புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம் !

பாரம்பர்யம் போற்றும் மருத்துவ ஆய்வு மையம்! ‘ஆ ட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற...

பாரம்பர்யம் போற்றும் மருத்துவ ஆய்வு மையம்!
‘ஆட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி இது. ஆம்... பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குடும்ப அட்டையில் இடம்பெறாத உறுப்பினர்களாகத்தான் இருந்தன, கால்நடைகள். அவற்றை மிகவும் நேசித்து வளர்த்த விவசாயிகள், அவற்றுக்கான பாரம்பர்ய மூலிகை வைத்திய முறைகளையும் அறிந்து வைத்திருந்தனர். அஞ்சறைப் பெட்டியில் உள்ள சமையல் பொருட்கள், வரப்போரம் முளைத்துக்கிடக்கும் செடிகளைக் கொண்டே கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து விடுவார்கள்.

பசுமைப்புரட்சியின் விளைவாக ரசாயனங்களும் எந்திரங்களும் புகுந்ததால் கால்நடைகள் அழிந்து வருவதோடு, அவற்றுக்கான பாரம்பர்ய வைத்திய முறைகளும் மறக்கடிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், பாரம்பர்ய மூலிகை மருத்துவத்துக்குப் புத்துயிர் கொடுத்து... கடந்த 15 ஆண்டுகளாக, அம்மருத்துவ முறை மூலமாக பல்லாயிரக்கணக்கான கால்நடைகளைக் காப்பாற்றி வருகிறது, தஞ்சாவூரில் இயங்கும் ‘பாரம்பர்ய மூலிகை மருத்துவ ஆய்வு மையம்’. இம்மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருவதால், அறிவியல் பூர்வமாகவும், சட்டபூர்வமான அங்கீகாரத்தோடும் காலத்துக்கு ஏற்ற நவீன பாதையில் நடைபோடுகிறது, பாரம்பர்ய மூலிகை மருத்துவம்.  பொங்கல் சிறப்பிதழுக்காக இம்மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் புண்ணியமூர்த்தியைச் சந்தித்தோம். கால்நடை மூலிகை மருத்துவத்தில் தனது பயணம் குறித்துச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தார், புண்ணியமூர்த்தி.

“எதிர் விளைவுகள் இல்லாத, செலவில்லாத எளிமையான மருத்துவ முறை இது. தலைமுறை தலைமுறையாகச் செவி வழிச் செய்திகளாகக் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது, நமது பாரம்பர்ய மூலிகை மருத்துவம். உலகின் அனைத்து உயிர்களின் நலன் காக்கக்கூடியது, தமிழர்களின் பாரம்பர்ய மூலிகை மருத்துவம்.

‘தழை பாரு,

வேர் பாரு- மிஞ்சினகால்

மெள்ள மெள்ள

பர்ப்பம் செந்தூரம் பாரு’ என்ற சித்தர் வாக்கின் அடிப்படையில் நம் முன்னோர் மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தங்கள் அருகாமையில் உள்ள இலை தழைகளை ஆய்ந்தறிந்து அவற்றின் பயன்பாட்டை உணர்ந்து, பல்வேறு நோய்களுக்கு அவற்றைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மருத்துவம் பார்த்திருக்கிறார்கள்.

இலை தழைகளைப் பயன்படுத்துவது முதல்கட்ட முதலுதவி சிகிச்சை.   அதில்  குணமடையவில்லையென்றால், நோயின் தீவிரத்தை உணர்ந்து அடுத்தக்கட்ட சிகிச்சையாக மூலிகை மற்றும் பல்வேறு கூட்டுப்பொருட்கள் சேர்த்துப் புடம் போடப்பட்ட பர்ப்பம், செந்தூரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். புடம் போடுவதிலும் பல்வேறு கூறுகள், நுட்பங்கள் இருந்திருக்கின்றன. விறகு வகைகள், துல்லியமான அளவுகள், சாண வறட்டிகளின் எண்ணிக்கை, நேரம் என்று பல வரையறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன” என்ற புண்ணியமூர்த்தி, தான் மூலிகை மருத்துவத்துக்குத் திரும்பியது குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

பாதையை மாற்றிய ஆன்டிபயாட்டிக்!

“1997-ம் ஆண்டு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அரசின் சார்பில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது மருந்தியல் துறை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான், கால்நடைகளுக்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகளில் உள்ள குறைகளைத் தெரிந்துகொண்டேன். அதன்பிறகுதான் அதற்கான மாற்று மருந்து குறித்து யோசிக்க ஆரம்பித்தேன்.

அடித்துச் சொன்ன நாட்டு வைத்தியர்!

அதுகுறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் துவங்கியதில், நமது பாரம்பர்ய மருத்துவ முறை எனக்குப் புலப்பட்டு வழிகாட்டத் தொடங்கியது. அந்தச் சமயத்தில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை திட்டம் ஒன்றின் மூலமாக மதுரையில் நாட்டுப்புற மருத்துவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்கூட்டத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த நாட்டுப்புற மருத்துவர் ஒருவர் ‘ஒரே வேளை மருந்தில் பல நோய்களைக் குணப்படுத்த முடியும்’ எனத் திட்டவட்டமாகக் கூறினார். அந்த நொடியில் இருந்தே பாரம்பர்ய மருத்துவம் குறித்த தேடலிலும் ஆய்விலும் தீவிரமானேன். தொடர்ந்து நாட்டுப்புற மருத்துவர்களைத் தேடிச் சென்று சந்தித்தேன். அப்போது எனக்குக் கிடைத்த தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி ஆவணப்படுத்த தொடங்கினேன்.

அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது இம்மையம். தமிழக அரசின் பகுதி-2 என்ற திட்டத்தின்படியும் மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத் திட்டத்தின்படியும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இந்த மரபுசார் மூலிகை மருத்துவ ஆய்வு மையத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. இதனால் பலன் பெற்று வரும் விவசாயிகள் ஏராளம். முதலுதவி மூலிகை மருத்துவம் மூலமாக, நோய்களின் தீவிரத்தை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடிகிறது. நள்ளிரவு நேரங்களில்கூட விவசாயிகள், பண்ணையாளர்கள் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ ஆலோசனைப் பெற்று பலன் அடைகிறார்கள்.

மாநிலம் கடந்த சேவை!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எங்களுடைய மூலிகை மருத்துவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் கால்நடை மருத்துவர்கள் எங்களது மையத்தில் மூலிகை மருத்துவப் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகமும், பெங்களூருவில் உள்ள மரபுசார் மருத்துவ முறையின் மறுமலர்ச்சி பேரவையும் இணைந்து கால்நடை மருத்துவர்கள் மட்டும் பயிலக்கூடிய வகையில், ஓர் ஆண்டுப் பாரம்பர்ய கால்நடை மருத்துவப் பட்டயப்படிப்பினை இம்மையத்தில் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 40 கால்நடை மருத்துவர்கள் இப்படிப்பை பயின்றுள்ளார்கள்.

இதோடு, குஜராத் மாநிலம் டாபர்கான் மாவட்டத்தில் உள்ள தேசியப் பால் வள நிறுவனம் மூலமாக, அங்குள்ள மாடுகளுக்கு எங்களது மையத்தின் மூலிகை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது” என்ற புண்ணியமூர்த்தி நிறைவாக, “மடிநோய், வயிறு உப்புசம், அறை தள்ளுதல், ஜீரணக்கோளாறுகள், கழிச்சல், கோமாரி நோய், குடற்புழு நீக்கம், காயங்கள்... எனக் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய பலதரப்பட்ட பாதிப்புகளையும் மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அரசுத்துறை அதிகாரிகள், பாரம்பர்ய மருத்துவர்கள், நாங்கள் சொல்லும் மூலிகை மருத்துவத்தை நம்பிப் பயன்படுத்தக்கூடிய விவசாயிகள், பண்ணையாளர்கள் என அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்களது மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையம் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறது” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு, டாக்டர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833

தாத்தா சொல்லைத் தட்டாதே!

“நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, ஹாக்கி, கால்பந்து, ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்பேன். அதனால், பி.யு.சியில் வங்கி வேலைக்கு உபயோகப்படும் குரூப்பைத் தேர்ந்தெடுத்து படித்து... விளையாட்டு வீரர் என்ற சிறப்புத் தகுதியில் வங்கிப்பணியில் சேர்ந்துவிடலாம் என்றுதான் தீர்மானித்திருந்தேன். ஆனால், கல்வி கற்காத என் தாத்தா, ‘எந்தப் படிப்புனாலும் விவசாயிகளுக்கு உபயோகப்படுற படிப்பைப் படி’ என்று சொன்னார். அதனால்தான் கால்நடை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இன்று விவசாயத்துக்குச் சேவையாற்ற முடிகிறது. எனக்கும் இவ்வளவு பெருமை கிடைத்திருக்கிறது” என நெகிழ்கிறார், புண்ணியமூர்த்தி.

தொலைபேசியிலும் மருத்துவ ஆலோசனை!

மூலிகை வைத்தியம் செய்ய ஆரம்பித்த பிறகு தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் குறித்துப் பேசிய புண்ணியமூர்த்தி, “ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் தொலைபேசியில் பேசிய ஒரு விவசாயி, ‘மாடு கன்று ஈனும் தருவாயில் கருப்பை வெளியில் வந்துவிட்டது’ என்று சொன்னார். ‘சோற்றுக்கற்றாழை சோற்றை எடுத்து நன்கு கழுவி, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து... சூடு ஆறியதும் அந்தத் தண்ணீரை கருப்பை மீது தெளியுங்கள்’ என்று மருத்துவம் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்துப் பேசிய அந்த விவசாயி, ‘அந்தத் தண்ணீரைத் தெளித்ததும், கருப்பை உள்ளே போய்விட்டது. தாய்ப்பசுவும் கன்றும் ஆரோக்கியமாக உள்ளன’ என்று சந்தோஷமாகச் சொன்னார். அடுத்த சில நாட்களில் அப்பசுவுக்கு மடிநோய் வந்துவிட அதற்கும் மருத்துவம் சொன்னேன். அதுவொரு ஏழை விவசாயியின் பசு. அவருக்கு அதுதான் வாழ்வாதாரம். இப்படிப் பலரின் வாழ்வாதாரமாக இருந்த கால்நடைகள், மூலிகை மருத்துவத்தால் காப்பாற்றப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை அருகே உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி சென்ற ஒருவர், என்னைத் தொலைபேசியில் அழைத்து, ஒரு குரங்கு நச்சுப்பொருளைச் சாப்பிட்டு இறக்கும் தருவாயில் இருப்பதாகக் கவலையுடன் தெரிவித்தார். வெற்றிலை, மிளகு, உப்பு மூன்றையும் அரைத்துக் காதில் இரண்டு சொட்டு விட சொன்னேன். அடுத்த கால் மணிநேரத்தில் அந்தக் குரங்கு எழுந்து ஓடி விட்டது.

இதேபோல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஒரு மயிலுக்குக் காலில் அடிபட்டிருப்பதாகத் தொலைபேசியில் சொன்னார், ஒருவர். அவருக்கும் வைத்தியம் சொன்னேன். சில நாட்களில் அந்த மயில் குணமாகிவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோமாரி நோய் கிளர்ச்சியால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மாடுகள் பாதிக்கப்பட்டபோது... தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தீவிர முயற்சியால் எங்கள் மையத்தின் மூலிகை மருத்துவம் பரவலாகக் கொண்டு சேர்க்கப்பட்டது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாடுகள் காப்பாற்றப்பட்டன” என்றார்.

Related

விவசாயக்குறிப்புக்கள் 2311406293899915436

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item