந்தரவு ஏற்பட்டாலும், அதன் அறிகுறி வாயிலும் பற்களிலும்தான் முதலில் தெரியும். அதைத் தெரிந்துகொண்டு முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், வயிற்றுப் புண்கள், நுரையீரல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம். பொதுவாக, அதிகளவில் காய்கறிகள், கீரைகள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. தினமும் இருமுறை பல்துலக்கவேண்டியது அவசியம். இரண்டு முறை பல்துலக்கினால், வாய் துர்நாற்றம் அடிக்காது; அதோடு புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும். பற்களை நன்கு சுத்தமாகத் துலக்க வேண்டும். அதேபோல் உபயோகிக்கும் பிரஷ்களையும் சரியானதாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றாகத் துலக்க வேண்டும் என்று அழுத்தி அழுத்திப் பற்களைத் தேய்த்தால், ஈறுகளிலும் வாய் ஓரத்திலும் காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே, வாய் மற்றும் பற்களைப் பொறுத்தவரை, பொறுமை மிக மிக அவசியமானது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7616511339187111704

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item