30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா!

பா ர்க்கும்போதே நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் உணவு வகைகளில் பஜ்ஜி, போண்டா, பக்...

பார்க்கும்போதே நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் உணவு வகைகளில் பஜ்ஜி, போண்டா, பக்கோடாவுக்கு தனி இடம் உண்டு. அவற்றில் வழக்கமான சில அயிட்டங்களுடன்... ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி, ஓமவல்லி பஜ்ஜி, பனீர் - ஆலு போண்டா, ராகி பக்கோடா, சேமியா பக்கோடா என வித்தியாசமான பல ரெசிப்பிகளையும் சேர்த்து வழங்குவதன் மூலம் இங்கே ஒரு `கரகர மொறுமொறு மேளா’வே நடத்திக்காட்டி அசத்தும் சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்,
‘`இவை அனைத்துமே எண்ணெய்ப் பதார்த்தங்கள் என்பதால், அளவுடன் செய்து பயன்படுத்துங்கள்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார்.
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், ஆப்பிள் (மீடியம் சைஸ்) - ஒன்று, அரிசி மாவு - 20 கிராம், சர்க்கரை - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 300 கிராம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிளை ஒரு இன்ச் கனத்துக்கு வட்டமாக நறுக்கி விதை நீக்கவும். சர்க்கரையை சிறிதளவு வெந்நீர் விட்டுக் கரைத்து ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சர்க்கரை நீர், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஆப்பிள் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

அப்பள பஜ்ஜி
தேவையானவை: உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை: ஒவ்வொரு அப்பளத்தை யும் நான்காக கட் செய்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.

மல்டி மாவு பஜ்ஜி
தேவையானவை: கடலை மாவு 50 கிராம், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய காய்கறித் துண்டுகள் - 10 அல்லது 15 (வாழைக்காய், உருளைக்கிழங்கு கத்திரிக்காய் ஏதேனும் ஒன்று) சமையல் சோடா - ஒரு சிட்டிகை,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, ஓமம் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - கால் கப், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, ஓமம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், புளித்த தயிர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். காய்கறி துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ஓமவல்லி பஜ்ஜி
தேவையானவை: ஓமவல்லி இலை - 10 (சுத்தம் செய்து காம்பு நீக்கவும்), கடலை மாவு - 75 கிராம், அரிசி மாவு - 15 கிராம், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.  ஓமவல்லி இலைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: பச்சை மிளகாய் விழுதுக்குப் பதில் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

கேரட் பஜ்ஜி
தேவையானவை: மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு - 100 கிராம்,  அரிசி மாவு - 50 கிராம், கேரட் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: காய்ந்த மிளகாயை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவிட்டு... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக்கவும். இதனை மாவுடன் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவாக கரைத்துக்கொள்ளவும். கேரட் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தக்காளி பஜ்ஜி
தேவையானவை: அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5 (கனத்த வில்லைகளாக நறுக்கவும்), பொட்டுக்கடலைமாவு - 50 கிராம், சோள மாவு - 25 கிராம், மைதா மாவு - ஒரு  டீஸ்பூன், காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, சமையல் சோடா  - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா,  மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். தக்காளி வில்லை களை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: தக்காளியில் இருக் கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.

பிரெட் பஜ்ஜி
தேவையானவை: பிரட் ஸ்லைஸ்கள் - 4 (ஒவ்வொன்றையும் 4 துண்டு களாக்கவும்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நசுக்கவும்),  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, சீரகம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, நசுக்கிய பூண்டு, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். பிரெட் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஸ்டஃப்டு பஜ்ஜி
தேவையானவை: புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி (ஏதேனும் ஒன்று) - ஒரு கரண்டி, உருளைக்கிழங்கு - 3 (தோல் நீக்கி, வில்லைகளாக நறுக்கவும்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளின் மீது சிறிதளவு சட்னியை பரவலாக தடவி, சட்னி உட்பக்கம் இருக்குமாறு வில்லைகளை மூடி, கரைத்த மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: சட்னிக்குப் பதில் தக்காளி சாஸ் பயன்படுத்தியும் இந்த பஜ்ஜியைத் தயாரிக்கலாம்.

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா
தேவையானவை: உளுத்தம் மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், எண்ணெய் - 250 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை.
ஸ்டஃப்பிங் செய்ய: கடலைப் பருப்பு - 200 கிராம் (வேகவைத்து மசிக்கவும்), தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - 150 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து வடிகட்டி... மசித்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து நெய் விட்டு நன்கு கிளறி, பூரணப் பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும். இதை உருண்டகளாக உருட்டவும்.
உளுத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். பூரண  உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் எரியவிடவும். சூடு அதிகமானால் போண்டா எண்ணெ யில் கரைந்துவிடக்கூடும்).

அரைத்த மாவு பஜ்ஜி
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - 20 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயம் - சிறு துண்டு (பொடிக்கவும்), மெல்லிய சதுரங்களாக நறுக்கிய சேனைக்கிழங்கு - 10 அல்லது 15 துண்டுகள், புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாயை ஒன்று சேர்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்து எடுக்கவும். சேனைக்கிழங்கு வில்லைகளை புளிக்கரைசல், சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் வேகவிட்டு, நீரை வடிகட்டவும். இந்த வில்லைகளை அரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பனீர் - ஆலு போண்டா
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - கால் கிலோ.
ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்க வும்) , பனீர் துண்டுகள் - 50 கிராம், பொடித்த மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட் களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும். தயார் செய்து வைத்த உருண்டை களை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

மினி போண்டா
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி  - ஒரு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை: உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். மாவை சிறிய குழிக்கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
குறிப்பு: கரண்டியை ஒவ்வொரு முறையும் தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு உதறிவிட்டு, மாவை எடுத்துப் போட்டால்... போண்டா அழகாக வரும்.

பிரெட் போண்டா
தேவையானவை: பெரிய பிரட் துண்டுகள் - 10 (ஓரம் நீக்கவும்),  எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (துருவவும்),  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்), நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சிறிதளவு எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், புதினா, முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகள் செய்யவும். பிரெட்டை நீரில் நனைத்து எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிந்து, உருட்டிய மாவை பிரெட் நடுவே வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும். இதை சூடான எண்ணெயில் பொரித்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

லெஃப்ட் ஓவர் போண்டா
தேவையானவை: மிகுந்துவிட்ட ஏதேனும் ஒரு பொரியல்  - ஒரு கப்,  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), சாட் மசாலா - சிறிதளவு, ரஸ்க்தூள் அல்லது பிரெட் தூள் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 250 கிராம், உப்பு சிறிதளவு.
மேல்மாவுக்கு: மைதா மாவு, சோள மாவு (சேர்த்து) - 150 கிராம், உப்பு, மிளகாய்த்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கி... பொரியல், சாட் மசாலா, உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, பிரெட் (அ) ரஸ்க் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சௌசௌ பஜ்ஜி
தேவையானவை: தோல், விதைப் பகுதி நீக்கிய சௌசௌ வில்லைகள் - 20, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, பெருங்காயத்தூளை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். சௌசௌ வில்லைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மைதா போண்டா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, கடைந்த தயிர் (புளித்தது) - அரை கப், சீரகம் - அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலான மற்ற பொருட்களுடன் கடைந்த தயிர் சேர்த்து, உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும். மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.இதை சூடாக சாப்பிட வேண் டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.

காலிஃப்ளவர் பக்கோடா
தேவையானவை: காலிஃப்ளவர் (மீடியம் சைஸ்) - ஒன்று, சோள மாவு - 100 கிராம், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு  டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக ஆய்ந்துகொள்ளவும். இதை உப்பு, மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் போட்டு எடுக்கவும். கடலை மாவு, சோள மாவு, ஃபுட் கலர், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் காலிஃப்ளவரை ஒன்றாக சேர்த்து, நீர் தெளித்து பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பாசிப்பருப்பு போண்டா
தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், உப்பு - சிறிதளவு.
மேல் மாவுக்கு: கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், உப்பு, மிளகாய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி ஊறவிட்டு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விடாது கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, அரைத்த பருப்பு விழுது சேர்த்து 5 நிமிடம் கிளறி எடுத்து, ஆறியவுடன் சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து, பாசிப்பருப்பு உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

மிக்ஸ்டு வெஜ் போண்டா
தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, கோஸ், பீன்ஸ் (எல்லாம் சேர்ந்து) - 2 கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 250 கிராம். மேல்மாவுக்கு: கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக ஆக்கவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் நீர் சேர்த்து, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். வெஜிடபிள் கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை சாஸ் உடன் பரிமாறவும். தேங்காய் சட்னி, புதினா சட்னியும் தொட்டுக்கொள்ளலாம்.

ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா
தேவையானவை: வெங்காயத்தாள் - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - 100 கிராம், சோள மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  எண்ணெய் - கால் கிலோ,  உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்று சேர்த்து சிறிதளவு நீர்விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.

முந்திரி பக்கோடா
தேவையானவை: உடைத்த முந்திரி - 50 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - 250 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட் டுள்ள பொருட்களை (எண்ணெய் நீங்கலாக) நன்கு கலந்து, சிறிதளவு நீர் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.

வேர்க்கடலை பக்கோடா
தேவையானவை: வறுக்காத வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பிசிறவும். சூடான எண்ணெயில் மாவை கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

தூள் பக்கோடா
தேவையானவை: பெரிய வெங்காயம் - கால் கிலோ (நறுக்கவும்), கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், உருவிய கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, இஞ்சி - ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (நசுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி அதில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து மாவு கலவையில் சேர்த்து, நீர் தெளித்து பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்... 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.

கேபேஜ் பக்கோடா
தேவையானவை: துருவிய கோஸ் - கால் கிலோ, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட் டுள்ள பொருட்கள் அனைத்தை யும் (எண்ணெய் நீங்கலாக) நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

வெள்ளை எள் பக்கோடா
தேவையானவை: வெள்ளை எள் - 50 கிராம் (வறுக்க வேண்டாம்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு  பொரிக்கவும்.

பச்சைப் பட்டாணி போண்டா
தேவையானவை: வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம், கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,  தக்காளி, பச்சை மிளகாய்  - தலா - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, எண்ணெய் - 300 கிராம், உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு: கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வேகவைத்த பச்சைப் பட்டாணியுடன் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து, அதனுடன்  நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல்  சேர்த்துப் பிசையவும். இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

ராகி பக்கோடா
தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (நசுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - கால் கிலோ, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கேழ்வரகு மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.

சேமியா பக்கோடா
தேவையானவை: சேமியா - 100 கிராம், கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,  வெங்காயம் - 2 (நறுக்கவும்), நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு பிசிறவும் (நீர் சேர்க்க வேண்டாம். சேமியாவின் ஈரம் போதுமானது). இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.

வெண்டைக்காய் பக்கோடா
தேவையானவை: இளசான வெண்டைக்காய் - கால் கிலோ (வில்லைகளாக நறுக்கவும்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், சோள மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து நீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பாகற்காய் பக்கோடா
தேவையானவை: விதை நீக்கி பொடியாக நறுக்கிய பாகற்காய் - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், ஓமம் - கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, புளிக்கரைசல் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: நீரை சூடாக்கி பாகற்காயை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். இதனுடன் கடலை மாவு, அரிசிமாவு, புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், ஓமம் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும். இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பனீர் - ஸ்பிரிங் ஆனியன் கிரேவி
தேவையானவை: பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, ஆச்சி இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,  ஏலக்காய் - 3, பட்டை - ஒரு துண்டு, ஆச்சி மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், ஆச்சி மல்லித்தூள் - 2 டீஸ்பூன், பனீர் - 15 துண்டுகள், முந்திரி - 15 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), நீளமாக நறுக்கிய வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃபிரெஷ் க்ரீம் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், பொன்னிறமானவுடன் ஏலக்காய், பட்டை போட்டுக் கிளறி, ஆச்சி இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்கு வேகவிட்டு... தேவைக்கேற்ப தண்ணீர் விட்டுக் கலக்கவும். ஊறவைத்த முந்திரி விழுதை சேர்த்து, உப்பு போட்டு கிளறிவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, பனீர் துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கி, கொதிக்கும் கிரேவியில் போட்டுக் கிளறி இறக்கவும். மேலே ப்ரெஷ் க்ரீம் சேர்த்து. நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
இந்த கிரேவி... பரோட்டா, நாண், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு சிறந்த காம்பினேஷன்.

Related

30 நாள் 30 வகை சமையல் 2771288715894020944

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item