30 வகை பியூட்டி - ஹெல்த் ரெசிப்பி!

'ஃபி ஃப்டி கே.ஜி தாஜ்மகால்’ என்று வர்ணிக்கப்படுவதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேசமயம்... அழகாவதற்காக, எது எதையோ மு...

'ஃபிஃப்டி கே.ஜி தாஜ்மகால்’ என்று வர்ணிக்கப்படுவதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேசமயம்... அழகாவதற்காக, எது எதையோ முயற்சி செய்து பார்த்துவிட்டு, கடைசியில் கண்ணாடியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொள்பவர்கள் பலர் உண்டு. மேலும் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? உடம்பில் பல பிரச்னைகள் இருந்தால், அதன் அவஸ்தை முகத்தைக் கடுகடுப்பாக ஆக்கத்தானே செய்யும்!
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உணவுப்பழக்கம் மூலமாகவே உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் வகையில், பல்வேறு உணவுப் பொருட்களைப் பற்றி அலசி, ஆராய்ந்து, 30 வகை 'பியூட்டி  ஹெல்த் ரெசிப்பி’க்களை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், "கூடவே கொஞ்சம் உடற்பயிற்சியும் அவசியம்'' என்று வலியுறுத்துகிறார். இதையெல்லாம் டிரை பண்ணிப் பாருங்க... தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்க!

 பொட்டுக்கடலை பால்ஸ்
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு  ஒரு கப், பொடித்த சர்க்கரை  முக்கால் கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், நெய்  தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மூன்றையும் நன்கு கலந்து... நெய்யை சூடாக்கி, மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்: குழந்தைகளுக்கு போஷாக்கு தரும். மெனோபாஸ் நேரத்தில் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

அவல்  தேங்காய் கேசரி
தேவையானவை: அவல்  ஒரு கப், தேங்காய்த் துருவல்  அரை கப், பொடித்த வெல்லம்  அரை கப், தண்ணீர்  அரை கப், நெய்  தேவையான அளவு, ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரி  சிறிதளவு.
செய்முறை: பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு, கரைந்ததும் வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பிலேற்றி, ஒரு கொதி வந்ததும் அவல் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சிறிதளவு சேர்க்கவும். கலவை சற்று கெட்டியானதும் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி தூவி சாப்பிடவும்.
பலன்: உடல் உறுதியாக இருக்க, சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

சம்பா கோதுமை புலாவ்
தேவையானவை: சம்பா கோதுமை ரவை -  2 கப், நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிய கேரட், குடமிளகாய், நறுக்கிய காலிஃப்ளவர், வேகவைத்த பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து)  ஒன்றரை கப், வெங்காயம்  ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு  தலா ஒன்று, பிரியாணி மசாலா  அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: ரவையுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, பொலபொலவென்று வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, உப்பு, பிரியாணி மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பொலபொலவென்று வெந்த ரவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
பலன்: இது... கார்போஹைட்ரேட், விட்டமின் சத்து நிறைந்தது.

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
தேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை  ஒரு கட்டு (ஆய்ந்து பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல்  கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து... கீரை, உப்பு சேர்த்து கொஞ்சமாக நீர் தெளித்துக் கிளறி மூடிவைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). வெந்ததும் தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலன்: மேனியை பொன் போல மினுமினுப்பாக ஆக்கும். கண் நரம்புகள் பலப்படும்.

வாழைத்தண்டு சூப்
தேவையானவை: வாழைத் தண்டு  சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும்), மோர்  ஒரு கப், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டு சாற்றுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்துப் பருகவும்.  
பலன்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

வீட் சூப்
தேவையானவை: ஏடு இல் லாத பால் - 2 கப், கோதுமை மாவு  - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர்  ஒன்றரை கப், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் கோதுமை மாவை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். மாவுடன் நீரைச் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்கவிடவும். பிறகு, பாலை ஊற்றிக் கிளறி, கஞ்சிப்பதம் வந்தவுடன் இறக்கி, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி குடிக்கவும்.
பலன்: உடலை இளைக்க வைக்கும். உளைச்சதை போடுவதை தடுக்கும்.

மேத்தி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு  - 2 கப், கடலை மாவு  ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு (இலைகளாக ஆய்ந்து, நீரில் அலசி சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், மாங்காய்தூள் (ஆம்சூர் பொடி)  ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய்  தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பலன்: தலைமுடியை பளபளவென்றும், மிருதுவாகவும் ஆக்கும். பொடுகுத் தொல்லையைப் போக்கும்.

வெள்ளரி  பூசணி ஜூஸ்
தேவையானவை: வெள்ளரிக்காய்  ஒன்று, பூசணிக்காய்  ஒரு சிறிய துண்டு, சுரைக்காய்  ஒரு சிறிய துண்டு, இஞ்சி  ஒரு சிறிய துண்டு, சர்க்கரை  கால் கப், மிளகு  சீரகப் பொடி  ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எலுமிச்சம்பழம் - 3.
செய்முறை: வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் மூன்றையும் தோல் சீவி அரைத்து வடிகட்டி சாறெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி, தனியே அரைத்து, வடிகட்டி சாறெடுக்கவும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறெடுக்கவும். அனைத்து சாறுகளையும் ஒன்றாக சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவையான நீர் விட்டுக் கலந்து அருந்தவும்.
பலன்: கண்களின் கீழ்வரும் கருவளையத்தைப் போக்கும். ஊளைச்சதையைக் குறைக்கும்.

டேட்ஸ் கேக்
தேவையானவை: மைதா  இரண்டரை கப், வெண்ணெய் ஒன்றே கால் கப், பால்   ஒன்றரை கப், கண்டன்ஸ்டு மில்க்-  400 மில்லி, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம்  அரை கப், ஆப்ப சோடா  அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர்  ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ்  ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: 2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்து, மீதமுள்ள மைதாவுடன் ஆப்ப சோடா, பேக்கிங் பவுடரை சேர்த்து சலிக்கவும் சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். பேரீச்சம்பழத்துடன் 2 டீஸ்பூன் மைதா சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
குழைத்த சர்க்கரை  வெண்ணெய் கலவையில் கண்டன்ஸ்டு மில்க், பால், மைதா, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் பேரீச்சம்பழக் கலவை சேர்த்து கலக்கவும். இதை... வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு டிரேயில் ஊற்றி, 'அவன்’ல் 180 டிகிரி சென்டிகிரேடில் 'பேக்’ செய்யவும்.
இதை வாணலியிலும் செய்யலாம். வாணலியில் மணல் போட்டு சூடு படுத்தி அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து அரை மணி நேரம் மூடி வைத்து 'பேக்’ செய்யவும்.
பலன்: இரும்புச் சத்து அதிகரிக்கும்.

மாதுளை தயிர் பச்சடி
தேவையானவை: புளிக்காத கெட்டித் தயிர்  ஒரு கப், மாதுளை முத்துக்கள்  ஒரு கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி  ஒரு டேபிள்ஸ்பூன், வாழைத்தண்டு  சிறிய துண்டு (பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்), கடுகு  அரை டீஸ்பூன்,  தேங்காய்த் துருவல்  கால் கப், பச்சை மிளகாய்  -2, முந்திரி  -6, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், முந்திரியை விழுதாக அரைத்து, கெட்டியான தயிரில் சேர்க்கவும். கடுகு, எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையையும் இதனுடன் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்
பலன்: இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

 வேப்பம்பூ பொடி
தேவையானவை: வேப்பம்பூ, உளுந்து  தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 10, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு  தலா கால் கப், பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன், சீரகம்  ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் உப்பைத் தவிர மற்ற அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடிக்கவும்.
பலன்: வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.

கேரட்  தேங்காய்ப்பால் கீர்
தேவையானவை: கேரட் - 2, தேங்காய்ப்பால்  அரை கப், பால்  ஒரு கப், சர்க்கரை  கால் கப், ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன், முந்திரி - 6 (பொடியாக நறுக்கவும்).
செய்முறை: கேரட்டை துருவி, மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து வைக்கவும். பால், தேங்காய்ப்பாலை ஒன்றாகக் கலந்து, சுண்டக் காய்ச்சி... சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். இதனுடன் கேரட் சாற்றை சேர்த்துப் பரிமாறவும்.
பலன்: உடலுக்கு சிவப்பழகைத் தரும். கண்கள் பளீரிடும்.

கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கொத்தமல்லித்தழை (மீடியம் சைஸ் கட்டு)  ஒன்று, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி  ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய்  - 2, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, வெல்லம்  அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து  தலா கால் டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித்தழையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து... தோல் சீவிய இஞ்சி, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறவிடவும். இதனுடன் கொத்தமல்லித் தழை, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் (சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்).
பலன்: உடல் குளிர்ச்சி பெறும். கண் பார்வை பலப்படும்.

சோம்பு டீ
தேவையானவை: ஏதாவது ஒரு பிராண்ட் டீத்தூள் - 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 டீஸ்பூன், சர்க்கரை  தேவையான அளவு.
செய்முறை: பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒரு கப் நீரை அடுப்பில் வைத்து டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வறுத்த பெருஞ்சீரகம், சர்க்கரை சேர்த்து, அதுவும் சேர்த்து நன்கு கொதித்த பிறகு இறக்கி, வடிகட்டி அருந்தவும்.
பலன்: கை, கால்களில் தளர்வாக காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கும்.

ஆப்பிள்  தக்காளி ஜூஸ்
தேவையானவை:  நன்கு பழுத்த சிவப்பு தக்காளி - 3, ஆப்பிள் - 1 (சிறியது), சர்க்கரை  தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு  தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்று சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து (விருப்பப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்), வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும். குளிர்ச்சி தேவையில்லை என்றால், அப்படியே அருந்தலாம்.
பலன்: விட்டமின் உட்பட பல்வேறு சத்துக்களைத் தரும்.

பீட்ரூட் சப்பாத்தி
தேவையானவை:  கோதுமை மாவு -  2 கப், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,  பீட்ரூட்  ஒன்று (மீடியம் சைஸ்), பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள்  தலா ஒரு டீஸ்பூன், பூண்டு -  3 பல், எண் ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட், பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள், பூண்டு, உப்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். கோதுமை மாவுடன் வடிகட்டிய பீட்ரூட் சாறு, நெய், உப்பு சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து) நன்கு பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டவும். அடுப் பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பலன்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

ஓட்ஸ்  ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்
தேவையானவை: ஓட்ஸ்  அரை கப், ஸ்ட்ராபெர்ரி - 8, பால்  அரை கப், சர்க்கரை  தேவையான அளவு, பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா)  சிறிதளவு.
செய்முறை: கடாயில் ஓட்ஸை லேசாக வறுக்கவும். மிக்ஸியில் ஓட்ஸ், சர்க்கரை, பால், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, டிரை ஃப்ரூட்ஸ் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து  எடுத்து, பரிமாறவும். குளிர்ச்சி தேவையில்லை என்றால், அப்படியே அருந்தலாம்.
பலன்: சருமத்துக்கு பொலிவு தரும்.

ஆரஞ்சு புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் ஆரஞ்சு சாறு - 2 கப், பட்டை, லவங்கம்  தலா ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பச்சைப் பட்டாணி  கால் கப், பச்சை மிளகாய் - 2, முந்திரி - 6, நெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் பட்டை, லவங்கம், தேவையான உப்பு சேர்த்து, ஊறவைத்த அரிசியை நீருடன்  சேர்த்துக் கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்: உடல் சூட்டைத் தணிக்கும்.

கோங்கூரா தொக்கு
தேவையானவை: கோங்கூரா (புளிச்சகீரை)  ஒரு கட்டு, புளி  எலுமிச்சை அளவு, வெல்லம்  சிறிய துண்டு, கடுகு (தாளிக்க)  ஒரு டீஸ்பூன், பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்), கடுகு (அரைக்க)  ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம்  ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 10, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
  
செய்முறை: புளிச்சகீரையை இலைகளாக கிள்ளி, கழுவித் துடைத்து துணியில் போட்டு ஒரு மணி நேரம் காயவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்தெடுக்கவும். புளிச்சக்கீரையை எண்ணெயில் வதக்கவும். இவற்றுடன் புளி (புளியை கொஞ்சம் கொதிநீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்தும் சேர்க்கலாம்), உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து வைத்த கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
பலன்: உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து இதில் கிடைக்கும்.

கார்ன்ஃப்ளேக்ஸ் பால்ஸ்
தேவையானவை: கார்ன்ஃப்ளேக்ஸ்  ஒரு கப் (கொரகொரப்பாக பொடிக்கவும்), தேன்  தேவையான அளவு, டிரை ஃப்ரூட்ஸ்  அரை கப் (முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா), வெண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து, உருகியதும் துண்டுகளாக்கிய டிரை ஃப்ரூட்ஸ், தேன் சேர்க்கவும். அடுப்பை அணத்து, பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலந்து, உருண்டைகளாக பிடிக்கவும்.
பலன்: உடல் இளைக்க உதவும்.

மிளகு  சீரக அடை
தேவையானவை:  பச்சரிசி மாவு  ஒரு கப், மிளகு, சீரகம் (சேர்த்து)  ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம்  ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எண்ணெய், உப்பு   தேவையான அளவு.
செய்முறை: மிளகு  சீரகத்தை கொரகொரப்பாக பொடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, பொடித்த மிளகு  சீரகம், உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கலக்கவும். மாவை வாழை இலை (அ) பிளாஸ்டிக் பேப்பரில் மெலிதான அடையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
பலன்: உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும்.

இஞ்சி மெதுபக்கோடா
தேவையானவை: இஞ்சி  ஒரு துண்டு, பச்சை மிளகாய்  - 2, கடலை மாவு  ஒரு கப், அரிசி மாவு  அரை கப், பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன், ஆப்பசோடா  ஒரு சிட்டிகை, வெங்காயம்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு,  எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், ஆப்பசோடா, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பலன்: ஜீரண சக்தியை அதிகரிக்கும். ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

வெஜிடபிள் ஜாம்
தேவையானவை:  கேரட் - 2, பீட்ரூட்  ஒன்று (துருவிக்கொள்ளவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), சர்க்கரை  தேவையான அளவு, சிட்ரிக் ஆசிட்  சிறிதளவு.
செய்முறை: காய்கறிகளை மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து, அடுப்பில் வைத்து, அல்வா பதத்துக்கு கிண்ட வேண்டும். பிறகு, ஆறவிட்டு பாட்டிலில் போட்டுவைத்து பயன்படுத்தலாம்.  
பலன்: தோல் பளபளவென்று மின்ன துணை புரியும்.

கொள்ளு  மிளகு பொடி
தேவையானவை: கொள்ளு, மிளகு  தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.
செய்முறை:  கொள்ளை நன்கு கழுவி, சுத்தம் செய்து ஈரம் போக உலர்த்தவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொள்ளு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறவிட்டு பொடி செய்யவும்.
பலன்: உடல் இளைக்க உதவும்.

பச்சைப் பயறு  ராகி சாட்
தேவையானவை: முளைக்கட்டிய ராகி (கேழ்வரகு)  ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு  ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம், தக்காளி  தலா அரை கப், நறுக்கிய வெள்ளரிக்காய்  கால் கப், எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா  சிறிதளவு, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), பொரி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை:  கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
பலன்: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். ஊளைச்சதை போடாமல் தடுக்கும்.

இஞ்சி ரசம்
தேவையானவை: இஞ்சி - 3 இன்ச் நீள துண்டு, தக்காளி - 3 (விழுதாக அரைக்கவும்), புளிக்கரைசல்  அரை கப், வேகவைத்த துவரம்பருப்பு  கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள்  தலா கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 2, மிளகுத்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, ரசப்பொடி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியை நன்கு தோல் சீவி அரைத்து வடிகட்டி, சாற்றை தனியாக வைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி விழுது, வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து, பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இஞ்சிச் சாறு, ரசப்பொடி சேர்த்துக் கிளறி  இறக்கவும்.
பலன்: உடல் பொலிவு பெறும். ஜீரணத்துக்கு உதவும். வயிற்றுப் பொருமல் தீரும்.

வாழைப்பூ துவையல்
தேவையானவை:  வாழைப்பூ (ஆய்ந்தது) ஒரு கப், மோர் கலந்த நீர்  தேவையான அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்-  4, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல்-  2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, கடுகு  அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்நிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் வாழைப்பூவை சேர்த்து சுருள வதக்கி, பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவையுடன், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்கவும்.
பலன்: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், சிறுநீரக கல் கரையவும் உதவும்.

பாகற்காய்  பொட்டுக்கடலை பொரியல்
தேவையானவை: பாகற்காய்  ஒன்று, மோர் கலந்த நீர்  தேவையான அளவு, பொட்டுக்கடலை  கால் கப், காய்ந்த மிளகாய்-  3, பூண்டு - 4 பல், பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை  தாளிக்கத் தேவையான அளவு, உப்பு  தேவையான அளவு.
செய்முறை:  பாகற்காயை பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, மோரில் ஊறவைத்த பாகற்காயை எடுத்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பாகற்காய் பாதி வெந்தவுடன், அரைத்த பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகக் கிளறி பொன்நிறமாக எடுக்கவும்.
பலன்: இமை முடி நன்கு வளரவும், தேமல் மறையவும் உதவும்.

முருங்கைக்கீரை பருப்பு
தேவையானவை: முற்றாத முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - 2 கப், கடலைப்பருப்பு  அரை கப், காய்ந்த மிளகாய்  -2, கடுகு, பெருஞ்சீரகம்  தலா கால் டீஸ்பூன், பூண்டு - 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு  தேவையான அளவு,  
செய்முறை: கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து... மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். அத்துடன் ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்த்து நன்கு கிளறி எடுத்து, சுடச் சுட பரிமாறவும்.
பலன்:உடலில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். ரத்தசோகை குணமாகும்

பச்சைப் பயறு பெசரட்
தேவையானவை: ஊறவைத்த பச்சைப் பயறு  ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  அரை கப், இஞ்சி  சிறிய துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை:  கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னி,  தக்காளி சட்னி இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை லேசாக வதக்கி, மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பலன்: உடலில் புரதச் சத்து அதிகரிக்க உதவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 7717378002345321586

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item