சூப்பர் சத்து... சிறுதானியப் பால்!

சூப்பர் சத்து... சிறுதானியப் பால்! மு ளைதானியப் பால்... அருமையான, ஆரோக்கியமான உணவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார், இரத்த...

சூப்பர் சத்து... சிறுதானியப் பால்!
முளைதானியப் பால்... அருமையான, ஆரோக்கியமான உணவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார், இரத்தின சக்திவேல்!
சென்னையைச் சேர்ந்த ‘இயற்கைப் பிரியன்’ இரத்தின சக்திவேல், ‘‘சிறுதானியங்களில் இருந்து பால் எடுக்க முடியும். அவற்றை நீரில் ஊறவைத்து, முளைதானியங்கள் ஆக்கும்போது, அவை அருமையான இயற்கைத் தாவர உணவுகள் ஆகின்றன. அதனுடன் தண்ணீர் விட்டு அரைத்துப் பாலாக்கி அப்படியே குடித்தால், அது தாவரப்பால்; சூடு செய்து குடித்தால், அது சைவப்பால்!’’ என்று நற்செய்தி சொல்கிறார்.
சிறுதானியங்களில் இருந்து எப்படி பால் தயாரிப்பது என்பதைச் சொல்லிக் கொடுத்த இரத்தின சக்திவேல், அது நம் உடலுக்குத் தரும் நன்மைகள் என்னென்ன என்பதையும் பகிர்ந்தார்.
‘‘முளைதானியப் பால் எடுக்க, பயன் படுத்தும் தண்ணீர் மற்றும் பருத்தித் துணி தூய்மையானதாகவும், தானியங்கள் முற்றிய விதைகளாகவும் இருக்க வேண்டும். ஒரு நபருக்கு, ஒரு வேளைக்கான தானியம் 50-100 கிராம். தானியத்தை முதலில் எட்டு மணி நேரம் குடிநீரில் ஊறவைக்க வேண்டும். அதற்கு மேல் ஊற நேரம் எடுக்கும் தானியம் எனில், புது நீர் மாற்ற வேண்டும். பின், ஊறவைத்த தானியத்தை, இரண்டு முறை குடிநீரில் கழுவ வேண்டும். அதை ஈரமான பருத்தித் துணியில் கட்டி தொங்கவிட்டு, காற்றில் 8 மணி நேரம் முளைவிட வைக்க வேண்டும். பொதுவாக, காலையில் தானியத்தை ஊறவைத்து, மாலையில் நீரை வடித்துக் கழுவி, பருத்தித் துணியில் கட்டினால், மறுநாள் காலை அழகழகாக முளை எட்டிப் பார்க்கும் (பருவ நிலை மாற்றத்தால், ஊறும் மற்றும் முளைக்கும் நேரங்கள் மாறுபடலாம்).
இந்த முளைதானியத்துடன் 150 மில்லி நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடித்தால், முளைதானியப் பால் தயார். இம்முறையில் பச்சைப்பயறு, கோதுமை, நிலக்கடலை, எள், சூரியகாந்தி விதை, கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கொள்ளு, கம்பு ஆகிய தானியங்களிலிருந்து பால் எடுத்துப் பருகலாம்!’’ என்று விளக்கிய இரத்தின சக்திவேல், வெவ்வேறு தானியங்களை முளைகட்ட வைக்கும் முறை, முளைதானியப் பாலை எதனுடன் சாப்பிடுவது மற்றும் தானியங்கள் தரவல்ல பலன்கள் என விரிவாக பேசினார்...
‘‘பச்சைப்பயறு பாலுடன் தேன்/வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். ஓரிரு பேரீச்சை, தேங்காய்த் துண்டுகள், வறுக்காத முந்திரி, உலர் திராட்சை இணைத்து இந்தப் பாலை காலை உணவுக்குப் பதில் குடிக்கலாம். சர்க்கரை வியாதி அன்பர்கள் காய்கறிகள் இணைத்துச் சாப்பிடலாம்.
கோதுமையில் சம்பா கோதுமை, பஞ்சாப் கோதுமை என்று இரு வகை உண்டு. இதில் பஞ்சாப் கோதுமையே முளைகட்ட ஏற்றது. கோதுமையை 8 முதல் 12 மணி நேரம் நீரில் ஊறவைப்பதுடன், அது முளைக்கவும் 12 முதல் 18 மணி நேரமாகும். கோதுமைப்பாலுடன் சுவைக்கு தேன்/வெல்லம் அல்லது மிளகுத்தூள் சேர்க்கலாம். நீரில் ஊறிய கோதுமைகளை மண்ணில் புதைத்து நீர் ஊற்றி வந்தால், ஐந்தாறு தினங்களில் பச்சை பசேல் கோதுமைப் புல் வளர ஆரம்பிக்கும். வளர வளர வெட்டி, ஒரு கைப்பிடிக்கு ஒரு டம்ளர் நீர் சேர்த்து அரைத்து அத்துடன் தேன், வெல்லம், மிளகுத்தூள் சேர்த்துப் பானமாகச் சாப்பிடலாம். பெண்களைத் தாக்கும் மார்பக‌ புற்றுநோயை மட்டுப்படுத்தும் இதை, அருமையான பச்சை ரத்தம் என்கின்றனர்.
நிலக்கடலையை 12 முதல் 15 மணி நேரம் ஊறவைப்பதுடன், இதற்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நல்ல தண்ணீர் மாற்றிவிட வேண்டும். 15 முதல் 18 மணி நேரத்தில் முளை கிளம்பி வரும். நிலக்கடலைப் பாலுடன் தேன் / வெல்லம் கலந்து பருகலாம்.
எள்ளைக் கழுவும்போது, மண் இல்லாமல் அரித்து அள்ளிக்கொள்ள வேண்டும். கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் முளைக்க வைத்துச் சாப்பிடலாம். நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஊற வைத்தோ, முளைக்க வைத்தோ சாப்பிடும்போது, எண்ணெய் உணவுகள் தேவையில்லை. எளிதில் ஜீரணமாகக்கூடிய கொலஸ்ட்ரால், ’ஒமேகா 3’ ஆயில் தன்மை அதிக அளவிலும் கிடைக்கும். முளைத்த எள்ளுடன் வெல்லம், பேரீச்சை இணைத்துச் சாப்பிடலாம். விட்டமின் ’டி' மிகுந்துள்ள சூரியகாந்தி முளையை, கண்பார்வையை மேம்படுத்த விரும்பும் அன்பர்கள் அடிக்கடிப் பயன்படுத்தலாம்.
கொண்டக்கடலை முளைப்பால், கறுப்பு உளுந்து முளைப்பால், குளிர்ச்சி மிகுந்த உணவு என்பதுடன், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் அற்புத உணவு. உடல் போஷாக்கை வளர்க்கும். இதேபோல் கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம்,  மூங்கில் அரிசி, சோயா,  பார்லி, வெந்தயம் போன்றவற்றையும் முளைப்பாலாக்கிப் பருகலாம். எல்லாவற்றிலும் சுவையான முளைதானியம், கம்பும் வேர்க்கடலையும்தான்!’’ என்று இனிக்கச் சொன்ன சக்திவேல்,‘‘பொதுவாக, சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை. அவற்றை ஊறவைக்கும்போது, சத்துக்களும் அதிகரிக்கும். மேலும் அவை முளைத்து தோல் வெடிக்கும்போது, அவற்றின் விட்டமின் மற்றும் தாது உப்பு சத்துகள் இன்னும் அதிக அளவில் பெருகிவிடுகின்றன. அசைவ உணவான சிக்கனைவிட அதிக சக்தி உள்ளவை என்பதுடன், பக்கவிளைவுகள் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவை இந்த சைவ தாவர உணவுகளும், முளைப்பால் வகைகளும், பயன்படுத்திக் கொண்டால், குடும்பத்தின் ஆயுள் அதிகரிக்கும்!’’ - ஆரோக்கிய வழிகாட்டி நிறைவுசெய்தார், இரத்தின சக்திவேல்!


Related

சிறுதானிய உணவுகள் 1773450898265385774

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item