மலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு!

வைத்தியம் ப ப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடு...

வைத்தியம்



ப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால்  பலன் கிடைக்கும். தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழம் சாப்பிடுவது நல்லது.

பப்பாளி குடல் நோய்களை குணமாக்குவதோடு, மலச்சிக்கல், மூல நோய் மற்றும் ரத்த ஒழுக்கு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடியது. காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு மலச்சிக்கல் பிரச்னையே வராமல் பார்த்துக்கொள்ளும்.

பப்பாளிப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளிப்பழம் கொடுத்து வந்தால் அவர்களது உடல்வளர்ச்சி  நன்றாக இருக்கும். கூடவே பல், எலும்பு  போன்றவை வலுப்பெறும். பிரசவமான பெண்கள் பப்பாளிக்காய் பொரியல், கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால், நன்றாக பால் சுரக்கும். இதே  பப்பாளிக்காயை சாப்பிடுவதன்மூலம் உடலில் தேவையற்ற சதைகள் குறையும்.

ஆக, பப்பாளிப்பழம் மருத்துவக்குணம் நிறைந்தது என்பது நமக்குத்தெரியும். பப்பாளி மரத்தின் இலையிலும் நிறைய மருத்துவக்குணங்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.

பப்பாளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் நீரையும், வெந்த இலையையும் நரம்புத்தளர்ச்சி, நரம்பு வலி உள்ள இடங்களில் ஊற்றி வந்தால் வெகுவிரைவில் குணமாகும். இதேபோல், பப்பாளி இலையை தீயில் வாட்டி நரம்புத்தளர்ச்சி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுப்பதாலும் நிவாரணம் பெறலாம். இலையை நசுக்கி வீக்கம், கட்டி உள்ள இடங்களில் கட்டி வர குணம் கிடைக்கும். இலை மட்டுமல்லாமல் இலைக்கொழுந்தையும் இதேபோல் அரைத்து பற்று போட... வீக்கம் குணமாவதோடு ஆறாத புண்கள் ஆறும்; குதிகால் வீக்கம் சரியாகும். பப்பாளி இலையை வேப்பெண்ணெய் விட்டு வதக்கி உடல்வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும்.

பப்பாளி இலைச்சாறு மலேரியா மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி இலையில் விட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கின்றன. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் தினமும் 4 முறை அருந்தி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

Related

நாட்டு வைத்தியம் 5326888265574984933

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item