FacebookTips....'Profile Name' மாற்றுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நி ஜ வாழ்க்கையிலும் சரி ; டிஜிட்டல் வாழ்க்கையிலும் சரி ; இரண்டிலுமே நமது பெயர் என்பது நம்முடைய அடையாளம் . இன்னும் சொல்லப்போ...



நி வாழ்க்கையிலும் சரி; டிஜிட்டல் வாழ்க்கையிலும் சரி; இரண்டிலுமே நமது பெயர் என்பது நம்முடைய அடையாளம். இன்னும் சொல்லப்போனால் அதுதான் இந்த உலகில் உங்களுடைய முகவரி. அதேபோல ஆன்லைனில் உங்களுடைய யூசர் நேம்தான் உங்கள் அடையாளம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் என எல்லா கணக்குகளுக்கும் இது பொருந்தும். ஆனால் நிஜ வாழக்கையில் பெயர் மாற்றுவது போல, உங்கள் ஃபேஸ்புக்கில் பெயரை மாற்றுவது என்பது கடினமான விஷயம் கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் உங்களுக்கு சிக்கல்தான்.

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்த செய்தியைக் கேட்டு, உணர்ச்சிக் கொதிப்பில் தன்னுடைய ஃபேஸ்புக் புரொபைல் பெயருக்குப் பின்பு ஃபிடல் காஸ்ட்ரோ என சேர்த்து தனது பெயரை மாற்றிவிட்டார். அந்த சமயம் காஸ்ட்ரோவின் தாக்கம் முகநூலில் அதிகமாகவே இருந்தது. எனவே புரொபைல் பிக்சர் மாற்றுவது, காஸ்ட்ரோவின் பொன்மொழிகளை ஸ்டேட்டஸாக தூவுவது, அவர் தொடர்பான செய்திகளைப் பகிர்வது என மொத்த ஃபேஸ்புக்கும் பிசியாக இருந்தது. எனவே இவர் பெயர் மாற்றியது பெரிதாகத் தெரியவில்லை.
ஆனால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் நான்கு நாட்கள் பேசிவிட்டு, பீப் சாங்கிற்கு தாவுவதுதானே நம் ஃபேஸ்புக் கலாசாரம்? அதேபோல சில நாட்களில் ஃபேஸ்புக்கில் காஸ்ட்ரோ அலை செவ்வனே கரையைக் கடந்தது. அதற்கு பிறகு ஜெயலலிதா மரணம், தமிழக அரசியல் சூழல், ஜல்லிக்கட்டு பிரச்னை, பன்னீர் செல்வம் பல்ட்டி, சசிகலா சபதம், எடப்பாடி முதல்வர் ஆனது, நெடுவாசல் போராட்டம் என எக்கச்சக்க விஷயங்கள் நடந்துவிட்டன. அத்தனைக்கும் ஸ்டேட்டஸ் போடும் ஃபேஸ்புக் உலகம், இவை அனைத்தையும் கடந்துவந்து விட்டது. இந்த ஜோதியில் ஐக்கியமாக எண்ணி, மீண்டும் புரொபைல் பெயரை மாற்றலாம் என நினைத்தால் ஃபேஸ்புக் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டது. ஆன்லைனில் அவசரப்பட்டு காஸ்ட்ரோ பெயரை இவர் மாற்றியிருந்தாலும், நிஜத்தில் போராட்டம், புரட்சி ஆகியவற்றிற்கும் இவருக்கும் ரொம்ப தூரம். எனவே காஸ்ட்ரோவின் பெயர் இவர் புரொபைல்க்கு கொஞ்சமும் செட் ஆகவில்லை. மாற்ற நினைத்தாலும் தற்போது மாற்ற முடியாது. ஃபேஸ்புக் ஐடியை யாரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை. கடைசியில் காத்திருந்து, காத்திருந்து 60 நாட்கள் கழித்துதான் தனது .டி.யின் பெயரை மாற்றினார். மீண்டும் பழைய பெயர் வந்ததும்தான் ஃபேஸ்புக்கில் மீண்டும் ஆக்டிவ் ஆனார் அவர்.
ஃபேஸ்புக்கில் உங்கள் அக்கவுன்ட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்.

1. உங்களுடைய ஃபேஸ்புக் பேஜில் தெரிவது உங்களுடைய ஃபேஸ்புக் பெயர். உங்களுடைய அட்ரஸ் பாரில் தெரிவது ஃபேஸ்புக்கின் யூசர் நேம். இரண்டிற்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.
2. உங்களுடைய ஃபேஸ்புக் பெயரை மாற்றும் போது, அதனை அடுத்த 60 நாட்களுக்கு மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் செட்டிங்க்ஸ் பகுதியில் சென்று இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
3. யூசர்நேமையும் இதேபோல செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஏற்கெனவே வேறு அக்கவுன்ட்களுக்கு இருக்கும் யூசர் நேமை நீங்கள் பயன்படுத்த முடியாது. இதற்கான Availability-யை நீங்கள் யூசர் நேம் மாற்றும் போதே பார்த்துக் கொள்ளலாம்.
4. மேலே பார்த்தவை தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கு மட்டுமே! உங்களுடைய தனிப்பட்ட அல்லது நிறுவனங்களின் பக்கங்களுக்கு இது பொருந்தாது. ஃபேஸ்புக் பேஜ்களின் யூசர்நேம் மற்றும் பெயர்களை மாற்ற வேண்டுமெனில், 'Edit Page Info' பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும். பக்கங்களின் பெயர்களை இன்று நீங்கள் மாற்றினால், உடனே இன்னொரு முறை வேறு பெயரை நீங்கள் மாற்ற முடியாது. பின்பு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
வெறும் புரொபைல் பெயர்தானே என்று அசால்ட்டாக இருக்காதீர்கள். உங்களுடைய முகநூல் முகவரி என்பது உங்களுடைய ரெஸ்யூம் முதல் விசிட்டிங் கார்டு வரை அனைத்து இடங்களுக்கும் வந்துவிட்டது. எனவே அவற்றை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!




Related

கணிணிக்குறிப்புக்கள் 8000744858396157375

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item