கேள்வி பதில் பகுதியில் ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார்!

கேள்வி பதில் பகுதியில் ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  குறித்த சந்தேகங்களுக்கு  பதிலளித்தார்  எஸ்.ஹரிஷ், தமிழ்நாடு மற்றும் கேரள...

கேள்வி பதில் பகுதியில் ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  குறித்த சந்தேகங்களுக்கு  பதிலளித்தார்  எஸ்.ஹரிஷ், தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்திய தலைவர். ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட்.

ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு   குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக

1. பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யப்பட்ட முதலீட்டு ஃபோலியோ விவரங்களை ஆன் லைனில் ஒரே இடத்தில் எப்படி தெரிந்து கொள்வது?

     நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளில் எல்லாம் ஒரே மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருந்தால் மாதா மாதம் சிடிஎஸ்எல்-ல் இருந்து ஒரு ஒட்டு மொத்த கணக்கு விவரம் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும். இந்த கணக்கு விவரத்தின் பெயர்  CDSL consolidated accounts statement (CAS). உங்கள் பான் கார்டு எண்ணை அடிப்படையாக வைத்து தான் இந்த கணக்கு விவரங்கள் அனுப்பப்படுகின்றன.  இந்த அறிக்கையில் உங்கள் முதலீடுகள் பற்றிய அனைத்து விவரங்களும் இருக்கும்.

2. ஆன்லைன் மியூச்சுவல் ஃபண்டில் கேஒய்சி நிலுவையில்  இருந்தால் என்ன செய்வது?

      ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உங்களுக்கு ஃபோலியோ இருந்து,   கேஒய்சி நிலுவையில் இருந்தால் மேற்கொண்டு முதலீடு செய்யலாம். இதுவே உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ஃபோலியோ இல்லாமல் இருந்து, கேஒய்சி நிலுவையில்  இருந்தால் முதலீடு செய்ய இயலாது. உங்கள் கேஒய்சியை அப்டேட் செய்வது தான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு. கேஒய்சியை அப்டேட் செய்த பின் முதலீடுகளைத் தொடரலாம்.

3. ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் (குரோத்) -ல் மாதம் ரூ. 1,000 முதலீடு செய்து வருகிறேன். இதனை தொடரலாமா?

    லார்ஜ் கேப்பில் முதலீடு செய்து வருமானம் ஈட்ட விரும்புபவர்கள், இந்த முதலீட்டை தாராளமாகத் தொடரலாம். இப்போது  லார்ஜ் கேப் வேல்யூவேஷன் மதிப்பை விட குறைந்த விலையில் கிடைப்பதால் இந்த தருணத்தில் வழக்கத்தை விட கூடுதலாக முதலீடு செய்வது சிறப்பான முதலீடாக இருக்கும்.

4. ஆன்லைனில் எப்படி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது? ஆன்லைன் பேங்கிங் வசதி இருக்க வேண்டுமா?

       ஆன்லைனில் மூன்று விதமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
அ. இன்டெர்நெட் பேங்கிங் (INTERNET Banking), ஆ. நெஃப்ட் (NEFT), இ. டெபிட் கார்டு(Debit Card).
இன்றைய தேதிக்கு பல நிறுவனங்களின் வலைதளம் மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். உதாரணமாக டிஸ்ட்ரிபியூட்டர் வலைதளம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வலைதளம்.  இது போன்ற வலைதளங்களில் பிரத்யேகமாக ஆன்லைனில் முதலீடு செய்வதற்கு என்றே இன்வெஸ்ட் ஆன்லைன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்து கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை கொடுத்து மேற்கூறிய மூன்று வழிகளில் எதேனும் ஒரு விதத்தில் முதலீடு செய்யலாம்.
5. இணையப் பாதுகாப்பு இல்லாத இந்தக் காலத்தில், ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வது எந்த அளவுக்கு பாதுகாப்பானது?

  நம்மில் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் செய்யும் பணப் பரிவர்த்தனைகளான ரெயில் டிக்கெட், ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றிற்கு எந்தளவுக்கு செக்யூரிட்டி வசதிகள் உள்ளதோ, அதே அளவு செக்யூரிட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கும் உள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை. ஒருவேளை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முழுமை அடையாவிட்டால் அந்தப் பணம் ரீஃபண்ட் செய்யப்படும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தரப்பிலிருந்து எந்த சேவை கட்டணமும் பிடிக்கப்படாது.

6. நான் ஆன்லைன் மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் என்ன மாதிரியான கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்? ஆவணங்களை குறிப்பிடுங்கள்?

  மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை முதன்முறை கேஒய்சி விவரங்களை நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அலுவலகம் அல்லது கேஆர்ஏ சென்டரில்தான் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு , ஒரு பாஸ்போர்ட் கலர் போட்டோ, பான் கார்டு அசல் மற்றும் நகல் கையெழுத்திட்டது, அரசு அங்கீகரித்துள்ள முகவரிக்கான ஆதாரம் (அசல்) மற்றும் நகல் கையெழுத்திட்டது ஆகியவற்றுடன்  மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அலுவலகம் அல்லது கேஆர்ஏ சென்டருக்கு நேரடியாக  (இன்பர்சனல் வெரிஃபிகேஷன்) செய்து கொண்டால் உங்களுடைய கேஒய்சி விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுவிடும். அதன்பிறகு ஆன்லைனில் நீங்கள் அதனைப் பார்த்துக்கொள்ளலாம்.

7. மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வதால் ஒரு முதலீட்டாளருக்கு என்னென்ன கூடுதல் லாபம் கிடைக்கும்?

பல ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் போலவே மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் பரிவர்த்தனையும் நமக்கு இருந்த இடத்திலிருந்தே நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வசதியைத் தருகிறது. இதனால் உங்களுடைய நேரம் விரயமாவதை தவிர்க்க முடியும். 24 மணி நேரமும் மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் வசதி இருப்பதால் வயதானவர்கள், வேலையில் இருப்பவர்கள், பெண்கள் என அனைவரும் விரைவாகவும் எளிமையாகவும் தங்கள் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள முடியும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்தில் எந்தக் கூடுதல் லாபமும் இல்லை. 
8. நான் சென்ற வாரம் ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது ஃபண்டை தவறாக தேர்வு செய்துவிட்டேன். தற்போது முதலீடு செய்த ஃபண்டில் இருந்து, நான் விரும்பிய ஃபண்டில் என் முதலீட்டை மாற்ற முடியுமா? எப்படி மாற்றுவது?

  நீங்கள் ஆன்லைனில் தவறாக  முதலீடு செய்துவிட்டீர்கள் என்று கூறி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்கத் தான் ஆன்லைனில் முதலீடு செய்வதற்கு முன் ஒரு கன்ஃபர்மேஷன் (உறுதிபடுத்துதல்) வலைதளத்திலிருந்து கேட்கப்படும். அந்த உறுதிப்படுத்துதலை நீங்கள் ஆமோதித்தால் தான் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபண்டில் முதலீடு செய்யப்படும். எனவே அடுத்த முறை ஃபண்டில் முதலீடு செய்யும் போது சற்று கூடுதல் கவனத்தோடு முதலீடு செய்யவும்.
நீங்கள் முதலீடு செய்த ஃபண்டிலிருந்து பணத்தை  வேறு ஃபண்ட் அதாவது நீங்கள் விரும்பிய ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், ஏற்கனவே முதலீடு செய்துள்ள ஃபண்டிலிருந்து பணத்தை ரிடெம்ப்ஷன் செய்ய வேண்டும். ரிடெம்ப்ஷனின் போது,  கிடைத்துள்ள லாபத்துக்கு தகுந்தாற் போல வருமான வரி மற்றும் வெளியேற்றுக் கட்டணங்களையும் செலுத்திதான் வெளியேற வேண்டி இருக்கும்.

9. நான் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த போது, நான் என் முகவரியை தவறாக பதிவு செய்துவிட்டேன். தற்போது இதை யாரிடம் சொல்லி திருத்துவது?

  நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கேஒய்சியில் எந்த முகவரி இருக்கிறதோ அந்த முகவரி தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆக கேஒய்சியில் எந்த முகவரியை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
 10.என் வயது 46. என்னால் மாதம் ரூ. 25,000 முதலீடு செய்ய முடியும். என் ஓய்வு காலம் (2019 ஆம் ஆண்டு) மற்றும் குழந்தையின் எதிர்காலத்துக்கு சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் குறிப்பிடவும்.
 
 உங்கள் ஓய்வு காலத்திற்கு இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. தற்போது இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை நன்றாக இருப்பதோடு, லார்ஜ் கேப் சார்ந்த முதலீடுகளின் வேல்யுவேஷன், மதிப்பை விட விலை குறைவாக இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு லார்ஜ் கேப் ஃபண்டிலும், ஒரு பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். ஃபண்டுகளின் பெயர்கள். 
 
1.ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்ட் - 50%
 
2. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் - 50%
 
11. நான் கடந்த வருடம் இந்தியாவில் இருந்த போது ஆன்லைன் மூலம் சில ஃபண்டுகளில் முதலீடு செய்தேன். இப்போது நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். இங்கிருந்து கொண்டு இந்தியாவில் நான் முதலீடு செய்துள்ள அதே ஃபண்டில் முதலீடுகளைத் தொடர முடியுமா?
 
   நீங்கள் எந்த காரணத்திற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை. நீங்கள் தற்காலிகமாக ஒரு சுற்றுலா போல சென்றிருந்தால் உங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு வந்த பின் தொடரலாம். இதே நீங்கள் அமெரிக்காவிற்கு வேலை விஷயமாக சென்று அமெரிக்காவில் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் என்ஆர்ஐயாக கருதப்படுவீர்கள். நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை பெறுகிறதா என்பதை தெரிந்து கொண்டு முதலீடுகளைத் தொடரலாம். 
 
12. என்னிடம் பான் கார்டு  இல்லை, நான் மாதம் 2,500 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். நான் ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா?  யூனிட்களை விற்று பணமாக்க முடியுமா?
 
   மைக்ரோ எஸ்ஐபி மூலம் நீங்கள் முதலீடு செய்யலாம். ஆன்லைனில் பான் கார்டு  தேவையில்லாத கேஒய்சி (PAN exempted KYC) என்று அழைக்கப்படும் கேஒய்சி மூலம் ஃபண்டுகளில் அதிகபட்ச தொகையாக வருடத்திற்கு ரூபாய் 50,000 வரை முதலீடு செய்யலாம். தாராளமாக  யூனிட்களை விற்று பணமாக்க முடியும். எனவே முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். 
 


Related

ஃபண்ட் முதலீடுகள் 4785318041624895039

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item