30 வகை குளிர்பானங்கள்!

30 வகை குளிர்பானங்கள்   கோ டை வெயில் காரணமாக உஷ்ணம், நாவறட்சி, வியர்வை கசகசப்பு என்று அசௌகரியத்துக்கு ஆளாகும்போது, ஒரு கி...

30 வகை குளிர்பானங்கள்
 
கோடை வெயில் காரணமாக உஷ்ணம், நாவறட்சி, வியர்வை கசகசப்பு என்று அசௌகரியத்துக்கு ஆளாகும்போது, ஒரு கிளாஸில் குளிர்பானத்தைக் கொண்டுவந்து நீட்டுபவர்கள், எல்லோர் மனதிலும் மிகவும் உயர்ந்து நிற்பார்கள். அந்தப் பெருமையை உங்களுக்கு ‘ரிசர்வ்’ செய்துகொடுக்கும் வகையில், வித்தியாசமான 30 வகை குளிர்பானங்களைத் தயாரித்து வழங்கும், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஶ்ரீநிவாசன், ``ஒரு கிலோ சர்க்கரையில் ஒரு கிளாஸ் (200 மில்லி) நீர் விட்டு கொதிக்க
வைத்து, வடிகட்டி, சிரப் தயாரித்து வைத்துக்கொண்டால், குளிர்பானம் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் அதை தேவையான அளவுக்கு சேர்த்துக்கொள்ளலாம்’’ என்று டிப்ஸும் கொடுக்கிறார்.
குறிப்பு: இங்கே வழங்கப்படும் ரெசிப்பிக்களின் அளவுகள் ஒரு நபருக்கு பரிமாறுவதற்கேற்ப கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தயாரிக்க வேண்டுமானால், அதற்கேற்ப பொருள்களின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

கல்கண்டு பானகம்
தேவையானவை: டைமண்ட் கல்கண்டு - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.
செய்முறை: டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.

மின்ட் - ஜிஞ்சர் டிரிங்க்
தேவையானவை: ஆய்ந்த புதினா இலை - 15, இளம் இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புதினா, இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து விழுதாக்கவும். இதை மீதமுள்ள குளிர்ந்த நீரில் கரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஆப்பிள் மில்க்‌ஷேக்
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), சர்க்கரை - 3 டீஸ்பூன்.
செய்முறை: ஆப்பிளை தோல் நீக்கி துருவவும். ஆப்பிள் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அரைத்து உடனடியாக பரிமாறவும்.

ரோஸ் லஸ்ஸி
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு, சர்க்கரை - 6 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: கெட்டித்தயிர், ரோஸ் எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

நன்னாரி சர்பத்
தேவையானவை: நன்னாரி சிரப் (சர்க்கரை கலந்தது... பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).
செய்முறை: குளிர்ந்த நீருடன் நன்னாரி சிரப், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு விளாவி பரிமாறவும்.

எலுமிச்சை - ஏலக்காய் ஜூஸ்
தேவையானவை: குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன், உப்பு - கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).
செய்முறை: குளிர்ந்த நீருடன் பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு குளூக்கோஸ் பவுடர்  சேர்த்தும் தயாரிக்கலாம். இது உடனடி சக்தி தரக்கூடிய பானம்.

வெல்லம் - சுக்கு பானகம்
தேவையானவை: பொடித்த வெல்லம் - 50 கிராம், சுக்குப்பொடி - 2 சிட்டிகை,  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.
செய்முறை: வெல்லத்தில் முக்கால் கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் முக்கால் கப் நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.

மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி
தேவையானவை: ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை  கலவை - ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் - 50 கிராம், துருவிய சாக்லேட் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கண்ணாடி கிண்ணத்தில் பழ வகைகளைக் கலந்துகொள்ளவும். மேலே ஐஸ் க்ரீமை ஸ்பூனால் பரவலாக விட்டு, துருவிய சாக்லேட்டைத் தூவி உடனே பரிமாறவும்.
குறிப்பு: ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக மில்க்மெய்ட் சிறிதளவு சேர்த்தும் செய்யலாம்.

பனங்கல்கண்டு - துளசி பானகம்
தேவையானவை: பனங்கல்கண்டு - 25 கிராம், நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - 2, துளசி - 20 இலைகள், மிளகு - 4, ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மிளகை துளசியுடன் சேர்த்து, கால் கப் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வடிகட்டவும். பனங் கல்கண்டை பொடித்து முக்கால் கப் நீருடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வடிகட்டிய துளசி ரசம், ஐஸ்கட்டிகள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான இந்த பானம், வெயில் கால ஜலதோஷத்துக்கு சரியான மருந்தும்கூட!

பிஸ்தா டிரிங்க்
தேவையானவை: பிஸ்தா - 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் - சில துளிகள், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, பிஸ்தா எசென்ஸ், மீதமுள்ள பால் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குகும்பர் லஸ்ஸி
தேவையானவை: தோல், விதை நீக்கி துருவிய வெள்ளரிக்காய் - அரை கப், கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு சிட்டிகை, ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

பைனாப்பிள் ஜூஸ்
தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், நீர் - 100 மில்லி (அரை கிளாஸ்), ஐஸ் கட்டிகள் - 3.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாவற்றையும் (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) கலந்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

டொமேட்டோ பட்டர் மில்க்
தேவையானவை: குளிர்ந்த மோர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை, டெமேட்டா கெச்சப் - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3, பிளாக் சால்ட் - ஒரு சிட்டிகை.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும்  கலந்து நன்கு விளாவி பரிமாறவும்.
கெச்சப் விரும்பாதவர்கள்... அதற்குப் பதிலாக ஒரு தக்காளி, ஒரு சிறிய பச்சை மிளகாயை வேகவிட்டு அரைத்து வடிகட்டி உபயோகிக்கவும்.

கேசரி மில்க்
தேவையானவை: காய்ச்சி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்) கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - கால் சிட்டிகை, சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து பரிமாறவும்.
சர்க்கரைக்குப் பதிலாக  தேவையான அளவு தேன் அல்லது வெல்லப்பாகு சேர்த்தும் இதை செய்யலாம்.

மாம்பழ லஸ்ஸி
தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - அரை கப், குளிர்ந்த தயிர் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், மாம்பழ எசென்ஸ் - 2 துளி.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து நுரை பொங்க பரிமாறவும்.
குறிப்பு: மாம்பழ கலர் குறைவாக இருப்பின் மஞ்சள் ஃபுட் கலர் சிறிது சேர்க்கலாம்.

கிரேப் ஜூஸ்
தேவையானவை: திராட்சைப்பழம் - 100 கிராம், திராட்சை எசென்ஸ் - 2 துளிகள், சர்க்கரை - 5 டீஸ்பூன் (பழம் புளிப்பாக இருப்பின் இன்னும் ஒரு டீஸ்பூன் அதிகமாக சேர்க்க லாம்), நீர் - முக்கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: திராட்சைப் பழத்துடன் சர்க்கரையை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். இந்த சாற்றுடன் மீதமுள்ள நீர், திராட்சை எசென்ஸ் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகளைப் சேர்த்து பரிமாறவும்.

கேஷ்யூ மில்க்
தேவையானவை: முழுமுந்திரி - 10, ஏலக் காய்த்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: முந்திரியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற விடவும். முதலில் முந்திரி, சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கி, பின்னர் ஏலக்காய்த்தூள், பால் சேர்த்து மைய அரைத்து எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

மேங்கோ மில்க்‌ஷேக்
தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - கால் கப், காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், மாங்கோ எசென்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள  பொருட்கள் அனைத்தையும் கலந்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

நுங்கு கூலர்
தேவையானவை: தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப், இளநீர் - அரை கப், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மில்க்மெய்ட் தவிர பிற பொருட்களைக் கலந்து ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, மேலே மில்க்மெய்ட் ஊற்றி, கண்ணாடி கிளாஸ் (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.

இளநீர் - மில்க்மெய்ட் பானம்
தேவையானவை: இளம் வழுக்கையுடன் கூடிய இளநீர் - ஒன்று, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.
செய்முறை: இளநீர்  வழுக்கை, சர்க்கரை, மில்க்மெய்ட் இவற்றை சேர்த்து மையாக அரைத்து, அதனுடன் இளநீர் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் குளிரவைத்து பரிமாறவும்.

ஏலக்காய் மில்க்
தேவையானவை: காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், ஏலக்காய் எசென்ஸ் - 3 துளிகள், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) நன்கு கலந்து மிக்ஸியில் நுரை பொங்க பொங்க அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.
குறிப்பு: ஏலக்காய் எசென் ஸுக்குப் பதிலாக இரண்டு ஏலக் காயை பொடித்தும் சேர்க்கலாம்.

மாதுளம்பழ கூலர்
தேவையானவை: நன்கு சிவந்த மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், பால், நீர் - தலா கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கலந்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக), மிக்ஸியில் நன்கு அடித்து, வடிகட்டி, ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பரிமாறவும்.
இது மிகவும் சத்துமிக்க பானம்.

பாதாம் கூல் டிரிங்க்
தேவையானவை:வெந்நீரில் ஊறவிட்டு,  தோல் நீக்கி அரைத்த பாதாம் விழுது - 3 டீஸ்பூன் (10 பாதாம் பருப்பு போதுமானது), காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி  (ஒரு கிளாஸ்),  சர்க்கரை - 5 டீஸ்பூன், பாதாம் எசென்ஸ் - 2 சொட்டு, மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை, குங்குமப்பூ - 3 இதழ்கள்.
செய்முறை: பாதாம் விழுது, பால், சர்க்கரை, பாதாம் எசென்ஸ், மஞ்சள் ஃபுட் கலர் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, குங்குமப்பூவை மிதக்கவிட்டு பரிமாறவும்.

கிர்ணிப்பழ ஜூஸ்
தேவையானவை: கிர்ணிப் பழத் துண்டுகள் (தோல், விதை நீக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.
செய்முறை: சர்க்கரை, கிர்ணிப்பழத் துண்டுகளை மிக்ஸி யில் சேர்த்து, நன்கு அடித்து எடுத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து, ‘ஜில்’ என்று பரிமாறவும்.

ஃபலூடா
தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், தர்பூஸ்) எல்லாம் சேர்ந்து - அரை கப், வேகவைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஃபுட் கலர் சேர்த்து வேகவிட்ட ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடையில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன் (ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்), ஐஸ்க்ரீம் - 50 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.
செய்முறை: உயரமான கண்ணாடி டம்ளரில் சிறிது பழக்கலவையை போடவும். பின்னர் சப்ஜா விதையை சேர்க்கவும். பிறகு சேமியா, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை, பின்னர் ஜவ்வரிசி, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை என்று நிரப்பி... இறுதியில் ஐஸ்க்ரீம் முழுவதையும் போட்டு, மேலே டூட்டி ஃப்ரூட்டியை தூவிப் பரிமாறவும்.

மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்
தேவையானவை: நறுக்கிய வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி, மாம்பழம் (சேர்த்து) ஒன்றரை கப், ஏதாவது ஒரு ஃப்ரூட் எசென்ஸ் - சில துளிகள், தேன் - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா (பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பழக் கலவையை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றி எடுக்கவும். இதனுடன் ஃப்ரூட் எசென்ஸ் மற்றும் வறுத்த முந்திரி - பாதாம் - பிஸ்தாவை சேர்த்துக் கிளறவும். அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து... மேலே தேன், ப்ரெஷ் க்ரீமை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

புதினா மோர்
தேவையானவை: மோர் - முக்கால் கப், புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.
செய்முறை:  மோர், உப்பு, புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுதை சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து, எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட் (நடுத்தர சைஸ்) - ஒன்று (தோல் நீக்கி துருவவும்), சர்க்கரை - 4 டீஸ்பூன், ஃபுல் ஃக்ரீம் பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - ஒன்று.
செய்முறை: பாலை காய்ச்சி ஆறவைக்கவும். துருவிய கேரட், சர்க்கரை இவற்றை மிக்ஸியில் விழுதாக்கி... பால் சேர்த்து, அதில் ஐஸ்கட்டியை மிதக்கவிட்டு பரிமாறவும்.
குறிப்பு: கேரட் வாசனையை விரும்பாதவர்கள், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து அருந்தலாம்.

சப்போட்டா மில்க்‌ஷேக்
தேவையானவை: பழுத்த சப்போட்டா - 2 (தோல், கொட்டை நீக்கவும்), பேரீச்சம்பழம் - 2 (பொடியாக நறுக்கவும்), காய்ச்சி ஆறவைத்து, குளிர்வித்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 3 டீஸ்பூன்.
செய்முறை: சப்போட்டா, சர்க்கரை, பால் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, பேரீச்சை துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

பலாப்பழ சம்மர் ஸ்பெஷல்
தேவையானவை: பலாப்பழத் துண்டுகள் (மிகவும் சிறியதாக நறுக்கியது) - அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.

Related

குளிர் பானங்கள் 6817252538322112931

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item