டெங்கு காய்ச்சலை தடுக்கும் கொய்யா இலை

டெங்கு காய்ச்சலை தடுக்கும் கொய்யா இலை நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன்மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் வரும். எளி...

டெங்கு காய்ச்சலை தடுக்கும் கொய்யா இலை

நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன்மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் வரும். எளிமையான மூலிகைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம். கொசுக்களை அழிப்பதில் முதன்மையாக இருப்பது பேய் மிரட்டி இலை. இதை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். குன்றுகளுக்கு கீழ் கிடைக்கும் செடி. நாட்டு மருந்து கடைகளில் பேய் மிரட்டி திரி என்ற பெயரில் கிடைக்கும்.

பேய் மிரட்டி இலையில் விளக்கெண்ணெய் தடவி திரியாக திரித்து விளக்கேற்றி வைத்தால் அதில் இருந்து வரும் புகை கொசுவை விரட்டும். இலைகள் எரியும் தன்மை கொண்டது. மலேரியா, டைபாய்டு, யானைக்கால் வியாதி ஆகியவற்றுக்கு காரணமான கொசுக்களை விரட்ட கூடியது. வேப்பிலை, நொச்சி ஆகியவற்றை கொசுக்களை விரட்ட பயன்படுத்தலாம்.

பேய் மிரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 இலையுடன் சிறிது மிளகுப்பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். காய்ச்சல் தணியும். உடல் வலிக்கு மருந்தாகிறது.  பேய் மிரட்டி இலை, துளசி வகையை சேர்ந்தது. துளசியை போன்று நறுமணத்தை உடையது. சாலை ஓரங்களில் கிடைக்கும். ஊதா நிறத்தில் தும்பை பூ போன்ற உருவம் கொண்டது.

துளசியை போன்று கொத்தான மலர்களை கொண்டது. இதற்கு மலை துளசி என்ற பெயரும் உண்டு.அருகம்புல் வேரை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி அருகம்புல் வேரில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்க்கவும். காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை 50 முதல் 100 மில்லி எடுத்து கொண்டால் காய்ச்சல் குணமாகும்..

கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். இது டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கொய்யா இலை தேனீர் குடித்துவர விரைவில் குணமாகும்.

கொய்யா இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. டெங்கு காய்ச்சலை குணமாக்கும். டெங்கு வந்தால் அதிகமான குளிர், உடல் வலி இருக்கும். அப்போதுஇந்த தேனீரை குடித்தால் நன்மை ஏற்படும். இது முதல் தரமான மருத்துவ சிகிச்சை. காய்ச்சல் தணியும் வரை தேனீர் தயாரித்து குடிக்கலாம். எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும்.  நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடை சரக்குகளில் இருந்து காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரைக் கிழங்கு, சுக்கு, இந்துப்பு, கடுக்காய், கறிவேப்பிலை, தேன்.

அரை கிராம் இந்துப்பை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். சிறிது சுத்தப்படுத்திய கோரைக் கிழங்கு, கறிவேப்பிலை, சிறிது சுக்குப்பொடி, கடுக்காய் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். இது விஷ காய்ச்சல், கடுமையான உடல் வலியை குணமாக்கும். கண்கள் சிவந்து போவது, சளி பிரச்னையை சரிசெய்கிறது.

Related

மருத்துவ டிப்ஸ் 6724370903562712710

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item