ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்--5

‘‘நா ன் ஒரு சந்தேகத்தைக் கேக்கலாமா, மேம்?’’ வித்யாவின் கேள்விதான் ...‘‘நா ன் ஒரு சந்தேகத்தைக் கேக்கலாமா, மேம்?’’ வித்யாவின் கேள்விதான் அன்றைய வகுப்பின் ஆரம்பம்!
‘‘கோ ஆன்...’’ என்று உஷா மேம் பச்சைக் கொடி காட்டவும், ‘‘ Yes No கேள்விகளுக்குச் சுருக்கமா பதில் பேசிடறோம். அதுமாதிரியே Wh -கேள்விகளுக்கும் பதில் சொல்லலாமா... இல்லேன்னா, முழு வாக்கியத்துலதான் பதில் சொல்லணுமா?’’ என்று கேட்டாள் வித்யா.
‘‘அதுக்கும்கூட சுருக்கமாவே பதில் சொல்லலாம், வித்யா. உதாரணமா A, B னு ரெண்டு பேர் பேசிக்கிறதா வச்சுப்போம்’’ என்ற உஷா மேம், இப்படி போர்டில் எழுதினார்...
A: What were you doing yesterday evening?
B: Reading a novel.
A: Where did you buy it?
B: At Higginbothams.
பிறகு, வித்யா பக்கம் திரும்பிய உஷா மேம், ‘‘இந்த டயலாக்ல ஙி முழு வாக்கியத்துல பதில் சொல்லல. அதாவது, ‘ I was reading a novel’ னோ , ‘I bought the book at Higginbothams ’னோ சொல்லாம சுருக்கமா பேசறார். இப்படி சில சமயம் subject, object ஐ விட்டுட்டும், verb ஐ கட் பண்ணிட்டும் பேசறதை minor sentence னு சொல்றோம்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘உரையாடல்ல மூணு முக்கிய அம்சங்கள் இருக்கு...’’ என்றபடி அவற்றை போர்டில் எழுதினார்...
1. initiate தொடங்கி வைத்தல்
2. respond பதிலளித்தல்
3. followup தொடர்ந்து பேசுதல்/முடித்தல்
வித்யாவும், கோமதியும் அதை குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, உஷா மேம் விளக்கினார்...
‘‘நாம் பேச ஆரம்பிக்கிறதை initiate னு சொல்றோம். அது ஒரு கேள்வியாகவும் இருக்கலாம்; சாதாரண வாக்கியமாகவும் இருக்கலாம். அந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுதான் respond . இந்த பதில் முழு வாக்கியமாகவும் இருக்கலாம்; minor sentence -ஆகவும் இருக்கலாம். இப்ப பார்த்தோம் இல்லியா, A, ஙி க்கு இடையில் நடந்த உரையாடல்... அதுல இந்த ரெண்டு அம்சங்கள்தான் இருக்கு. follow up இல்ல.’’
‘‘ Follow up -ங்கிறது எப்படி இருக்கும், ஆன்ட்டி?’’ என்றாள் கோமதி.
‘‘அதுவும் வார்த்தைகள்தான். ஆனா, பேசறவங்களோட குணாதிசயத்தை வெளிப்படுத்தற வார்த்தைகள்!’’
‘‘ஒரு மாடல் டயலாக் சொல்லுங்க, மேம்.’’ இது வித்யா.
‘‘பொதுவா, ஒரு உரையாடல் initiate respond ங்கிற முறையிலேயே போயிட்டிருக்கலாம். ஆனா, அப்பப்ப நடுவுல கொஞ்சம் வித்தியாசமா follow up வார்த்தைகளையும் போட்டுப் பேசினா சுவாரஸ்யமா இருக்கும். அதுல நம்ம ஆர்வம், கோபம், விருப்பு, வெறுப்புனு எல்லாம் பிரதிபலிக்கும். Oh really, I see, Let me see, Very interesting, Splendid, Sure, Keep it up, My goodness, I’m sorry, I’m afraid, Yeah of course... இப்படி பல இருக்கு!’’ என்ற உஷா மேம், ‘‘உங்க ரெண்டு பேருக்கும் ஒரு situation சொல்றேன். கோமு! நீ வித்யாகிட்ட டைம் கேக்கிற. வித்யா டைம் சொல்றா. அப்புறமும் நீங்க கன்டினியு பண்ணி பேசணும். பேசுங்க, பார்ப்போம்’’ என்றார்.
வித்யாவும் கோமதியும் உற்சாகமாக பேசத் தொடங்கினார்கள்.
கோமு: What’s the time?
வித்யா: It’s five minutes past eight.
கோமு: Thank you.
வித்யா: No mention, Please.
அவர்கள் பேசியதைக் கேட்ட மேம், ‘‘வெல்டன்! மூணு அம்சத்தையும் கொண்டுவந்துட்டீங்க. Thank you, No mention please ரெண்டும் follow up வார்த்தைகள்தான். இப்ப நான் ஒரு மாடல் டயலாக் எழுதறேன்...’’ என்று போர்டில் எழுத ஆரம்பித்தார்.
A: What time is it?
B: 10.15
A: Oh, I’m late by 15 minutes.
B: You never come late. But, what happened today?
A: My two wheeler broke down.
B: Check your vehicle regularly.
A: Could you please tell your mechanic’s name?
B: Raja. His mobile number 9843333333.
A: Thanks.
B: You are welcome.
‘‘வித்யா, இந்த டயலாக் பத்தி ஒரு கமெண்ட் கொடு பார்க்கலாம்.’’
வித்யா சொன்னாள். ‘‘ A, ஙி ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கறவங்க. A டைம் கேட்டு initiate பண்றார். ஙி respond பண்றார். Oh, I’m late by 15 minutes -ங்கிறது follow up. கடைசில follow up ல முடியுது.’’
‘‘வெரிகுட், கோமு! இந்த டயலாக்ல minor sentences இருக்கா? அப்படி இருந்தா அதை major sentence ல சொல்லு, பார்க்கலாம்.’’
கோமதி சொன்னாள்... ‘‘10.15-ங்கிறதை It’s 10.15னு சொல்லலாம். மத்தது, His name is Raja, His mobile phone number is 9843333333, I thank you.”
கோமதி முடிக்கக் காத்திருந்தவள்போல் வித்யா கேட்டாள். ‘‘மேம்! Thanks- னு ஒருத்தர் சொன்னா நாம பதிலுக்கு No mention please... இல்லேன்னா, don’t mention it தானே சொல்றோம். நீங்க you are welcome னு எழுதி இருக்கீங்களே?’’
‘‘நல்லா கூர்மையாத்தான் கவனிக்கிற வித்யா. குட். ‘you are welcome’ னு ஙி பதில் சொல்றதுல அவரோட மனசு தெரியுது. அந்த வார்த்தையில ‘இந்த மாதிரி என் கிட்ட உங்க சந்தேகத்தை எப்பவுமே நீங்க கேக்கலாம். நான் சொல்லத் தயாரா இருக்கேன்’-ங்கிற அர்த்தம் இருக்கு. ஸோ, தாராளமா அப்படி சொல்லலாம்!’’
‘‘ஆன்ட்டி! follow up வார்த்தைகள் கேள்வி பதிலை விட சுவையா இருக்கு. என்ன... நமக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தெரிஞ்சி பேசணும்’’ என்று ஒருவிதமான ஏக்கத்தோடு கோமதி சொல்ல, ‘‘ஆமா... உங்க வீட்டுல நல்ல டிக்ஷனரி இருக்கா?’’ என்று கேட்டார் மேம்.
‘‘இல்ல ஆன்ட்டி.’’
‘‘முதல்ல அதை வாங்கு. தமிழ்ப் புத்தாண்டு வரப் போகுதே... ஷாப்பிங் பண்ண பணம் சேர்த்து வெச்சிருப்பே... பேசாம அதுல English Tamil Dictionary ஒண்ணை வாங்கிக்கோ. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.’’ என்று உஷா மேம் சொல்லவும், கோமதியின் முகத்தில் லேசான மாற்றம்.
‘‘என்னாச்சு கோமதி, தமிழ்ப் புத்தாண்டுக்கு வேற ஏதாவது வாங்கணும்னு திட்டம் வெச்சிருக்கியா?’’
‘‘ஆமா, ஆன்ட்டி. பட்டுப் புடவை வாங்கலாம்னு இருக்கேன்.’’
‘‘அப்படியா, பரவாயில்லை. பட்டுப் புடவையை இன்னொரு சமயம் வாங்கிக்கலாம். அதுக்கு பதிலா டிக்ஷனரி வாங்கி, புத்தாண்டை கொண்டாடு கோமு!’’
‘‘நீங்க சொன்னா சரி ஆன்ட்டி... வேணுமானா புதுசா ரெண்டு கர்ச்சீஃப் வாங்கிக்கறேன்!’’
‘‘குட்! வித்யா, நீயும் Advanced Learner’s Dictionary of Current English ஒண்ணு வாங்கிடு.’’
‘‘ஓகே. மேம். வர்ற தமிழ்ப் புத்தாண்டுக்கு நானும் கோமதி அக்காவும் டிக்ஷனரி வாங்கி, புது கர்ச்சீஃப்போட ஒரு போஸ் குடுத்துடறோம்!’’ என்று வித்யா சொல்ல, கோமு வும் சேர்ந்து சிரித்தாள்.
‘‘டிக்ஷனரினு நீங்க சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. ஆமா, டிக்ஷனரில வெர்ப்புக்குப் பக்கத்துல v.t, i.vt னு போட்டிருக்கே. அதுக்கு என்ன மேம் அர்த்தம்?’’ என்று கேட்டாள் வித்யா.
‘‘ஆஹா, இன்னக்கி principal verb பத்தின இன்னொரு வடிவத்தை உங்களுக்குச் சொல்லித் தரணும்னு தயார் பண்ணியிருந்தேன். நல்லவேளை நீயே ஞாபகப் படுத்திட்டே வித்யா..’’ என்றபடி உஷா மேம் போர்டில் விறுவிறு என எழுத ஆரம்பித்தார்...
1. Mala eats an apple
2. Kala sleeps on the bed
‘‘இந்த வாக்கியங்கள்ல eats, sleeps னு ரெண்டு வெர்ப்-கள் இருக்கு. ஆனா, ரெண்டும் ஒரே மாதிரி யானவை அல்ல. ஒரு வெர்ப்-ஐ மையமா வெச்சு ‘யாரால், எதனால்’னு கேள்வி கேட்டு, பதில் வந்ததுன்னா ( object ), அது v.t. அதாவது, transitive verb (செயப்படு பொருள் குன்றாவினை). பதில் வரலைன்னா இல்லே i.vt. அதாவது, intransitive verb (செயப்படுபொருள் குன்றிய வினை). முதல் வாக்கியத்துல eats- ங்கிறது, v.t . ‘மாலா எதைச் சாப்பிடுகிறாள்’னு கேட்டா ‘ an apple ’னு பதில் வருது இல்லியா, அதனால!’’
‘‘ரெண்டாவது வாக்கியத்துல sleeps- க்கு ‘யாரை, எதனால்’னு கேட்கவே ரொம்ப - odd -ஆ இருக்கு மேம்.’’
‘‘ஆமா. ‘யாரை தூங்குகிறாள், எதைத் தூங்குகிறாள்’னு கேக்க முடியாது. object வராது. அதனால, sleep -ங்கிறது i.vt ’’ என்ற உஷா மேம், வித்யாவிடம், ‘‘வித்யா! passive voice ல ஒரு v.t இருக்கிற வாக்கியம் சொல்லு’’ என்றார். உடனே, ‘‘ Ravana was killed by Rama ’’ என்றாள் வித்யா.
‘‘குட். ‘ராவணன் யாரால் கொல்லப்பட்டான்’-ங்கிற கேள்விக்கு ‘ஸிணீனீணீ’னு பதில் வர்றதால kill ஒரு v.t... ” உஷா மேம் சொல்ல, ‘‘ஆன்ட்டி, உங்ககிட்ட ஒவ்வொரு விஷயமா கத்துக்க கத்துக்க... நகை, நட்டு, வீடு, வாசல் எல்லாத்தையும்விட பெரிய சொத்து சம்பாதிக்கற மாதிரி சந்தோஷம் வருது..’’ என்று பரவசப்பட்டாள் கோமதி.
‘‘நிஜம்தான். வள்ளுவரே சொல்லியிருக்காரே...அழியாச் சொத்து கல்விதான்னு. ஓகே. tense ஐ மையமா வச்சு நிறைய இருக்கு. அடுத்த க்ளாஸ்ல இருந்து ஒவ்வொண்ணா பார்ப்போம். ஓகே. நாம கலையறதுக்கான நேரம் வந்தாச்சு!’’ என்ற உஷா மேம் அவர்களுக்கு தந்த ஹோம் வொர்க்...
கீழ்க்கண்ட வெர்ப்-களில் எவை v.t, எவை i.vt?
like, walk, bring, buy, fly, go, catch, come
கத்துக்கலாம்

Related

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! 7819531040289977949

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item