மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது; லாபம் சம்பாதிக்கிறது? நலம் நம் கையில்!

ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு! ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறத...

ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு! ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது; லாபம் சம்பாதிக்கிறது?

மொட்டை மாடி
சொந்த வீடோ, வாடகை வீடோ, மொட்டை மாடியில ஒரு சின்ன பகுதி போதும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் சில கீரை வகைகளை பயிரிட்டுக்கலாம்! இது, இயற்கை விவசாயங்கிறதால மண் தொட்டிதான் நல்லது.
செம்மண், ஆற்று மண், சாணம், தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை இதையெல்லாம் தொட்டியில சரிவிகிதத்துல கலந்து, அதுல செடி வைக்கணும்.
தேங்காய் நாரும், கரும்பு சக்கையும் அதிகப்படியான நீரை உறிஞ்சு வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா வெளியிடுற திறன் கொண்டதுங்கிறதால, நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி இதை பயன்படுத்திக்கணும்.

பராமரிப்பு
தண்ணீர்ல சாணம் கலந்து மூணு நாட்கள் ஊற வைச்ச கரைசலை, ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்கள்லேயும்; இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காய விழுது மற்றும் 10 மி.லி., வேப்பெண்ணெய் கலந்த ஒரு லிட்டர் தண்ணியை சீரான இடைவெளிகள்ல இரண்டாவது, நான்காவது வாரங்கள்லேயும் செடிக்கு ஊத்தணும். அப்போ தான், செடி செழிப்பா வளரும். பருப்பு, காய்கறிகள் கழுவுற தண்ணீரை கூட ஊத்தலாம். ஆனா, கிருமிநாசினியான மஞ்சள் கலந்து பயன்படுத்துறது நல்லது! சமையலறை கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளோடு, சாணக் கரைசலை சேர்த்து மட்க வைச்சு இயற்கை உரம் தயாரிச்சு பயன்படுத்தலாம்.
அப்புறம், செடிகள்ல எறும்புகள் ஏறாம பார்த்துக்கணும். ஏன்னா, அதுதான் மற்ற பூச்சிகளுக்கு வழிகாட்டும். அதேமாதிரி, மாடியில திண்ணை மாதிரி அமைச்சு, அதுமேலே தொட்டியை வைக்கிறது கட்டடத்தோட ஆரோக்கியத்துக்கு நல்லது!

தண்ணீர் தண்ணீர்
சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் தண்ணீர் ஊத்துறது நல்லது. அதேநேரம், தொட்டியில தண்ணீர் தேங்காம பார்த்துக்கணும். 5 கிராம் பெருங்காயத்தை மண்ணுக்குள்ளே புதைக்கிறது, பூக்கும் செடிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.

ஆதாயம்!
விலைவாசியோட ஏற்ற இறக்கம், ரசாயன உரம் பத்தின கவலையில்லாம, நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி பண்ணிக்கலாம். இந்த முயற்சியோட வெற்றி, மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த சொல்லும். தோட்டக்கலை நிபுணர்கள்கிட்டே ஆலோசனை கேட்கச் சொல்லும். தோட்டம் பெருசாகும். விளைச்சல் கூடும். நம்ம தேவைக்கு போக மீதமிருக்கிறதை அக்கம்பக்கத்துல விற்பனை பண்ணத் தூண்டும். விளைச்சல் கூட கூட, சில்லரை அங்காடிகளுக்கும் காய்கறிகளை விற்கச் சொல்லும்!

எல்லாம் சரி, இந்த விதைக்கும், செடிக்கும் எங்கே போறதுன்னு கேட்குறீங்களா? நிச்சயம் உங்க வீட்டு பக்கத்துல நர்சரி கார்டன் இருக்கும். அங்கே எல்லாம் கிடைக்கும்.ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு! ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது; லாபம் சம்பாதிக்கிறது?

மொட்டை மாடி
சொந்த வீடோ, வாடகை வீடோ, மொட்டை மாடியில ஒரு சின்ன பகுதி போதும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் சில கீரை வகைகளை பயிரிட்டுக்கலாம்! இது, இயற்கை விவசாயங்கிறதால மண் தொட்டிதான் நல்லது.
செம்மண், ஆற்று மண், சாணம், தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை இதையெல்லாம் தொட்டியில சரிவிகிதத்துல கலந்து, அதுல செடி வைக்கணும்.
தேங்காய் நாரும், கரும்பு சக்கையும் அதிகப்படியான நீரை உறிஞ்சு வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா வெளியிடுற திறன் கொண்டதுங்கிறதால, நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி இதை பயன்படுத்திக்கணும்.

பராமரிப்பு
தண்ணீர்ல சாணம் கலந்து மூணு நாட்கள் ஊற வைச்ச கரைசலை, ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்கள்லேயும்; இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காய விழுது மற்றும் 10 மி.லி., வேப்பெண்ணெய் கலந்த ஒரு லிட்டர் தண்ணியை சீரான இடைவெளிகள்ல இரண்டாவது, நான்காவது வாரங்கள்லேயும் செடிக்கு ஊத்தணும். அப்போ தான், செடி செழிப்பா வளரும். பருப்பு, காய்கறிகள் கழுவுற தண்ணீரை கூட ஊத்தலாம். ஆனா, கிருமிநாசினியான மஞ்சள் கலந்து பயன்படுத்துறது நல்லது! சமையலறை கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளோடு, சாணக் கரைசலை சேர்த்து மட்க வைச்சு இயற்கை உரம் தயாரிச்சு பயன்படுத்தலாம்.
அப்புறம், செடிகள்ல எறும்புகள் ஏறாம பார்த்துக்கணும். ஏன்னா, அதுதான் மற்ற பூச்சிகளுக்கு வழிகாட்டும். அதேமாதிரி, மாடியில திண்ணை மாதிரி அமைச்சு, அதுமேலே தொட்டியை வைக்கிறது கட்டடத்தோட ஆரோக்கியத்துக்கு நல்லது!

தண்ணீர் தண்ணீர்
சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் தண்ணீர் ஊத்துறது நல்லது. அதேநேரம், தொட்டியில தண்ணீர் தேங்காம பார்த்துக்கணும். 5 கிராம் பெருங்காயத்தை மண்ணுக்குள்ளே புதைக்கிறது, பூக்கும் செடிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.

ஆதாயம்!
விலைவாசியோட ஏற்ற இறக்கம், ரசாயன உரம் பத்தின கவலையில்லாம, நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி பண்ணிக்கலாம். இந்த முயற்சியோட வெற்றி, மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த சொல்லும். தோட்டக்கலை நிபுணர்கள்கிட்டே ஆலோசனை கேட்கச் சொல்லும். தோட்டம் பெருசாகும். விளைச்சல் கூடும். நம்ம தேவைக்கு போக மீதமிருக்கிறதை அக்கம்பக்கத்துல விற்பனை பண்ணத் தூண்டும். விளைச்சல் கூட கூட, சில்லரை அங்காடிகளுக்கும் காய்கறிகளை விற்கச் சொல்லும்!

எல்லாம் சரி, இந்த விதைக்கும், செடிக்கும் எங்கே போறதுன்னு கேட்குறீங்களா? நிச்சயம் உங்க வீட்டு பக்கத்துல நர்சரி கார்டன் இருக்கும். அங்கே எல்லாம் கிடைக்கும்.

Related

விவசாயக்குறிப்புக்கள் 1600432536266765550

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item