பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ? இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு... சித்த வைத்தியத்தால் முடியும்!

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? Snakebite Remedy   ஓர் விழிப்புணர்வுப் ப திவு...

 

ஓர் விழிப்புணர்வுப் பதிவு இது...
அதிகம் அதிகம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்...
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவருடைய

இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?
இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு...
சித்த வைத்தியத்தால் முடியும்!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் 
போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் 
நீங்கள் பயப்டாமல், பதட்டப்படாமல் முதலில் இந்த சித்த மருத்துவத்தை செய்து பாருங்கள்...
பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் 
இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் 
இருக்கும் கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று 
தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் மறு காதில்வந்துவிட்டால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். அப்படி மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்றும், இதயத்துடிப்பு தற்காலைகமாக நின்றுவிட்டதாகவும் கருதி 
கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் மூன்றிலிருந்து ஐந்து சொட்டுவரை விடவும் மீண்டும் அவருக்கு இதயத்துடிப்பு வந்து 
உயிர் வரும் வாய்ப்[பு அதிகமுள்ளது.
முதலில் மருத்துவரை சந்தித்து முதலுதவி பெறுங்கள். 
அவர் கை விரிக்கும் பட்சத்தில் இந்த மருத்துவத்தை செய்து 
காப்பாற்ற முயலுங்கள்...
மேலும் பாம்புகடி பற்றிய தகவல்களை முழுமையாக படித்து மற்றவர்களுக்கும் உதவுவுங்கள்...
பாம்புக்கடி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது சாவு என்பது தான் – பாம்புகடி ஏற்பட்ட உடன் பலருக்கு அதிக டென்ஷன் ஆகி மேலும் நிலைமை மோசமடையக்கூடும் – அதனால் பாம்புக்கடி / மற்றும் பாம்பு வகைகள் பற்றி கண்டிப்பாய் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் காப்பாற்ற மற்றூம் வைத்தியம் பார்க்க முடியும்.பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.
பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன. எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.
பாம்பு கடித்ததும் ஐயோ….பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும். பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.
பாம்பு வகைகள்
நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.
விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.
நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.
கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா….???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல…
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா….??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்…
முதலுதவி:-
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…
எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்
அனைவரும் பயன்பெற அதிகமதிகம் பகிருங்கள்..

Related

ஹெல்த் ஸ்பெஷல் 990442249778958051

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item