ஏற்றுமதி தொழில் சம்பந்தமான கேள்வி-பதில்

 கேள்வி-பதில் பகுதியில் ஏற்றுமதி தொழில் சம்பந்தமான சந்தேகங்களுக்குப் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ...



 கேள்வி-பதில் பகுதியில் ஏற்றுமதி தொழில் சம்பந்தமான சந்தேகங்களுக்குப் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணன் அளித்த பதில்கள்...
ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது?
“ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (Directorate General of Foreign Trade) பெறலாம். இதற்கான அலுவலகம் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று இடங்களில் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக இயங்கி வருகிறது.
IEC எண்ணை பெறுவதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம்http://dgft.gov.in/ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, இதற்கான செலவு ரூ.500 மட்டுமே. ஆனால், நேரடியாக விண்ணப்பிக்கும்போது செலவு அதிகமாக இருக்கும். முன்பு போல் அல்லாமல், IEC எண்ணை வழங்குவதற்கு வெளிநாட்டு வர்த்தக அலுவலகம் அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்ததிலிருந்து ஏழு நாட்களில் இந்த IEC எண் கிடைத்துவிடும்.”
ஏற்றுமதிக்கான ஆர்டர்களை எப்படிப் பெறுவது?
“தற்போதைய நிலையில் மத்திய அரசின் அமைப்பான FIEO மற்றும் இதர ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்கள் வெளிநாடுகளில் வர்த்தகப் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றன. இந்தப் பொருட்காட்சிகளில் ஏற்றுமதியாளர்கள் கலந்துகொள்வதன் மூலம், அங்கிருக்கும் இறக்குமதியாளர்களை நேரடியாகச் சந்திக்க முடியும்; நேரடியாகச் சந்திப்பதுடன் மட்டுமல்லாமல், தங்களின் ஏற்றுமதி பொருட்கள் குறித்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஆர்டர்களைப் பெற முயற்சிக்கலாம். இப்படி நேரடியாக இறக்குமதியாளர்களைத் தொடர்பு கொண்டு பேசும்போது அவர்களுக்குத் தங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகைப் பொருட்காட்சிகளில் கலந்துகொள்ள FIEO மற்றும் ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்களை அணுகலாம்.
இரண்டாவது வழிமுறை, இணையதளம் மூலம் மார்க்கெட்டிங் மேற்கொள்வது. ஏற்றுமதித் தொழில் ஆரம்பிப்பவர்கள் முதலில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் வலைதளம் ஒன்றை உருவாக்கி, அதனுள் தாங்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருப்பது அவசியம். இந்த வலைதளங்களை இறக்குமதியாளர்கள் பார்க்கும்போது, தங்களின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.
அதேபோல, இன்றைய இணையதள பிசினஸ் டு பிசினஸ் வலைதளங்கள் அதிகம் இருக்கின்றன. அந்த வலைதளங்களில் சென்று ஏற்றுமதியாளர்கள் தங்களை முன்நிறுத்தும்போது அங்கு வரும் இறக்குமதியாளர்களுடனான தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள் மற்றும் தஞ்சாவூர் பெயின்டிங்ஸ் போன்ற பல பொருட்களுக்கு பிசினஸ் டு கஸ்டமர் வலைதளங்கள் உதவிகரமாக இருக்கும். இந்த வலைதளங்கள் வாயிலாக அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய நிலையில், Search Engine Optimization (SEO) என்கிற விஷயமும் மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த உத்திகளைப் பயன்படுத்தி யும் ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிறுவனங்களை (வலைதளங்களை) முன்நிறுத்திக் கொள்வதன் மூலம் ஏற்றுமதி ஆர்டர்களை எளிதாகப் பெறலாம். அதேபோல, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்வதன் மூலமும் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியும்.”
இறக்குமதியாளர்களுடனான நம் உறவு எப்படி இருக்க வேண்டும்?
“ஏற்றுமதித் தொழில் செய்பவர்கள், தங்களின் இறக்குமதி யாளர்களுடன் நல்ல முறையில் உறவைப்  பலப்படுத்திக்கொள்வது அவசியம். அதேசமயம் ஆர்டர்களை அவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான உத்தரவாதத்தை மிகைப்படுத்தி எடுத்து சொல்லக்கூடாது. தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளானது தரமானதாகவும், இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் விதமாகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுடனான உறவு தொடர்ந்து இருக்கும். அதேபோல, அவர்களின் தேவை என்ன என்பதைத் தெளிவாகக் கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டால் ஏற்றுமதி செய்யும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. தவறுகள் ஏற்படாமல் இருக்கும்போது, ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையேயான உறவு சிறப்பாகவே இருக்கும்.”
ஏற்றுமதி செய்ய வங்கியில் கடன் பெற முடியுமா? எதன் அடிப்படையில் கடன் தருவார்கள்? எவ்வளவு கடன் தருவார்கள்?
“ஏற்றுமதித் தொழில் மீதான கடன்களை வழங்குவதில் அனைத்து வங்கிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில், இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தைவிட 1-2% வட்டியானது குறைவாகவே ஏற்றுமதி தொழில் கடனுக்கு வசூலிக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் இருக்கும் IEC எண்ணை வைத்து மட்டுமே வங்கியிடம் கடன் கேட்டு அணுக முடியாது. ஏற்றுமதிக்கான ஆர்டர்களை இறக்குமதியாளர்களிடமிருந்து பெற்றிருக்கும்பட்சத்தில், அந்த ஆர்டர் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். கொள்முதல் செய்ய இருக்கும் பொருளின் மதிப்பில் 80% வரைக்கும் மட்டுமே வங்கியில் கடன் பெற முடியும். மீதி இருக்கும் 20 சதவிகித தொகையை ஏற்றுமதியாளர்களே முதலீடு செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஏற்றுமதியில்  அனுபவமுள்ள, முன்னதாகப் பல ஏற்றுமதி களை மேற்கொண்ட ஏற்றுமதியாளர்கள் வங்கியை கடன் கேட்டு அணுகும்போது, அவர்கள் தங்களின் வருடாந்திர வருமான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதன் அளவில் 300% வரையில் கடன் பெறலாம்.”
எந்த மாதிரியான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்? ஏற்றுமதி செய்யக்கூடாத பொருட்கள் என்னென்ன?
“உயிருள்ள உயிரினங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள், ஆயுதங்கள், சந்தனக் கட்டைகள் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாட்டுக்குள் வரும் பொருட்களான, காட்டன் போன்ற சில பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால், இந்த வகைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய சில அரசு அமைப்புகளுக்கு மட்டுமே உரிமம் தரப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து உரிமம் பெற்று ஏற்றுமதி செய்யலாம். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அல்லாமல், மற்ற அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யலாம். அதேசமயம், அவ்வப்போது அரசாங்கம் தடை செய்யும் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது.இதுகுறித்த மேலதிகமான விவரங்களுக்கு http://indiantradeportal.in/ என்கிற வலைதளத்தைப் பார்க்கவும்.”
ஏற்றுமதித் தொழிலில் பணப் பரிவர்த்தனை எப்படி மேற்கொள்ள வேண்டும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
“இன்றைய நிலையில் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும் ஆர்வத்தில், முழுக்க முழுக்கக் கடன் வர்த்தகத்தை மேற்கொண்டு சில ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றத்தைச் சந்தித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இறக்குமதியாளர்களிடமிருந்து 25 சதவிகித பணத்தை முன்னதாக வாங்கிக் கொண்டு, மீதி 75 சதவிகித பணத்தை Letter of Credit (LC) முறையின் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதேபோல, இறக்குமதியாளர்களில் சிலர், ஏற்றுமதி ஆவணங்களை நேரடியாக அனுப்பும்படி கேட்பார்கள். இந்த நடைமுறையையும் தவிர்த்துவிடுவது நல்லது. வங்கிகள் மூலம் மட்டுமே அனைத்து ஆவணப் பரிமாற்றங்களையும் மேற்கொள்வது உத்தமம். அதேபோல ஆர்டர் ஆவணங்களையும் முழுவதுமாகச் சரிபார்ப்பது அவசியம்.”
 

Related

வேலை வாய்ப்புகள் 1180730823113794238

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item