இந்த messeage படிங்க உடம்பு சிலிர்க்கும்.!

இந்த msg படிங்க உடம்பு சிலிர்க்கும். டாக்டர் அஹ்மத் ஒரு புகழ்பெற்ற மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டிற்குப் ...

இந்த msg படிங்க உடம்பு சிலிர்க்கும்.
டாக்டர் அஹ்மத் ஒரு
புகழ்பெற்ற மருத்துவர்.
அவர் ஒரு தடவை ஒரு
முக்கியமான மருத்துவ
மாநாட்டிற்குப்
புறப்பட்டார். அது
இன்னொரு நகரத்தில்
நடக்கவிருந்தது.
மருத்துவ ஆய்விற்கான
விருது அந்த மாநாட்டில்
அவருக்கு வழங்கப்பட
விருந்தது.
அவர் மிக நீண்ட காலமாக
செய்த உழைப்பு
ஆய்வின் பயனாக
அந்த விருது அவருக்கு
வழங்கப்படவிருந்தது.
அதனால் அவர் மிகவும்
ஆர்வமாக அதைப் பெற
புறப்பட்டிருந்தார்.
விமானம் அவரையும்
சுமந்தவாறு
புறப்பட்டது. இரு மணி
நேரம் பறந்த விமானம்
திடீரென அருகில்
இருந்த விமான
நிலையத்தில்
தரையிறக்கப்ட்டது.
விமானத்தில் ஏற்பட்ட
கோளாறே
தரையிறக்கத்திற்கான
காரணம்.
அடுத்த 10 மணி
நேரத்திற்கு
விமானம் புறப்படும் வாய்ப்ப்பே இல்லை
என்ற நிலை. டாக்டர்
அஹ்மத்தை பதற்றம்
பற்றிக்கொண்டது.
உரிய நேரத்தில்
மாநாட்டை
சென்றடைவோமா
எனும் கவலையே அது.
ஒரு வாடகை காரை
எடுத்து கொண்டு,
ஊர் மக்களிடம்
விசாரித்துவிட்டு குறுக்கு
பாதையில் வேகமாக
பயணித்தார் டாக்டர்.
இப்போது மீண்டும் ஓர்
அதிர்ச்சி. கடுமையான மழை. பெரும் காற்று
கிட்டதட்ட ஒரு
புயலையொத்த நிலை.
டாக்டரின் ஆர்வம்
அதனை
பொருட்படுத்தாமல்
பயணிக்க ஆரம்பித்தார்.
வர வர நிலைமை மோசமாக மாறியது
வாகனத்தை
செலுத்துவதே மிகப்பெரிய
போராட்டமாக
மாறியது. 2 மணி
நேர கடினப்
பயணத்திற்கும் பின்னர்,
தான் வழி தவறி
விட்டது அவருக்கு
உறுதியானது.
பாலைவனச்
சாலையில், பயங்கர
புயல்
காற்றுக்கிடையே
நீண்ட பயணமிது.
அயர்வு, களைப்பு,
தாகம், பசி என சோர்ந்து
போனார் டாக்டர்.
சிறிது தூரத்தில் ஒரு
வீடு தெரிந்தது. காரை
நிறுத்தி அதன் கதவை
தட்டினார்.
ஒரு வயதான பெண்
கதவைத் திறந்தார்.
பெண்ணிடம் தான்
சிறிது இங்கு தங்கிச்
செல்லலாமா என்றார்.
டாக்டர்.
பெண் சிறிது
யோசித்து பின்னர்
நிலைமைகளை
புரிந்து கொண்டு சரி
என்றார்.
டாக்டர் வீட்டினுள்
நுழைந்தார்
.
பெண் ஏதாவது
சாப்பிட்டீர்களா என்றார்.
டாக்டர் இல்லை என்றார்.
தனது ரொட்டியை
டாக்டருக்கு
கொடுத்தார் பெண்.
அவருடன் பேசிய
போதுதான்
தெரிந்தது டாக்டர்
வழிதவறி வந்த விசயம்.
டாக்டரிற்கு இப்போது
பதற்றம் இரட்டிப்பானது.
மெழுகுவர்த்தியின்
மங்கலான
வெளிச்சத்தில் ஒரு
குழந்தை கட்டிலில்
படுத்திருந்தது. பார்த்த
மாத்திரத்திலேயே
அது நோயாளியான
குழந்தை என்பதை
டாக்டர் அறிந்து
கொண்டார்.
தொழுது
கொண்டடிருந்த பெண்,
தொழுகையை
முடித்ததும், அவரிடம்
மெல்ல பேச்சு
கொடுத்தார் அஹ்மத்.
அந்த பெண்ணின்
தொடரான தொழுகை,
பிரார்த்தனை,
இடைக்கிடை விசும்பி
அழுதது என்பன
அஹ்மதின் மனதை
பிசைந்தன.
அப்பெண்ணிடம் கவலைப்
படாதீர்கள் அல்லாஹ்
உங்கள் பிரச்சனைகளை
இலேசாக்குவான்
என்றார்.
பெண்ணும் “ஆம். நான்
அல்லாஹ்வையை
முழுமைாக
நம்பியுள்ளேன்”
என்றார். “அந்த
தொட்டிலில் கிடக்கும்
குழந்தை எனது பேரன்.
இதன் பெற்றோர்
அண்மையில் ஒரு
விபத்தில் இறந்து
விட்டனர்.
இந்த குழந்தைக்கு
அரிய வகை
புற்றுநோய் உள்ளது.
நான் போகாத
மருத்துவமனை
இல்லை. பார்க்காத
வைத்தியர்களும்
இல்லை. எல்லோரும்
கையை விரித்து
விட்டனர்.முடியாது
என்றனர்.
என் பேரனின்
பிரச்சனைக்கு
வைத்தியம் செய்ய ஒரே
ஒரு மருத்துவரால்
தான் முடியுமாம்.
அவரது பெயர் டாக்டர்
அஹ்மதாம். ஆனால் அவர்
இருக்குமிடம், நான்
இருக்குமிடத்தில்
இருந்து வெகுவெகு
தூரம். அவரை நான்
காண்பதற்கும் வாய்ப்பே
இல்லை. அவர் அவ்வளவு
பெரிய மருத்தவர்.
ஆதலால் நான்
அல்லாஹ்விடம் அல்லும்
பகலும் டாக்டர்
அஹ்மத்தை
சந்திப்பதற்கும், அவர் என்
பேரனிற்கு சிகிச்சை
அளிப்பதற்கும் ஒரு
வாய்ப்பை தருமாறு
மன்றாடிப்
பிரார்த்தனை
செய்கிறேன்” என்றார்
அந்த மூதாட்டி.
இதனைக் கேட்ட டாக்டர்
அஹ்மத் கண்களில்
தாரை தாரையாக
கண்ணீர் வழிந்தது.
சிலிர்த்துப் போனார்.
“அல்லாஹு அக்பர்” இந்த
வார்த்தைகளை அவர்
உதடுகளும், நாவும்
விடாமல்
முணுமுணுத்தன.
விமானத்தில் ஏற்பட்ட
கோளாறு, அதன்
தரையிறக்கம், பயங்கர
புயல், பாதை வழி
மாறியது, தீராத
பசி, தாகம்,
இவையெல்லாம் ஏன்
ஏற்பட்டன என்பது
டாக்டரிற்கு புரிந்து
போனது.
அவர. அடிக்கடி குழம்பும்
"களா கத்ரின்" ஒரு
சின்ன முடிச்சு
அவிழ்வது டாக்டருக்கு
புரிந்து போனது.
எல்லாமே புரிந்து
போனது. “நீங்கள் டாக்டர்
அஹ்மதை சந்திப்பதற்கு
அல்லாஹ் வழி
ஏற்படுத்தி தரவில்லை.
மாறாக டாக்டர்
அஹ்மதையே உங்கள்
காலடியில் கொண்டு
வந்து நிறுத்தி
விட்டான்.
நேரடியாகவே. ஆம்
நான் தான் அந்த டாக்டர்
அஹ்மத்” என்றார் நா
தளுதளுக்க. இதனை
கேட்ட அந்த முஸ்லிம்
மூதாட்டி
திடுக்கிட்டு போனாள்.
இப்போது அவர்
உதடுகளும், நாவும்
அதே வார்த்தையை
விடாமல்
முணுமுணுக்கின்றன
“அல்லாஹு அக்பர்” என.
அவள் முகத்தில்
ஆனந்தம். கண்களில்
துளி துளியாக
கண்ணீர் சுருங்கிய
அவள் முகத் தோளில்
பீலி போல்
வழிந்தோடியது.
டாக்டர்
பட்டம், மாநாடு, தேசிய
விருது, விஞ்ஞானம்,
அறிவியில், பணம்,
அதிகாரம், டாக்டர் அஹ்மத்
எனும் புகழ் எல்லாமே
அந்த ஏழை முஸ்லிமின்
பிரார்த்தனையின் முன்
நத்திங் என்பதை
இதயத்தின் ஒவ்வோரு
துடிப்பிலும்
உணர்ந்தார் டாக்டர்
அஹ்மத்.
சுபுஹானல்லாஹ்.
“(நபியே!) என்
அடியார்கள் என்னைப்
பற்றி உம்மிடம் கேட்டால்,
நிச்சயமாக நான்
சமீபமாகவே
இருக்கிறேன்.
பிரார்த்தனை
செய்பவரின்
பிரார்த்தனைகு அவர்
பிரார்தித்தால்
விடையளிக்கின்றேன்.
அவர்கள் என்னிடமே
(பிரார்தித்து)
கேட்கட்டும். என்னையே
நம்பட்டும். அப்போழுது
அவர்கள் நேர்வழியை
அடைவார்கள் என்று
கூறுவீராக”
அல்-குரான் : 2:186
நன்றி : கைபர் தளம

Related

இந்த நாள் இனிய நாள் 5570194434720378471

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item