ஸ்வீட் எஸ்கேப் - 3 சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்!

ஸ்வீட் எஸ்கேப் - 3 சர்க்கரையை வெல்லலாம் ஹெல்த் இ தயம், கல்லீரல், மூளையின் முக்கியத் த...

ஸ்வீட் எஸ்கேப் - 3

சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்

தயம், கல்லீரல், மூளையின் முக்கியத் துவம், செயல்பாடு பற்றி தெரிந்துவைத்துள்ள நமக்கு, கணையம் பற்றி அந்த அளவுக்குத் தெரியாது. கணையத்தில் என்ன நடக்கிறது... எப்படி இன்சுலின் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பற்றி இந்த இதழில் பார்க்கலாம்.

செரிமான மண்டலத்தில், வயிற்றின் மையப் பகுதியில், இலைபோன்ற தோற்றத்தில் கணையம் அமைந்திருக்கிறது. கணையத்துக்கு இரண்டு முக்கியப் பணிகள் உள்ளன. முதலாவது, ஹார்மோன்களைச் சுரந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்கிறது. இரண்டாவது, உணவு செரிமானம் ஆக சரியான நேரத்தில், என்சைம்களைச் சுரக்கிறது. கணையத்தின் 95 சதவிகித திசுக்கள், உணவு செரிமானத்துக்கான நொதிகளைச் சுரக்கும் நாளமுள்ள சுரப்பியின் வேலையைச் செய்கின்றன. மீதம் உள்ள செல்கள் நாளமில்லா சுரப்பியின் பணியைச் செய்கின்றன. இந்த செல்களை `லாங்கர்ஹான்ஸ் திட்டுக்கள்’ என்போம். இங்கிருந்துதான், இன்சுலின் மற்றும் குளுக்ககான் எனும் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பணியையும், குளுக்ககான் சர்க்கரை அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கின்றன. ரத்தத்தில் சரியான அளவு சர்க்கரை இருக்க, இந்த இரண்டு ஹார்மோன்களும் முக்கியம்.

சாப்பிட்டதும் என்ன நடக்கிறது?

பைக், கார் என எந்த ஒரு வண்டியும் ஓட எரிபொருள் தேவை. அது பெட்ரோலாக இருக்கலாம், டீசலாக இருக்கலாம். அதுபோல, நம் உடல் என்ற வண்டி ஓட எனர்ஜி  தேவை. இது, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என மூன்று வகையான பொருட்களால் ஆனது. கார்போஹைட்ரேட் என்பது குளுக்கோஸ். இது உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. புரதச்சத்து அமினோஅமிலத்தால் ஆனது. இது உடல் கட்டமைக்கப்பட அவசியம். கொழுப்பு அமிலங்களால் ஆனது. இவை செல்களின் உருவாக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியம். கொழுப்பு எதிர்கால ஆற்றல் தேவைக்காக சேகரித்துவைக்கப்படுகிறது. நாம் சாப்பிடாமல் விரதம் இருந்தோம் என்றால், அந்த நேரத்தில் இந்தக் கொழுப்பு பயன்படுத்தப்படும்.

நாம் உணவு உட்கொண்டதுமே கணையம் தன்னுடைய வேலையைத் தொடங்கிவிடும். சாப்பிட்ட உணவு செரிமானம் செய்யப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலந்ததுமே, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. இன்சுலினை சுமைதாங்கி என்று சொல்லலாம். இது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸைசெல்களுக்குள் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைச் செய்கிறது. இப்படிச் சரியாகச் செயல்பட்டால் மட்டுமே, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இன்சுலின் செல்களை அடைந்ததும், பூட்டு-சாவி போன்ற நுட்பத்தில் செல்கள் திறந்து, குளுக்கோஸை உள்ளே அனுமதிக்கின்றன. இந்த குளுக்கோஸ்தான் செல்களுக்கான உணவு. இந்த பூட்டு-சாவி நுட்பம் வேலை செய்யாதபோதுதான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குக் காரணமான இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலின் செயல்திறன் குறைவு நிலை உருவாகிறது. இதற்கு, மிக முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், பசி, உடல் எடை குறைதல் போன்றவற்றைச் சர்க்கரை நோயின் அறிகுறி. இந்த அறிகுறிகள் எப்படித் தோன்றுகின்றன?

ரத்தத்தில் சர்க்கரை இயல்பு நிலை என்பது 80 முதல் 140 மி.கி/டெசி லிட்டர். சர்க்கரை நோய் ஏற்பட இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் முக்கியக் காரணம். இதற்கு, உடல்பருமன், மனஅழுத்தம், புகைப்பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்றவை காரணங்கள். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் காரணமாகின்றன. சிறுநீரகம் 180 மி.கி/டெசி லிட்டர் வரையில் சர்க்கரையை ரத்தத்தில் இருக்க அனுமதிக்கும். 180-க்கும் மேல் செல்லும்போது, அதைச் சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதனால், சர்க்கரை நோய் வந்தால் முதலில் அதிகமாகச் சிறுநீர் கழிக்கத் தூண்டும். அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட தாகம் எடுக்கிறது.

இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் காரணமாக குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று சேராமல் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடுவதால், உடல் இயங்க ஆற்றல் போதாமல் அடிக்கடி பசி எடுக்கிறது. என்னதான் சாப்பிட்டாலும், குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்தாலும் செல்களுக்கு ஆற்றல் கிடைக்கவில்லை என்பதால், உடல் எடை குறைகிறது.

இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னையைத் தவிர்த்து, இயல்புநிலைக்குத் திரும்பி, சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று வரும் இதழ்களில் பார்க்கலாம்.

ஸ்வீட்டர்: காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.

டயாபடீஸ் டவுட்

சர்க்கரை நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

இல்லை. சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. நீண்ட காலம் எடுத்தாலும் பிரச்னை ஏற்படுத்தாதது. பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் போனால், சிறுநீரகப் பிரச்னை வரும். இந்தச் சூழ்நிலையில் உள்ளவருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகளைக் கொடுப்பதில் கவனம் தேவை. இவர்களுக்குத் தரப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். எனவே, சர்க்கரை நோய் நிபுணரை அணுகி,ஆலோசனை பெற்றுவந்தால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2893554193112165579

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item