முழங்கை, கழுத்து, அக்குள் பகுதிகளில் உண்டான கருமையை இது போக்கும்!

பாவாடை அணியும் பகுதியின் கருமை, கழுத்தின் பின்பகுதி கருமை, அக்குள் கருமை, பிரேஸியர் லைன்… இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்...

பாவாடை அணியும் பகுதியின் கருமை, கழுத்தின் பின்பகுதி கருமை, அக்குள் கருமை, பிரேஸியர் லைன்… இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

இடுப்பின் கருமை :

புடவையோ, சுடிதாரோ இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். அதைப் போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 5 – 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் கொடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.
அடுத்ததாக, இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் அதைக் கழுவி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்யும்போது கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

பின் கழுத்தின் கருமை :

ஒரு ஸ்பூன் தவிடு எடுத்து, ஈரக்கையினால் அதைத் தொட்டு, தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க… இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு, பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் `பேக்’ போட்டு, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால், கருமை காணாமல் போவதுடன் சருமமும் மிருதுவாகும்.

அக்குள் பகுதியின் கருமை :

அக்குள் பகுதிக்குத் தேவையான காற்று கிடைக்காததால் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க, வாரம் இருமுறை ஏதாவது எண்ணெயைக் கொண்டு அக்குளுக்கு மசாஜ் கொடுத்து, மாதுளம்பழத்தின் கொட்டைகளை உலர்த்தி செய்யப்பட்ட பவுடர் ஒரு ஸ்பூனுடன் தண்ணீர் சேர்த்துக் குழைத்து, அதனுடன் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கலந்து மசாஜ் கொடுக்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் தேனுடன், அரை மூடி எலுமிச்சையின் சாறு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் கழுவவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லரில் `பிளீச்’சும் செய்துகொள்ளலாம்.

பிரேஸியர் லைன் :

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

 * அரிசி மாவு கால் டீஸ்பூன், தோலுடன் சேர்த்து அரைத்த பாதாம் தூள் கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு 5 துளிகள், தயிர் கால் டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைக்கவும். வாரம் 2 முறை, இதை ஸ்க்ரப் போல சருமத்தில் கருமை இருக்கிற இடங்களில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவவும். முழங்கை, கழுத்து, அக்குள் பகுதிகளில் உண்டான கருமையை இது போக்கும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6076507281737525164

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item