ஹோட்டல் ரெசிப்பிக்கள்!

ஹோட்டல் ரெசிப்பிக்கள் கெண்டகி சிக்கன்  ஹாங்காங் ஃப்ரைடு இறால்  கோதுமை ஃப்ரூட் பாஸ்தா டெவில் சிக்கன...

ஹோட்டல் ரெசிப்பிக்கள்
கெண்டகி சிக்கன் 
ஹாங்காங் ஃப்ரைடு இறால் 
கோதுமை ஃப்ரூட் பாஸ்தா
டெவில் சிக்கன் 
பேக்டு சால்ட் கிரஷ்ட் ஃபிஷ் வித் கேபர் பட்டர்
கோழி வெப்புடு 
நெல்லூர் சிக்கன் 
தாய் ரெட் வெஜ் கறி 
மல்லி சிக்கன்
ஹோட்டல் ரெசிப்பிக்களை உங்கள் கிச்சனிலேயே செய்து சாப்பிட, தங்கள் ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார்கள், திருச்சியைச் சேர்ந்த டிமோரா ரெஸ்டாரண்ட். 

கெண்டகி சிக்கன்
தேவையானவை:
 சிக்கன் லெக் பீஸ் - 2 துண்டுகள்
 மிளகாய்த்தூள் - 10 கிராம்
 சீரகத்தூள் - 5 கிராம்
 மிளகுத்தூள் - 5 கிராம்
 கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
 எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
 இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
 கடலைமாவு - 10 கிராம்
 அரிசிமாவு - 5 கிராம்
 கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
 வெள்ளை எள் - 5 கிராம்
 பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 5 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 குடமிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 வெங்காயத்தாள் - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
 காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
 தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து
10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது). வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட்,  மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும். அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கவும்.
குறிப்பு:
தக்காளி கெட்சப் சேர்த்து சாப்பிட்டால், கெண்டகி சிக்கனின் ருசி தூக்கலாக இருக்கும்!

ஹாங்காங் ஃப்ரைடு இறால்
தேவையானவை:
 இறால் - 200 கிராம்
 கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
 மைதா மாவு - 25 கிராம்
 முட்டை- 1
 உப்பு - தேவையான அளவு
 இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்
 சர்க்கரை - 1 டீஸ்பூன்
 வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
 பெரிய வெங்காயம்- 50 கிராம்
 இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி- 2 டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய செலரி இலைகள் - சிறிதளவு
 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்
 எண்ணெய் - தேவையான அளவு
 நறுக்கிய வெங்காயத்தாள் - 10 கிராம்
 நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
செய்முறை:
இறாலை நன்கு கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து
10 நிமிடம் ஊறவைக்கவும். இதனை மிதமான சூடுள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.

கோதுமை ஃப்ரூட் பாஸ்தா
தேவையானவை:
 கோதுமை - 200 கிராம்
 முட்டை - 2
 ஆலிவ் எண்ணெய் - 10 மில்லி
 ஆப்பிள் துண்டுகள் - 100 கிராம்
 உலர் திராட்சை - 20 கிராம்
 பொடித்த முந்திரி, பாதாம் - 20 கிராம்
 உப்பு, வெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமையில் முட்டையை உடைத்து ஊற்றி, ஆலிவ் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இதை அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஆப்பிள் துண்டுகள், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்து நன்கு கிளறி ஆற விடவும். மாவை எடுத்து இரண்டு சிறிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தி ஒன்றின் மேல் ஆப்பிள் மசாலாவை பரவலாகத் தடவி, மற்றொரு சப்பாத்தி மாவால் மூடி, ஓரங்களை நன்கு அழுத்தவும் 20 நிமிடம் கழித்து ஓரங்களைப் படத்தில் உள்ளது போல லேசாகக் கீறி விடவும். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இனி இட்லித் தட்டில் சப்பாத்திகளை வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். இதனை தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:  குழந்தைகளுக்கு ஃபுரூட் ஜாமுடன் சேர்த்துக் கொடுக்கலாம். சத்தான உணவு.

டெவில் சிக்கன்
தேவையானவை:
சிக்கன் - 200 கிராம்
பஜ்ஜி மிளகாய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)
குட மிளகாய் - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)
இஞ்சி-பூண்டு விழுது - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (சதுரமாக வெட்டியது)
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்
முட்டை - ஒன்றை உடைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கலக்கி, அதில் இருந்து பாதியை எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குட மிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.

பேக்டு சால்ட் கிரஷ்ட் ஃபிஷ் வித் கேபர் பட்டர்
(Baked salt crust fish with caper butter)
தேவையானவை:
 முழு ரெட் ஸ்னாப்பர்/ கானாங்கெளுத்தி மீன் - 2
 கல் உப்பு - அரை கிலோ
 முட்டை - 4
 ரோஸ்மேரி, பார்ஸ்லே இலைகள் அல்லது கொத்தமல்லி தழை- இரண்டும் சேர்த்து 50 கிராம்
 மால்டா ஆரஞ்சு- 1 (ஆரஞ்சு பழத்தில் ஒரு வகை)
 எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுக்கவும்)
 வெண்ணெய் - 100 கிராம்
 பொடியாக நறுக்கிய ஆலீவ்ஸ் - 5 கிராம்
 பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம்
செய்முறை:
முழுமீனை நன்றாகக் கழுவி செதில்கள், குடல் நீக்கி சுத்தம் செய்யவும். மைக்ரோவேவ் அவனை 150 டிகிரிக்கு சூடு செய்யவும். ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய மால்டா ஆரஞ்சு, ரோஸ்மேரி, பார்ஸ்லே இலைகள், எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பிசையவும், முட்டையின் வெள்ளைக்கருவைப் பிரித்தெடுத்து, உப்பு சேர்த்துக் கலந்து எலுமிச்சைக் கலவையோடு சேர்த்துக் கலக்கவும். இதை கழுவிய மீனின் உள்ளே பரப்பவும். பிறகு, அலுமினியம் பேக்கிங் தட்டின் உள்ளே வெண்ணெய் தடவி, சிறிதளவு உப்பைத் தடவி, இதில் மீனை வைக்கவும். இனி மீதம் இருக்கும் உப்பை மீனின் மேல் போட்டு மீனை முழுமையாக மூடவும். இதனை அவன் உள்ளே வைத்து மூடி 30 முதல் 40 நிமிடங்களுக்கு வேக விடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பூண்டு மற்றும் ஆலீவ்ஸ் சேர்த்து வதக்கவும். இதில் 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து சாஸ் போல் தயாரிக்கவும். ஒரு ப்ளேட்டில் மீனை மட்டும் வைத்து, சாஸ் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:
கல் உப்பு அவனில் உள்ளே வைக்கும் போது உருகாது. அவனில் நேரிடையாக மீனை வைத்தால் அதன் உள்ளே இருக்கும் ஸ்டஃபிங், மீனின் சதைப்பகுதியில் சென்று சேராது. கட்டியாக அப்படியே நிற்கும். மீனில் கீழே மற்றும் மேலே வைக்கும் உப்பின் சூட்டினால் கலவை மீனின் உடல் முழுவதும் பரவி நன்கு வெந்து விடும்.

கோழி வெப்புடு
தேவையானவை:
 சிக்கன் - 200 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
 சின்னவெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 சிறியதாக நறுக்கிய தக்காளி - 1 சிறியது
 பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 20 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
 மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 40 மில்லி
 இஞ்சி-பூண்டு விழுது - 15 கிராம்
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:
தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

நெல்லூர் சிக்கன்
தேவையானவை:
 கோழிக்கறி - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
 வெங்காயம் - 50 கிராம் (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
 முட்டைகோஸ் - 20 கிராம் (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
 பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
 எலுமிச்சைச் சாறு - 1 (சாறு எடுக்கவும்)
 முட்டை - 1 (வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும்)
 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - இரண்டரை டீஸ்பூன்
 அரிசி மாவு - 50 கிராம்
 கடலை மாவு - 70 கிராம்
 முந்திரி - 50 கிராம்
 தயிர் - 1 கப்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
* நன்றாகக் கழுவிய கோழிக்கறியுடன் எண்ணெய் தவிர மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.
* காய்ந்த எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள கோழிக் கலவையை பக்கோடா போல் மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

தாய் ரெட் வெஜ் கறி
தேவையானவை:
 காய்ந்த மிளகாய் - 75 கிராம்
 பூண்டு - 50 கிராம்
 எலுமிச்சை இலை - 2 கிராம்
 மாங்கா இஞ்சி - 30 கிராம்
 செலரி - 3 கிராம் (இவை அனைத்தையும் மிக்ஸில் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இதுதான் தாய் கறி பேஸ்ட்).
 கேரட் - 50 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
 முட்டைகோஸ் - 25 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
 பீன்ஸ் - 25 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
 காளான் - 2 (மீடியம் சைஸில் நறூக்கவும்)
 உப்பு - தேவையான அளவு
 சர்க்கரை - 1 டீஸ்பூன்
 வெள்ளை மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்
 இஞ்சி, பூண்டு - 5 கிராம் (பொடியாக   நறுக்கியது)
 தேங்காய்ப்பால் - 50 மில்லி
 பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காளான் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்த தாய் கறி பேஸ்ட் சேர்க்கவும்.
* தேவையான அளவு உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
குறிப்பு:
தக்காளி மற்றும்  வெங்காய இலையால் அலங்கரித்து, சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.

மல்லி சிக்கன்
தேவையானவை:
 போன்லெஸ் சிக்கன் - 200 கிராம் (சிறியதாக நறுக்கவும்)
 தனியா விதைகள் - 50 கிராம்
 காய்ந்த மிளகாய் - 2
 சோம்பு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 20 கிராம்
 மிளகாய்த்தூள் - 10 கிராம்
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 முட்டை - 1 (அடித்து வைத்து கொள்ளவும்)
 அரிசிமாவு - 20 கிராம்
 கடலை மாவு - 30 கிராம்
 எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
 இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு
 எண்ணெய் - பொரிக்க
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் துண்டுகளோடு இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். மிக்ஸியில் சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்துகொள்ளவும். பொடித்த பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், அரிசிமாவு, மிளகாய்த்தூள், கடலை மாவு, முட்டை, உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து ஊற வைத்த சிக்கனையும் சேர்த்துப் பிசைந்து மீண்டும் 10 நிமிடம் உளற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சிக்கன் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 7298562450985551054

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item