நெல்லிக்காய் ஜுஸ் & வாழைப்பழம் பசலை சாலட் & பார்பிக்யூ சிக்கன்: 3 ஸ்டார் ரெசிப்பி!!!

3 ஸ்டார் ரெசிப்பி!!! 'எப்போதும், உடல் சிக்கென இருப்பதற்கு தினமும் அருந்தும் நெல்லிக்காய்  ஜூஸ்தான் காரணம்'' என்கிறார் ந...

3 ஸ்டார் ரெசிப்பி!!!
'எப்போதும், உடல் சிக்கென இருப்பதற்கு தினமும் அருந்தும் நெல்லிக்காய்  ஜூஸ்தான் காரணம்'' என்கிறார் நடிகை அமலாபால். அவர் விரும்பிச் சாப்பிடும் ரெசிப்பிகளை செய்துகாட்டுகிறார் சென்னை, ராதா பார்க் இன் ஹோட்டல் செஃப் கோபிநாத். ரெசிப்பிகளின் பலன்களைப் பட்டியலிடுகிறார் இந்தியன் டயட்டீஷியன் அசோசியேஷனின் சென்னை பிரசிடெண்ட் குந்தலா ரவி.
பார்பிக்யூ சிக்கன்:
தேவையானவை: சிக்கன்  இரண்டு பெரிய துண்டுகள் (கால் கிலோ), பார்பிக்யூ சாஸ், ரெட் சில்லி பேஸ்ட், தக்காளி சாஸ்  தலா ஒரு டீஸ்பூன், நன்றாக அரைத்துக் காயவைத்த வெங்காயப் பொடி, மிளகுத்தூள்  தலா ஒரு சிட்டிகை, நறுக்கிய பூண்டு  5, துளசி  2 இலை, ஆலிவ் ஆயில்  2 டீஸ்பூன்.
பார்பிக்யூ சாஸ்: ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், நன்றாக அரைத்த வெங்காயம் அரை ஸ்பூன், இரண்டு தக்காளி அரைத்த விழுதைச் சேர்த்துகொள்ளவும். 85 கிராம் நாட்டு சர்க்கரை, வினிகர் 3 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்தால் பார்பிக்யூ சாஸ் ரெடி.
செய்முறை: பார்பிக்யூ சாஸ், ரெட் சில்லி பேஸ்ட், தக்காளி சாஸ், வெங்காயக் கலவை, பூண்டுத் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஆலிவ் ஆயில் சேர்த்து, சிக்கன் மீது தடவி, இரண்டரை மணி நேரம் வரை ஊறவைக்கவும். கம்பியில் சிக்கனை மாட்டி, நெருப்பில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காட்டவும். பார்க்கப் பொன் நிறத்தில் வந்தவுடன் எடுத்துவிடவும். சிக்கனுடன் காரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்:  புரதச்சத்து நிறைந்தது. எண்ணெயில் பொரிக்காமல் சமைப்பதால், இதய நோயாளிகள் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் பி6  செல்கள் பழுதடையாமல் பார்த்துக்கொள்ளும். நியாசின் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும். ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்வதால் இதயம், சருமத்துக்கு மிகவும் நல்லது.
வாழைப்பழம்  பசலை சாலட்
தேவையானவை: பச்சை வாழைப்பழம், தக்காளி  தலா 2, பசலைக் கீரை  அரைக் கட்டு, மஞ்சள் குடமிளகாய்  பாதி, செர்ரி தக்காளி  8, கருப்பு உப்பு (black salt)  ஒரு சிட்டிகை, கறி பவுடர்  ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், லெமன் ஜுஸ், தேங்காய் விழுது, முந்திரி சீஸ்  தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வாழைப்பழம், பசலைக் கீரை, தக்காளி, குடமிளகாய், செர்ரி அனைத்தையும் துண்டு துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து, கறி பவுடர், ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், தேங்காய் க்ரீம், முந்திரி சீஸ் சேர்த்தால், சாலட் ரெடி.
பலன்கள்: பொட்டாஷியம் நிறைந்த உணவு. நொறுக்குத் தீனிக்குப் பதில் இதனை சாப்பிடலாம். உணவுகளில் கிடைக்கும் சக்திக்கு நிகரான சக்தியைக் கொடுக்கும். பசலைக் கீரை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும். கண்களுக்கு நல்லது. காய்களும் சேர்ந்திருப்பதால், உடலுக்குச் சத்துக்களைக் கொடுத்து, மிகவும் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
நெல்லிக்காய் ஜுஸ்
தேவையானவை: நெல்லிக்காய் 3, துளசி  2 இலைகள், இளநீர், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, இளநீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். இதில் உப்பு, துளசி இலைகள் சேர்த்து அருந்தவும்.
பலன்கள்:  செரிமானப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் புற்று நோய், இதயப் பிரச்னைகள் வராது. நெல்லிக்காய் சாப்பிடுவதால், ஜலதோஷம் பிடிக்கும் என்பது தவறு. தொண்டைத் தொற்றுகளை நீக்கக்கூடியது.
குறிப்பு: உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் உப்பும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையையும் சேர்க்கக் கூடாது.

Related

சமையல் குறிப்புகள்-அசைவம்! 3719764382996504305

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item