ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்-8

அந்த சில வார்த்தைகள்! ‘‘இன்னிக்கு க்ளாஸ்ல சமிக்ஞ...

அந்த சில வார்த்தைகள்!

‘‘இன்னிக்கு க்ளாஸ்ல சமிக்ஞை வார்த்தைகள்... அதாவது, சிக்னல் வேர்ட்ஸ் ( signal words ) பத்தி தெரிஞ்சிக்குவோம். அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்’’ என்று ஆரம்பித்தார், உஷா மேம்.
‘‘டிராஃபிக் சிக்னலைத்தான் கேள்விப்பட்டிருக் கேன். இதென்ன ஆன்ட்டி புதுசா இருக்கு!’’ என்றாள் கோமதி. வித்யாவும் மிக உற்சாகமாக கவனிக்க, உஷா மேம் தொடர்ந்தார்...
‘‘இங்கிலீஷ்ல குறிப்பிட்ட சில வார்த்தைகளைப் போட்டாலே ‘இந்த வாக்கியம் இப்படித்தான் இருக்கும்’னு தெரிஞ்சிடும். அதனால மத்தவங்க என்ன பேச வராங்கனு உடனே புரிஞ்சிடும். அந்த வார்த்தைகள்தான் சமிக்ஞை வார்த்தைகள். சரி, போன க்ளாஸ்ல Present continuous tense -ஐ கத்துக்கிட்டோம் இல்லியா? அதன் தொடர்ச்சியா இப்ப சில வாக்கியங்களைப் பார்ப்போம்...’’ என்று போர்டில் எழுதினார் மேம்.
I am teaching now.
You are writing at present.
‘‘இந்த வாக்கியங்கள்ல now, at present ரெண்டும் சிக்னல் வார்த்தைகள். Present continuous tense க்கு இந்த வார்த்தைகளைப் போடணும்னு ரூல் இருக்கு. அதேமாதிரிதான் look, listen வார்த்தைகளும். அதுக்கெல்லாமும் verb + ing வரணும்!’’ என்றபடி இப்படி போர்டில் எழுதினார் மேம்...
Look! I’m showing this pen.
Listen! I’m telling you a story.

‘‘ஆன்ட்டி! போன க்ளாஸ்ல நீங்க குடுத்த ஹோம்வொர்க் ‘ The water level rises in the dam ’ சரியான வாக்கியம் தானே? வித்யா சொல்றா... rises க்கு பதிலா is rising தான் வரணும்னு’’ என்றாள் கோமதி.
‘‘ஆமா மேம்! is rising தான் வரும் இல்லியா? நீங்க கொடுத்த continuous tense க்கான லிஸ்ட்ல rise- ங்கிற வெர்ப் இருக்கு!’’ என்று வாதாடினாள் வித்யா.

‘‘நீர் மட்டம் ஒரே இடத்துல நிக்காது இல்லியா? அதனால rising னும் சொல்லலாம். The cost of living in Chennai is rising; The price of petrol is rising னு சொன்னா இஃபெக்டிவாதான் இருக்கும். அதேநேரம், நியூஸ் பேப்பர்ல தலைப்பா கொடுக்கணும்னா, Water level rises in Mettur னு கொடுக்கலாம். தப்பில்லை. சரி, இப்ப இந்த விவாதமே நம்ம அடுத்த டாபிக் ‘ Simple present tense ’க்கு நல்ல ஆரம்பமா அமைஞ்சிட்டது’’ என்றார் மேம்.
எப்போதும் present continuous tense, simple present tense ஆகியவற்றுக்கான வெர்ப்ஸை நன்கு அறிந்திருப்பது நல்லது. verb+ing க்கு வராத சில வெர்ப்ஸ் இங்கே...
See, hear, smell இவையெல்லாம் புலன்கள் ( senses ) சார்ந்த வெர்ப்ஸ். அந்தச் செயல்களை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணர முடியும். அதேமாதிரி want, love, hate, like எல்லாம் மனக்கிளர்ச்சி ( emotion ) சார்ந்த வெர்ப்ஸ். இவையும் அவரவர்களுக்கு தெரியும். இதேமாதிரி know , understand, think - எல்லாம் சிந்தித்தல் ( thinking ) சம்பந்தப்பட்ட வெர்ப்ஸ். இவற்றுக் கெல்லாம் verb+ing போட்டு எழுதக்கூடாது என்று ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். simple present தான் இவற்றுக்கு உகந்தவை. She is knowing your friend - தவறு. She knows your friend - சரி.
‘‘ஆன்ட்டி! simple present க்குக் கூட சிக்னல் வார்த்தைகள் இருக்கா?’’
‘‘இல்லாம பின்னே? எழுதிக்கோங்க...’’
மேம் சொன்ன லிஸ்ட்... always, every, often, normally, usually, sometimes, seldom, never
‘‘இந்த வேர்ட்ஸ்ல ஏதாவது ஒண்ணை உபயோகப்படுத்தி ஒரு உதாரண வாக்கியம் சொல்லுங்க...’’
‘‘ I often use my cell phone ’’ என்றாள் வித்யா.
‘‘இப்படி இல்லேன்னா நீ காலேஜ் பொண்ணே இல்ல’’ என்று கமெண்ட் அடித்த கோமதி, ‘‘ I sometimes watch T.V .’’ என்றாள்.
‘‘ஆஹா கோமு... நீ பொய் சொல்றதுக்கு அளவே இல்லியா’’ என்று கலாய்த்த மேம், ‘ You always sit before the idiot box !’னு தானே உன்னை பத்தின இமேஜ் இருக்கு!’’ என்றார் கண்சிமிட்டியபடி.
‘‘உங்ககிட்ட கத்துக்கிற நாள் முதலா டி.வி பாக்கறதைக் குறைச்சுட்டேன் ஆன்ட்டி... ஆமா... seldom னா என்ன அர்த்தம்?’’
‘‘ seldom -னா எப்போதாவது... rarely னு அர்த்தம். சில சமயம் நெவர்னு கூட அர்த்தம் வரும். அபூர்வமானு அர்த்தம் செஞ்சிக்கிட்டா நல்லது. I seldom go to theatre . சின்ன வயசுல போனதுதான்’’ என்று பேசியபடியே போர்டில் சில வாக்கியங்களை எழுதிப் போட்டார் மேம்.
1. Malini walks in the park every morning.
2. She often drinks tea in the afternoon
3. She never tells lies
‘‘இதெல்லாம் என்ன...’’ மேம் முடிக்கவில்லை. கோமதி, ‘‘சமிக்ஞை வார்த்தைகளைப் பார்த்தாலே தெரியுதே ஆன்ட்டி, Simple present னு...’’ என்றாள்.
‘‘சரி... அந்த சிக்னல் வார்த்தைகள் சொல்ல வர்றதென்ன?’’
வித்யா, கோமதி இருவரும் மவுனமாயிருந்தனர்.
‘‘ஒண்ணாவது, ரெண்டாவது வாக்கியங்கள் மாலினியோட தினசரி பழக்கங்கள் பத்திப் பேசுது. அதுல வர்ற actions... அதாவது நடக்கறது, குடிக்கறது எல்லாம் ‘ரிபீட்’ ஆகுது, ஒவ்வொரு நாளும். அப்படி ரிபீட் ஆற செயல்களை simple present -லதான் சொல்லணும். மூணாவது வாக்கியம் மாலினியோட குணத்தைச் சொல்லுது. அதுக்கும் simple present தான்...’’
‘‘மேம்! அப்படிப்பட்ட வாக்கியங்களை do வரிசை வெர்ப்லதான் சொல்லணும் இல்லியா?’’
‘‘டெஃபனட்லி... இப்ப நீங்க கத்துக்கிட்டதுக்கு ஒரு சின்ன டெஸ்ட்... நீங்க ரெண்டு பேரும் ஒருத்தொருக் கொருத்தர் அறிமுகமே இல்லாத, strangers மாதிரி பேசணும்... அது simple present ல இருக்கணும்’’ என்று hint கொடுத்தார் மேம்.
‘‘நாங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கணும்னு மொதல்ல டிஸ்கஸ் பண்ணிக்கிறோம்’’ என்று வித்யாவும், கோமதியும் தங்களுக்குள் ஐந்து நிமிடங்கள் விவாதித்துக் கொண்டனர். பிறகு பேசத் தொடங்கினர். ( V - வித்யா, G - கோமதி)
V: Hello! I’m Padma. Glad to meet you.
G: Hai! I’m Kala. What do you do?
V: I work in a bank.
G: Are you married?
V: No, I’m not. When do you get up daily?
G: I usually get up at 5.30.
V: Do you have your exercises then?
G: I sometimes do my exercise. Not daily.
V: What does your husband do?
G: He works as an engineer.
V: What magazines do you read?
G: I read women’s magazines.
V: Thank you for a nice chat.
G: You’re welcome.
‘‘வெரிகுட்... ‘கப்’னு பிடிச்சுக்கிட்டீங்க’’ என்ற மேம், திடீரெனக் கேட்டார்... ‘‘ஆமா... தமிழ்நாடே இப்ப ரொம்ப பரபரப்பா இருக்கு இல்லியா?’’
‘‘ஆமா ஆன்ட்டி... மே மாசம் தேர்தல் வருது.’’
‘‘தேர்தல் கமிஷன் முன் கூட்டியே தேதி ஃபிக்ஸ் பண்ணி அட்டவணை குடுத்துட்டாங்க இல்லியா... அத பேசறப்ப Simple present லதான் சொல்லணும்.’’
‘‘ Tamilnadu goes to polls on May 8 . சரியா மேம்?’’
‘‘வெரிகுட். நியூஸ் எல்லாம் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே. அதேமாதிரி, ரயில்வே டைம் டேபிளைக்கூட Simple Present ல தான் சொல்லணும்.
Brindavan Express leaves Chennai Central at 07.15 hrs.’’
‘‘வேற எங்கே இந்த tense வரும் ஆன்ட்டி?’’ என்று கோமதி கேட்டதும், திடீரென பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார் மேம்.
‘‘ஆன்ட்டி!’’
‘‘மேம்!’’ என்று இருவரும் உலுக்காத குறையாக அவரை எழுப்பியதும், நனவு நிலைக்கு வந்தவராக மேம், ‘‘ Kumble bowls to Flint off and Flint off hits the ball hard... and the ball goes to the boundary like lightning... ’’ என்று ரன்னிங் காமென்ட்ரி கொடுத்தார்.
‘‘ஆஹா! கிரிக்கெட் மேட்சையே பார்த்த திருப்தி கெடைச்சிடுச்சி ஆன்ட்டி...’’
‘‘எங்க காலத்துல டி.வி. கிடையாது. காமென்ட்ரி கேட்டே இங்கிலீஷ் பேசறதைக் கத்துக்கிட்டோம்...’’ என்றார் மேம்.
‘‘மேம்! காமெண்டரில present continuous tense கூட சொல்லலாமே... the ball is going to the boundary like lightning னு ... ’’
‘‘பெர்மிஷன் கிரான்டட்... ஆமா! நீ ஸ்கூல்ல மூலகங்கள் பத்தி படிச்சிருக்க இல்லியா... நீர்ல என்னென்ன மூலகங்கள் இருக்கு?’’
‘‘ஹைட்ரஜன் அண்ட் ஆக்ஸிஜன்.’’
‘‘கோடி வருஷத்துக்கு முன்னால இருந்த நீர்லயும் இதுங்க ரெண்டும்தான் இருந்துச்சு... இனிமேலும் இதுங்கதான் இருக்கும். இதை scientific fact னு சொல்றோம். இந்த மாதிரி விஷயங்களை present ல தான் சொல்லணும். Water contains hydrogen and oxygen கோமு! உனக்குத் தெரிஞ்ச ஒரு fact ஏதாவது சொல்லேன்...’’
‘‘பூமி சூரியனைச் சுத்துது’’
‘‘அதை இங்கிலீஷ்ல சொல்லு...’’
‘‘The earth rotates round the sun.’’
வித்யாவும் சொன்னாள்: ‘‘The sun rises in the east.’’
‘‘குட். இந்த rise -ஐ விடமாட்டே போலி ருக்கே...’’ என்று சிரித்தார் மேம்...
‘‘ஹோம் வொர்க் குடுக்கறேன். எழுதிக் கோங்க... ஒரு habit , ஒரு future plan , ஒரு factனு simple present ல வர்ற மாதிரி வாக்கியங்கள் எழுதிட்டு வாங்க. That’s all, today. bye ...’’
Signal words பற்றித் தெரிந்து கொள்ள new.google.com -ல் signal words என்று தட்டுங்கள். ஏராளமான உதாரணங்களை உங்களுக்குத் தேடித் தரும். For example னு சொன்னா அடுத்து ஒரு உதாரணம் வரும்னு எடுத்துக்கலாம். such as, similar to இந்த ரகம்தான்.
However, although னு சொன்னா ஒப்பீடு - வேற்றுமைக்கான சமிக்ஞைகள் ( compare-contrast signals )
As a result, therefore என்பவை முடிவுரைக்கான சமிக்ஞைகள் ( conclusion signals )
Because, consequently ஆகியவை காரண ( reason ) சமிக்ஞைகள்.
More over, in addition போன்றவை ஒரு கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தும் ( continuation ) சமிக்ஞைகள்.

- கத்துக்கலாம்...

Related

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! 662505492133889552

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item