ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்! டெ ட்லைன், டார்கெட்டை ரீச் பண்ணனும்,  ப்ராஜக்டை குறிப்பிட்ட நாளில் முடிக்கணும், க...

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

டெட்லைன், டார்கெட்டை ரீச் பண்ணனும்,  ப்ராஜக்டை குறிப்பிட்ட நாளில் முடிக்கணும், கஸ்டமரை தக்கவைக்கணும் என ஒவ்வொருவருக்கும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இல்லை. அதற்கு தற்காலிக தீர்வாக காஃபி, சிகரெட் என்று தேடிப் போகாமல் தினமும் சில உணவுகளை சேர்த்துக் கொண்டால் எதையும் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக ஹேண்டில் செய்யலாம்...

1. பச்சைக் காய்கறிகள்

பல ஐ.டி கம்பெனிகளில் 'கிரீன் ரூம்' என்றிருக்கும். மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பவர்கள் சிறிது நேரம் பச்சைக் கலரை பார்த்தால் மனது ரிலாக்ஸாகும் என்பதற்காக இந்த ரூம். அதுபோலதான் பச்சை நிறக் காய்கறிகளும்.. கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகாடோ, வெண்டை ஆகியவற்றில் அதிகமாக ஃபோலிக் ஆசிட்  (வைட்டமின் பி9) இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து உற்சாகமாகச் செயல்பட  உதவுகிறது. நீங்கள் 'ஷார்ட் டெம்பர்' பேர்வழி என்றால் உங்களது டென்ஷனை குறைக்க இவை உதவும்.

2. சாக்லெட்ஸ்

சாக்லெட்டுகளில் ''ட்ரைப்டோஃபன்''  அதிகம் உள்ளது. இது உங்களை  ஃபீல் குட்டாக வைத்திருக்க உதவும். நாம் நலமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை உணர உதவுவது சொரட்டோடின் என்ற ஒரு வகை ஹார்மோன் தான். அதனை அதிகப்படுத்த உதவுவது இந்த 'ட்ரைப்டோஃபன்'' !  இவை வாழைப்பழம், முட்டை இவற்றிலும் அதிகம் உள்ளது. மேலும் இவைகளை உண்ணும்போது உங்களுக்கு நிம்மதியான தூக்கமும் கியாரன்டி!
       

3. தயிர்


சிலர் செரிமானப் பிரச்னைகளாலே மிகவும் அப்நார்மலாக இருப்பார்கள். தயிரில் ''ப்ரோபயோட்டிக்'' என்று சொல்லப்படும் குட் பேக்டீரியா உள்ளது. இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் சின்ன விஷயத்திற்குக்கூட ஓவராக எமோஷனலாகும் நபர்களுக்கு தினமும் உணவில் தயிரை சேர்த்துவர எமோஷனலை கட்டுப்படும்.

4. பால்

எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள். ஒன்றும் நடக்காமல் இருக்கும்போதே ஏதோ விபரீதம் நிகழப்போவதாக எண்ணி, டென்ஷன் ஆவார்கள். இந்த ''பேனிக் டிசார்டர்'' க்கு பால் மிகவும் நல்லது. பாலில் உள்ள வைட்டமி டி உங்களை மகிழ்ச்சியாக இருக்க உதவுவதோடு பேனிக் டிசார்டரில் இருந்தும் மீட்டெடுக்கும்.

5. ஒமேகா - 3

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஒமேகா - 3 உதவுகிறது. காரணம் தெரியாமல் ஏற்படும் எரிச்சல், கோவத்தை கட்டுப்படுத்த உதவும் இந்த ஒமேகா - 3, கடல் மீன், ஃப்ளக்ஸ் சீட்ஸ் களில் அதிகம் உள்ளது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 471484356953775580

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item