அழகு, ஆரோக்கியம் இரண்டுக்குமே கற்றாழை!

அ ழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்... ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய மூலிகைப் பட்டியலில், கற்றாழைக்கும் இடம் உண்டு. கி...

ழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்... ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய மூலிகைப் பட்டியலில், கற்றாழைக்கும் இடம் உண்டு. கிராமத்து வரப்போரங்களிலும், காய்ந்த, வறட்சியான நிலத்திலும் சர்வ சாதாரணமாகக் காட்சியளிக்கும் கற்றாழை, நம் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருகிறது. அதன் நன்மைகளையும் பலன்களையும் பட்டியலிடலாமா?

சாப்பிட்டால்...


200 கிராம் கற்றாழையைத் தோல் சீவி, ஏழு முறை நீரில் நன்றாக அலசவும். பிறகு, அதை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைக்கவும். அதனுடன் 200 கிராம் பனைவெல்லம், 15 கிராம் பூண்டு விழுது, 25 கிராம் வறுத்த வெந்தயப் பொடி சேர்த்து, அல்வாபோல கிண்டி எடுக்கவும். இந்த லேகியத்தை ஆறு மாதங்களுக்கு, காலை, மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவர மாதவிலக்கின்போது அதிக வயிற்றுவலி, பி.சி.ஓ.டி, சீரற்ற மாதவிலக்கு, ஆரம்பகால மாதவிலக்குப்  பிரச்னைகள், கர்ப்பப்பையில் கட்டி போன்ற அனைத்தும் சரியாகும்.

கற்றாழையை நன்றாகக் கழுவி, தொடர்ந்து சாப்பிட்டுவர, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறைந்து, படிப்படியாகச் சரியாகும்.

உடல் உஷ்ணம் இருப்பவர்களும், கற்றாழை லேகியத்தைச் சாப்பிடலாம். குளிர்ச்சித் தன்மையுள்ள உடல்வாகு கொண்டவர்கள், ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

மூலம் இருப்பவர்களுக்கும், மலத்துடன் ரத்தம் வெளியேறும் பிரச்னை இருப்பவர்களுக்கும் கற்றாழை மிக நல்லது.

வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து, வயிற்றின் இயக்கத்தைச் சீராக்க உதவும். இது நச்சுநீக்கியாகவும் செயல்படும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

உடலில் பூசினால்...


கற்றாழையைத் தோல் சீவி நன்கு கழுவி, அதன் சதைப்பகுதியை மஞ்சள்தூளில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் லேசாக சூடு செய்ய வேண்டும். சூடு ஆறிய பிறகு, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டலாம்.

ஆரம்பகட்டத்தில் உள்ள கட்டிகளாக இருந்தால், உடனே அமுங்கிவிடும். கொஞ்சம் பெரிய கட்டிகள் என்றால், சீக்கிரம் பழுத்து,  உடைவதற்கும் உதவும்.

சருமத்தில் வரக்கூடிய சூட்டுக்கட்டிகளை நீக்கும். பெண்களுக்கு அந்தரங்க உறுப்புகளில் வரக்கூடிய சிறு சிறு கட்டிகளை `ஃபாலிக்குலைட்டிஸ்' (Folliculitis) என்பர். இவற்றைக் குணப்படுத்தும் சக்தி கற்றாழைக்கு உண்டு.

சிறு தீக்காயங்கள் ஏற்பட்டால், அந்தக் காயங்களை நன்றாகத் தண்ணீரில் காட்டிய பிறகு, கற்றாழையைப் பூசி வர, எரிச்சல் நீங்கும். காயமும் ஆறும்.

Related

மூலிகைகள் கீரைகள் 8894152248817081079

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item