டிரை கிரெய்ன் ரொட்டி & பரங்கிக்க்காய் அடை! ஈஸி 2 குக்!!

ஈஸி 2 குக் உணவு டிரை கிரெய்ன் ரொட்டி தேவையானவை ராகி மாவு, தினை மாவு, கோதுமை மாவு, கேரட் துருவல், பொடியாக நறுக...

ஈஸி 2 குக்

உணவு

டிரை கிரெய்ன் ரொட்டி
தேவையானவை

ராகி மாவு, தினை மாவு, கோதுமை மாவு, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 1 கப், கொத்தமல்லி - அரை கப் வறுத்து, பாதியாகப் பொடித்த வேர்க்கடலை - கால் கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ராகி, தினை, கோதுமை மாவைக் கொட்டி, துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் விழுது, உப்பு, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் கலந்து, சப்பாத்தி மாவைவிட லூஸாகப் பிசைய வேண்டும். தவாவில் அடைபோல, கையால் ரொட்டியைத் தட்டும் அளவுக்கு மாவைப் பிசைந்துகொள்ள வேண்டும்.

வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவு உருண்டையை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, சூடான தவாவில் வாழை இலையோடு அப்படியே கவிழ்த்துவிட வேண்டும். பொறுமையாக வாழை இலையை எடுத்துவிடலாம். எண்ணெய் ஊற்றத் தேவை இல்லை. ஏனெனில், வாழை இலையில் இருந்த எண்ணெயே போதுமானது. இதற்குத் தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
பலன்கள்

 

நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

வைட்டமின் சி, ஏ, இரும்புச்சத்து, கால்சியம் இருப்பதால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாக அமையும். எலும்புகள் உறுதியடையும்.

சுவையான ரொட்டியாக இருக்கும் மதிய உணவாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். வாழை இலையில் உள்ள ஸ்டார்ச் சத்தும் இதில் கிடைத்துவிடும்.
பரங்கிக்க்காய் அடை
தேவையானவை

பச்சரிசி - 2 கப், கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் பரங்கிக்காய் துருவியது - தலா 1 கப், பச்சைமிளகாய், சிவப்பு மிளகாய் - தலா 3, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் தனித் தனியாக ஊறவைக்க வேண்டும். பருப்பை சிறிது முன்கூட்டியே ஊறவைத்துவிட வேண்டும். ஏனெனில், கடலைப் பருப்பு ஊற, சிறிது நேரம் ஆகும். நன்கு ஊறியதும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொர கொரவென்று அரைக்க வேண்டும். சிவப்பு மற்றும் பச்சை மிளகாயை ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த மாவில் தேவையான மிளகாய் விழுது, உப்பு, வெங்காயம், பரங்கிக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லியைக் கலக்க வேண்டும். தோசை செய்வதுபோல கொஞ்சம் திக்காக அடைபோல தவாவில் சுட்டு எடுக்கலாம். இதற்கு வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

பரங்கிக்காயைச் சாப்பிடாதவர்களும் இந்த அடையை விரும்பிச் சாப்பிடுவர். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற சத்தான உணவு.

உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும். அதே சமயம், சீக்கிரமே பசிக்காது. திடமான காலை உணவாக அமையும்.

வைட்டமின் சி, ஏ, புரதச்சத்து நிறைந்துள்ளதால், காலை உணவாகச் சாப்பிட ஏற்றது.

Related

அடை வகைகள். 3616722308742594982

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item