ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும்!

ஆப்பிள் சிடர் வினிகர் பற்றிய சிறப்பு மருத்துவ பார்வை... ... வ யிற்றுவலி, தலைவலி, அஜீரணம் தீர வேண்டுமா... கொழுப்பைக் கரைக்...


ஆப்பிள் சிடர் வினிகர் பற்றிய சிறப்பு மருத்துவ பார்வை... ...


யிற்றுவலி, தலைவலி, அஜீரணம் தீர வேண்டுமா... கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? எல்லா உபாதைகளையும் சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கஷாயம் செய்து தீர்த்துவிடுவார்கள் நம் பாட்டிமார்கள். அதேபோல இதுபோன்ற பிரச்னைகளுக்குப் பல வெளிநாட்டினருக்கு இன்ஸ்டன்ட் கஷாயமாகப் பயன்படுவது ஆப்பிள் சிடர் வினிகர்தான். ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் ஒன்று இது. நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் என்றால், ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகர் தரும் பலன்கள் ஒன்று, இரண்டல்ல... ஏராளம்! அவை...

* ஆப்பிள் சிடர் வினிகரில், `பெக்டின்’ (Pectin) என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீங்கள் பருகும் எலுமிச்சைச் சாற்றிலோ, ஆரஞ்சு சாற்றிலோ ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

* இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .

* இது மூக்கடைப்பையும் சரி செய்யும். அத்துடன் மூக்கிலுள்ள மியூகஸை உடைத்து சைனஸைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் 5 மி.லி அளவுக்கு வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை மட்டும் கலந்து குடித்தால் சைனஸ் குறையும்.

* அமில இயல்புகளைக்கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும். இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது .

* இதிலுள்ள கிருமி நாசினி பண்புகள் தோல் மற்றும் நகங்களிலுள்ள கிருமிகளையும் பூஞ்சைகளையும் அழிக்கக்கூடியவை. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான நீரால் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.

* முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும். தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதைச் சிறிய பஞ்சால் முகத்தில் ஆங்காங்கே ஒற்றி எடுத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் வராமலும் தடுக்கும்.

* இது, தலையிலுள்ள பொடுகை நீக்குவதோடு, அடர்த்தி இல்லாத முடியை அடர்த்தியாக்கவும் உதவும். தலையில் ஒவ்வொரு பகுதியாக வகுடு எடுத்து அங்கே தண்ணீரில் நனைத்த ஆப்பிள் சிடர் வினிகரை அப்ளை செய்ய வேண்டும். பின்னர் வெந்நீரில் நனைத்த துண்டை நன்கு பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்ட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச, முடி உதிர்வது கட்டுப்படும்.

தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, பொடுகு போகும் வரை உலர விடவும்.

* சளி, இருமல், தொண்டைப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை அளிக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

* இதிலுள்ள அசிடிக் ஆசிட் (Acetic Acid) உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
தினமும் இரண்டு லிட்டர் நீரில் 30 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அடிக்கடி குடித்துவர, அதிகப்படியான நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறும்.
கவனம்...

கீல்வாதத்தை குணப்படுத்துவதற்கு...

கீல்வாதமானது, உடலில் அமிலப் படிகங்கள் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய அமில படிகங்களை ஆப்பிள் சீடர் வினிகர், உடலின் கார சமநிலையை கட்டுப்படுத்தி, அவற்றை உடைத்தெறிகிறது. இருப்பினும் இந்த கூற்றுக்கு அறிவியல் சான்றுகள் ஏதுமில்லை. ஆயினும் மருத்துவர் ஜார்விஸ் ஆப்பிள் சீடர் வினிகர் மூலம், அவரது நோயாளிகளுக்கு கீல்வாத நோய்க்கு சிகிச்சை அளித்து, நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார்.

ஆப்பிள் சிடர் வினிகர் பல நன்மைகளைத் தந்தாலும், அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் தலைவலி, ஏப்பம், வயிற்றுப்போக்கு, உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் வேண்டாம். தண்ணீர் மற்றும் ஜூஸ்களில் கலந்து குடிக்கும்போதும், முகத்தில் பூசும்போதும் அதன் வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரின் மருந்தளவுகள் 

* ஆப்பிள் சீடர் வினிகர்யை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதால், உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும். அதிலும் காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகரை உண்டு வந்தால், அது நல்ல சுத்திகரிப்பானாக செயலாற்றும். 

* உடல் எடையை குறைக்க நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, மூன்று வேளை அருந்தவும். பொதுவாக ஒரு டம்ளர் நீரில், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்துவதே, ஆப்பிள் சீடர் வினிகரை அருந்துவதற்கு பொதுவான வழியாகும்.


ஆப்பிள் சிடர் வினிகர் உடலுக்கு ரொம்பவே நல்லது. உடலின் பி எச் லெவலை சரியா வெச்சுக்கும். டாக்சின் வெளியேற்ற உதவும்.
உடலின் எடையையும் கணிசமாக குறைக்கும். உடனே பலன் தெரியாது.தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஒரு மாதம் கழித்து தெரிய தொடங்கும். கிருமி நாசினி, பொடுகு தொல்லைக்கு நல்ல மருந்து. ஸ்கின் அலர்ஜிக்கு பயன்படுத்தலாம். இன்னும் பல வழிகளில் பயன்படும். வீட்டில் ஒவ்வரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து பொருள் அது.
ஆர்கானிக் தான் வாங்க வேண்டும். பில்டர் செய்யாதது தான் நல்லது. பாட்டலின் கீழே துகள்கள் படிந்து இருக்கும். ப்ராக் ஒரு சிறந்து பிராண்ட். Bragg organic ஆப்பிள் cider vinegar...

1,தினமும் ஒரு டம்பளர் கிரீன் டி அல்லது டம்பளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். இல்லைனா ஒரு பாட்டில் தண்ணியில் இரண்டு ஸ்பூன் கலந்து கொஞ்சம் கொஞ்சமா நாள் முழுதும் சிப் பண்ணலாம். ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் வரை தான் எடுத்துக்கணும். நேரிடையா அப்படியே அதை பயன்படுத்த கூடாது. வாய் வழியே குடிக்க எதில் வேணாலும் ஒரு ஸ்பூன் மட்டும் கலக்கலாம்.ஆனால் தலைக்கே, ஸ்கின்க்கோ போட ஒரு ஸ்புனுக்கு மூன்று ஸ்பூன் 1 ஈஸ்ட் 3 என்ற வீதத்தில் கலந்து தான் தேய்க்கணும். பொடுகு ஓடியே போயிடும். அனைவரும் பயன்படுத்த வேண்டியே ஒரு அருமருந்து. எந்த பிரான்ட் என்றாலும், அன் பில்டர் ஆர்கானிக் பயன்படுத்ததும்.
2,தினமும் ஓவ்வொரு முறையும் சாப்பிட்ட பின் ஒரு பெரிய ஜூஸ் குடிக்கும் டம்பளர் நீரில் ஒரு ஸ்பூன் அலது சுவைக்கு ஏற்ப குறைத்து , கலக்கி குடிங்க.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமாக இருக்கலாம் . இது போல மூன்று வேளையும் செய்யலாம்.இல்லைனா கிரீன் டீயில் இதே போல கலக்கி குடித்தால் இன்னும் நல்லது. இப்படி செய்ய பிடிக்கவில்லை எனில், ஒரு பாட்டில் வாட்டர் கேனில் ஒன்னரை ஸ்பூன் (நார்மல் சைஸ் ஸ்பூன் தான் ) சேர்த்து அந்த தண்ணியை அப்பப்ப நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சம் சிப் பண்ணி குடிங்க. லிட்டர் அளவெல்லாம் கிடையாதுங்க. உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யலாம். ஆனால் அப்படியே குடிக்க கூடாது , ஒரு நாளைக்கு 2 இல்லையெனில் 3 டி ஸ்பூன் தான் சேர்த்துக்கனும். இந்த இரண்டை மட்டும் கடைபிடிங்க.
3,தலைக்கோ இல்லையெனில் உடம்பு, முகத்துக்கோ பயன்படுத்துவதாக இருந்தால், நான் சொன்னது போல 1 ஈஸ்ட் 3 , அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து தேய்க்கணும். கண்ணில் படாம பார்த்துக் கொள்ளனும்.பரு இருந்தால் போன உடன் பயன்படுத்தவும். அவ்வளவு தான்.இதன் பலன் எல்லாம் ஆர்கானிக் அன்பில்டரில் மட்டுமே கிடைக்கும்.
4,பளபளக்கும் கூந்தல் வேண்டுமா?

குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல்
மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும்.ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதனுடன் சம அளவு வினிகரை சேர்த்து கலக்கவும். இதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது வெளியில் போய்விட்டு வந்தாலோ, மேக் அப் போடும் முன்போ இந்த கலவையை உபயோகித்து முகத்தை சுத்தம் செய்யலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.


 5,சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய வைக்கணுமா?

ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்.

6,அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகள் 

சமையல் சோடா கிளீன்ஸர் - சமையல் சோடாவையும், ஆப்பிள் சிடர் வினிகரையும் கலந்து நீங்களாகவே உங்களுக்குத் தேவையான வெண்மைப்படுத்தும் முகமூடியை (Whitening Mask) செய்யலாம். இந்த பசைக்காக நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி, நாளொன்றுக்கு இருமுறை போட்டுக் கொள்ளலாம். நீங்கள் வினிகர் மற்றும் சமையல் சோடாவை போடும் போது வரும் குமிழிகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம். அந்த குமிழிகள் உடனடியாக வருவது குறைந்து விடும். மாறாக, நீங்கள் எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை கலக்கலாம். அதனை சாதாரணமாக போட்டு விட்டு, அது காயும் வரை பொறுத்திருந்து, பின்னர் கழுவி விடவும்.அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். ஒரே இரவில் அற்புதங்களை இது நிகழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மேலும், ரேஸர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்ப்பது நலம். ஏனெனில், கருப்பான அக்குள் உருவாக இவைதான் முக்கிய காரணங்களாக உள்ளன. முடிகளை நீக்குவதற்கு மெழுகை பயன்படுத்த தொடங்குங்கள். நீங்கள் வெண்மையான அக்குளைப் பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சொல்லும் வகையில் பொறுமையும் அவசியம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8394184262349284504

Post a Comment

1 comment

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு...

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item