குழந்தையின்மை குறை போக்கும் முருங்கை!

நாட்டு வைத்தியம்/ எம்.மரிய பெல்சின் மு ருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முர...

நாட்டு வைத்தியம்/எம்.மரிய பெல்சின்
முருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். மேலும் கண் கோளாறுகள், பித்தம் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். அதுமட்டுமின்றி நமது உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை வராமல் தடுக்கும் வல்லமை படைத்தது.
குழந்தை பெற்ற தாய்மார்கள்... வாயுவை உண்டுபண்ணக்கூடிய உணவுகளையோ, எளிதில் ஜீரணமாகாத உணவுகளையோ உண்ணும் போது பால் குடிக்கும் குழந்தைகளையும் அது பாதிக்க வாய்ப்புள்ளது. அதாவது, ஜீரண சக்தி குறைந்த - வாய்வு நிறைந்த பாலை அருந்தும் குழந்தைக்கு வயிறு உப்புசம், கல் போன்ற வீக்கம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது, அப்படிப்பட்ட நேரங்களில் கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை எடுத்து கசக்கி சாறு எடுத்து, வடிகட்டி அதே அளவு கல் உப்பு சேர்த்துக் கரைத்து வெந்நீர் சேர்த்து பாலாடை அளவு குழந்தைக்கு குடிக்க கொடுக்க வேண்டும். குழந்தைக்குப் பிரச்னை அதிகமாக இருந்தால், முருங்கைக்கீரை சாற்றுடன் வசம்புத்தூளை சேர்த்துக் கலக்கி குழந்தையின் தொப்புளைச்சுற்றி பற்று போடுவதன்மூலமும் நிவாரணம் பெறலாம்.

சிறுநீர் கழிக்க முடியாமல் நீர்க்கட்டினால் பாதிப்புக்குள்ளாகும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருமே முருங்கைக்கீரையுடன் வெள்ளரி விதை சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து தொப்புளில் பற்று போட்டால் நீர்க்கட்டு உடைந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் பகல் வேளைகளில் முருங்கைக்கீரையை பொரியலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் மறுநாள் முழுநிவாரணம் பெறலாம். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் முருங்கை ஈர்க்குகளை (இலையை ஒட்டியிருக்கும் காம்புகள்) ரசம் அல்லது சூப் வைத்து சாப்பிட்டாலும் மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும், பொதுவாக வாரம் ஒருநாள் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை என சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம்.

குழந்தையின்மை, ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்து உண்பதோடு முருங்கைக்காயின் இளம்பிஞ்சுகளை பாலில் வேகவைத்து சாப்பிடுவதன்மூலம் குணம் பெறலாம். முருங்கைப்பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது மற்றும் முருங்கைப்பூ பொரியல் சாப்பிடுவதன்மூலமும் மலட்டுத்தன்மையில் இருந்து நிவாரணம் பெறலாம்

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8697388957459511682

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item