வாசகிகள் கைமணம்! முப்பழக் கூட்டு! ஸ்பைஸி அண்ட் டேஸ்ட்டி பக்கோடா குழம்பு!

வாசகிகள் கைமணம் ஸ்பைஸி அண்ட் டேஸ்ட்டி பக்கோடா குழம்பு! முப்பழக் கூட்டு தேவையானவை: நறுக்கிய ஆப்பி...

வாசகிகள் கைமணம்
ஸ்பைஸி அண்ட் டேஸ்ட்டி பக்கோடா குழம்பு!
முப்பழக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், தக்காளிப்பழத் துண்டுகள் - தலா அரை கப்,  நறுக்கிய பப்பாளித்  துண்டுகள், நறுக்கிய பெரிய வெங்காயம் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 3, வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பால் - ஒரு கப்  மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் -  தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பழத்துண்டுகளை சிறிதளவு எண்ணெயில் நன்றாக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை தனியாக நன்கு வதக்கி பழக்கலவையில் சேர்க்கவும். வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து, வாணலியில் சேர்த்து... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பழக்கலவையைச் சேர்த்து மேலும் கிளறி, ஒரு கப் பாலை விட்டு கலக்கி, இறக்கவும்.  சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தை தாளித்து சேர்க்கவும்.


பக்கோடா மோர்க்குழம்பு
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு , காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து மிக்ஸியில்  அரைக்கவும். துவரம்பருப்பை ஊறவைத்து அதனுடன் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடலைப்பருப்பு மாவுடன் 2 வெங்காயம் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலையை நறுக்கிக் கலக்கி, உப்பு சேர்க்கவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு, மாவை சிறிய பக்கோடா உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு கொதிக்கவிடவும். அரைத்து வைத்த துவரம்பருப்பு விழுது, மஞ்சள்தூள் கலந்து மேலும் கொதித்தவுடன், தயிரை ஊற்றி, செய்து வைத்திருக்கும் பக்கோடாவை போட்டு ஒரு கொதி வந்தபின் இறக்கி... தேவையான உப்பு சேர்க்கவும். சுவையான பக்கோடா மோர்க்குழம்பு ரெடி.

Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 8247564547446501199

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item