இந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்!

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இர...

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதேசமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக, எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.

1. பழையதைப் பின்பற்றாதீர்கள்! 

எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதிதாகச் சிந்தியுங்கள். எந்த வேலையாக இருந்தாலும், வார நடுவில் சலிப்பு தட்டுவதற்குக் காரணம் அதன் பழைமையே. புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை அது தவறாக முடிந்தாலும், 'சரி இன்று ஏதோ ஒரு புது முயற்சி செய்தோம்' என்கிற திருப்தியாவது மிஞ்சும்.

இன்று நிறைய பேர் செய்யும் பொதுவான தவறு, தங்களுக்கென வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளாமல் இருப்பது. உங்களுக்கென ஒரு குறிக்கோளை முடிவு செய்து அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அடுத்த அடுத்த நிலைகளுக்கு உங்களை நீங்களே நகர்த்திக்கொள்ள வேண்டும். புது விஷயங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து சிறந்த முடிவுகளை தைரியமாக எடுங்கள்.

2. 'என்னால் முடியுமா?' என்ற அவநம்பிக்கையைச் சுமக்காதீர்கள்! 

இன்று பலருக்கும் தன்னம்பிக்கை இல்லை. 'என்னால் முடியுமா?' என்று யோசிக்காமல், 'என்னால் ஏன் முடியாது?' என்று சிந்தியுங்கள். உங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, 'அதுதான் என் உலகம். அதைச்சுற்றிதான் என் சிந்தனைகள் இருக்கும்' என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 'என்னால் என்ன வேலை இயலும்? அதை எந்த அளவுக்கு கச்சிதமாக முடிக்க இயலும்' என்று உங்களுக்கு நீங்களே சுயமதிப்பீடு செய்து தன்னம்பிக்கையுடன் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.

3. நம்பிக்கை இழக்கச்செய்யும் உறவுகளைப் பொருட்படுத்தாதீர்கள்! 

பாசிட்டிவிட்டி என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று. என்ன துயரம் நேர்ந்தாலும் 'இது நிரந்தரம் அல்ல, இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இது போன்ற பாசிட்டிவ் சூழல்களை அமைப்பதில் பெரும் பங்கு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உண்டு. நண்பர்கள், உறவுக்காரர்கள், உடன் வேலை செய்பவர் என யாராக இருந்தாலும், ஒருவரிடையே வெளிப்படும் நெகட்டிவிட்டி நம்மையும் சோர்வடைய செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விமர்சனங்களோ, கருத்துகளோ ஊக்கப்படுத்தும் வகையில் சொல்லப்படாவிட்டால் அது நம்மிடையே இருக்கும் பாசிட்டிவிட்டியை குறையச் செய்யும். எனவே இவ்வாறு இருக்கும் உறவுகளின் கருத்துகளை மட்டும் அல்ல, அவர்களையும் பொருட்படுத்தக்கூடாது. முடிந்தவரை இவர்களிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்வதே நல்லது.

4. அறிவை தேக்கநிலையில் வைக்காதீர்கள்! 

உலகச் செய்திகள், தொழில், வேலை சார்ந்த நாட்டு நடப்புகள் பற்றிய அறிவு முழுவதுமாக இல்லை என்றாலும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்காதீர்கள். அறிவு, பிறரிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தரும் பெரும் சொத்து. அதைத் தேக்க நிலையில் வைக்காதீர்கள்.

தவறுகள் கழித்தால் வெற்றியின் வாசல் கிட்ட நெருங்கும்!

Related

பெட்டகம் சிந்தனை 9042751494617311129

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item