செல்லக் குழந்தைகளுக்குச் செல்வம் சேர்க்க, சிறப்பான முதலீட்டுத் திட்டங்கள்!

ந ல்லா படிக்க வைக்கணும்... நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும்... ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றிய அடிப்படைக் கனவு இ...ல்லா படிக்க வைக்கணும்... நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும்... ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றிய அடிப்படைக் கனவு இதுவாகத்தான் இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இத்தகைய எதிர்காலத் தேவைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே திட்டமிட்டு முதலீடு செய்தால், எதிர்காலத்தில் சிரமம் இல்லாமல் சமாளிக்கலாம். உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு எப்படி நிதித் திட்டமிடுவது என்பது குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கர் சித்திக் விளக்கிச் சொன்னார்.     

‘‘பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும்  எமர்ஜென்சி ஃபண்ட் அவசியம் வேண்டும். அதற்குமுன், வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் கட்டாயம் இருக்க வேண்டும். இதன்பிறகே  எதிர்காலத் திட்டமிடலுக்குச் செல்ல வேண்டும்.

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு முதலீடு செய்யும்போது, முதலில் கல்வி, அடுத்து, தொழில் தொடங்குவதற்கான தேவை, அதற்கு அடுத்து, திருமணம் என்ற வகையில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

   பள்ளிக் கட்டணத்துக்கான முதலீடு

தற்போதுள்ள நிலையில், பள்ளிக் கட்டணமாக ஆண்டுக்கு 30,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாய் தேவைப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் தேவைப்படும் என்பதால், எமர்ஜென்சி தொகையைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. இதற்கு உங்களுக்குக் கிடைக்கும் போனஸ் போன்ற சிறப்பு வருமானத்தை எடுத்துத் தனியே  வைத்துக்கொள்ள வேண்டும்.   

கல்லூரியில் படிப்பதற்குத்தான் கல்விக் கடன்தான் எளிதாகக் கிடைக்கிறதே, எதற்காக இப்போது குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்குப் பணம் சேர்க்க வேண்டும் எனச் சில பெற்றோர்கள் நினைக்கலாம். ஆனால், குழந்தை படித்துமுடித்து, வேலைக்குச் சென்றதும் முதல் சம்பளமே கடனைத் திரும்பிச் செலுத்துவதற்குத்தான் செல்லும்.  ஆகையால், கடன் இல்லாத வாழ்க்கையை உங்கள் குழந்தைக்கு நீங்கள் தர விரும்பினால், கல்விக் கடன் வாங்க மாட்டேன் என்ற கொள்கையோடு இருக்க வேண்டும்.

சில பெற்றோர், ‘என் பிள்ளை இப்போது நன்றாகப் படிக்கிறான். ஆகையால் ப்ளஸ் டூ- வில் நல்ல மதிப்பெண் எடுப்பான். ஆகையால், கல்லூரிப் படிப்புக்கு அதிகம் செலவாகாது. எனவே, நிறையப் பணம் சேர்க்கத் தேவை யில்லை’ என்று நினைக்கிறார்கள். ஆனால், தற்போது எல்லா மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு மார்க் எடுக்கிறார்கள். ஆகையால், தற்போது நன்றாகப் படிக்கிறான், எதிர்காலத்தில் நன்றாகப் படித்து மெரிட்டில் சீட் வாங்கிவிடுவான்  என்கிற எண்ணத்தில் கல்விச் செலவுக்காக முதலீடு செய்யாமல் இருந்துவிட வேண்டாம். ஒருவேளை மெரிட்டில் வந்து அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால், நீங்கள் திட்டமிட்டுச் சேமித்துவைத்த பணத்தை இதர விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுபோல, உங்கள் குழந்தைகளின் திருமணம், தொழில் தொடங்குவதற்கான முதலீட்டுத் தொகையையும் திட்டமிட்டுச் சேர்க்கலாம்.

   எதில் முதலீடு செய்வது?

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு எதில் முதலீடு செய்வது என்ற கேள்வி வருகிறது. இதனை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வரிக்குப் பிந்தைய நிலையில், உங்களுக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். அதாவது, நிகர வருமானம் 6 சதவிகிதமே கிடைக்கும்.

ஒழுங்கு முறைப்படுத்தப்படாத சேமிப்பான சீட்டில் பணம் போட் டாலும் அதிகபட்சம் பணவீக்க விகித அளவுக்கே வருமானம் கிடைக்கும். அதாவது, ரூ.10 லட்சம் வேண்டும் என்றால், நாமே கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பது போல்தான். எனவே, நீண்டகாலத் தேவைக்கு இதைத் தேர்வுசெய்வது கூடாது.

  எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் கூடாது

பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்வதுதான். இன்ஷூரன்ஸையும், முதலீட்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம். நம்மவர்கள் எடுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் பாரம்பர்ய திட்டங்கள்தான். இவை குறைந்த வருமானத்தையே தரும்.

இன்ஷூரன்ஸில் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், கல்வித் திட்டம் என்றெல்லாம் வைத்திருப்பார்கள். இந்தத் திட்டங்கள் மூலம் நாம் பணம் சேர்த்தால், இறுதியில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்று பார்த்தால், கடன் சார்ந்த திட்டங்களைவிட, குறைந்த அளவு வருமானத்தையே தரும். இவற்றில் சிறப்பாகச் செயல்படும் திட்டங்கள்கூட மிகக் குறைந்த வருமானத்தையே தந்து வருகின்றன. இந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தால்,  உங்கள் எதிர்கால நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.

   பெயருக்கு முக்கியத்துவம் தராதீர்கள்


இதைப்போலவே, வங்கிகளிலும் குழந்தைகளின் கல்வி, திருமணம் எனப் பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். இவற்றாலும் உங்களுக்கான இலக்கை அடைய முடியாது. குழந்தை என்ற பெயர் இருப்பதால், அவை உங்களைக் கவர்ந்து இழுத்துவிடும். எனவே, திட்டங்களின் பெயர்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட, அந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கவனியுங்கள்.

   யூலிப்புக்கு நோ

யூலிப் திட்டங்கள் தற்போது நிர்வாகக் கட்டணங்களைக் குறைத்திருந்தாலும், வேறு பெயரில் கட்டணங்களை வசூலிக்கின்றன. உங்களுடைய  யூனிட்கள்  இந்தக் கட்டணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும். ஆகையால், அந்தத் திட்டங்களும் உகந்தவையாக இருக்காது.

   காலி மனை காப்பாற்றுமா?   

இப்போது நிறைய பேர் காலி மனையிலும், வீட்டுமனை மாதந்திரத் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி முதலீடு செய்வது சில நேரங்களில் அவசரத்துக்கு உதவாமல் போய் விடும். மதிப்புக் குறைந்துவிடும். ஆகையால், இதனை உங்களுடைய நிதித் திட்டமிடலுக்குக் கொண்டுவர வேண்டாம்.

   எதில் முதலீடு செய்யலாம்?

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் (பத்து முதல் பன்னிரண்டு வருடத்தில்) சிறந்த திட்டங்கள் என்றால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான். இவற்றிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்றாலும், நீண்டகால அடிப்படையில் 10-12% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எந்த வருமான வரியும் இல்லை என்பது சிறப்பு.
   
உங்களுக்கு ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த அனுபவம் இல்லையெனில், டைவர்சிஃபைடு ஃபண்டிலும், இண்டெக்ஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்வதை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் வகையில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது நல்ல வருமானத்துக்கு வழி வகுக்கும்.
   குழந்தைகளுக்கானத் திட்டங்கள்

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் குழந்தைகள் சார்ந்த திட்டங் களையும் வழங்கி வருகின்றன. இந்தத் திட்டங்கள் நல்ல வருமானத்தைத் தருகின்றன. இவற்றிலும் முதலீடு செய்யலாம்.

இவற்றில் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பணம் எடுக்க முடியாது. உதாரணமாக, 18 வருடங்கள் வரை என்றால், 18  வருடங்களுக்குப் பின்பே பணம்  எடுக்க முடியும். இதில் பங்கு சார்ந்த திட்டங்களும், கடன் சார்ந்த திட்டங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தளவுக்கு ரிஸ்க்  எடுக்கிறீர்கள் என்கிற அடிப்படையில் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். 70% பங்கிலும், 30% கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு இருக்கும் வகையில் அமைந்துள்ள திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். 

   குழந்தைகளின் பெயரிலும் தொடங்கலாம்   


இந்தத் திட்டங்களை குழந்தை களின் பெயரில் தொடங்கலாம். இப்படி ஆரம்பிக்கும்போது, ‘அண்டர் கார்டியன்ஷிப்’ கணக்கின் கீழ் தொடங்குவது நல்லது.

இந்தக் கணக்கில் 18 வருடங்கள் பூர்த்தி அடைந்தவுடன் பணம் கிடைக்கும் வகையில் அமைத்து இருக்கிறார்கள். இவ்வாறு குழந்தைகளின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கும்போது, ‘இது என் சேமிப்புக் கணக்கு’ என்று சொல்லிக்  குழந்தைகள்  பெருமிதப் படுவார்கள்.  குழந்தைகளின் ஒப்புதல் இல்லாமல் தந்தையும், தாயும் பணத்தை எடுக்க முடியாது. குழந்தைகளும் பெற்றோர்களின் அனுமதியில்லாமல் பணம் எடுக்க முடியாது.

   வெளிநாட்டில் படிக்கவைக்க...   

குழந்தைகளுக்கென்று உள்ள திட்டங்களில் சிலவற்றில் எதிர்பாராத விதமாக பெற்றோர்கள் காலமானாலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கும் வகையில் இருக்கின்றன. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க  வைக்க நினைப்பார்கள். அப்படி நினைத்தால், எந்த நாட்டில் படிக்கவைக்கப் போகிறார்கள் என்பதை முடிவுசெய்து, அந்த நாட்டின் கரன்சி மதிப்பிலும் அல்லது இதற்கென்று உள்ள சேமிப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். என்ஆர்ஐ-யாக இருந்தால், அவர் உள்ள நாட்டிலேயே சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.

   தொகையை உயர்த்துங்கள்   

ஒரே அளவு தொகையைத் தொடர்ந்து சேமிக்காமல், ஒவ்வோர் ஆண்டும் சேமிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும். இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000   சேமிப்பதாக இருந்தால், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 என்ற வகையில் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

சில சமயம், எதிர்பாராத விதமாக அதிகத் தொகை கிடைத்தால், அதனையும் மியூச்சுவல் ஃபண்டில் டாப் அப் செய்யும் வசதியைப் பயன்படுத்தி முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

Related

ஃபண்ட் முதலீடுகள் 574697718645513635

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item