சமைக்காமல் சாப்பிடலாம்...! மூலிகை சமையல்!!

சமைக்காமல் சாப்பிடலாம்...! காய்கறிகளைச் சமைக்கும் போது அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. சத்துக்கள் குறையாமல், சுவைய...

சமைக்காமல் சாப்பிடலாம்...!
காய்கறிகளைச் சமைக்கும் போது அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. சத்துக்கள் குறையாமல், சுவையான உணவு வகைகளை எப்படி சமைப்பது? இயற்கை வேளாண் ஆர்வலரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மாணவருமான சரவணன், சுவையான, சத்தான சில உணவு வகைகளைச் செய்து காட்டியுள்ளார். வேகவைக்காமல், எண்ணெய்யில் பொரிக்காமல் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். புதுச்சேரி உழவர் சந்தைக்குச் செல்பவர்கள், சரவணனின் உணவை சுவைத்திருக்கக்கூடும்.
அருகம்புல் சுவை நீர்
தேவையானவை: அருகம்புல்  அரைக் கைப்பிடி, மிளகு, சீரகப் பொடி  ஒன்றரை டீஸ்பூன், வெல்லப்பாகு  சுவைக்கு ஏற்ப, எலுமிச்சைச்சாறு  10 மில்லி.
செய்முறை: அருகம்புல்லைத் துண்டு துண்டுகளாக நறுக்கி, மிக்சி அல்லது உரலில் போடவும். 50 100 மி.லி தண்ணீர் ஊற்றி மிளகு, சீரகப்பொடி சேர்த்து அரைக்கவும். (முதல் வேகத்தில்) அரைத்தவுடன் 300 மி.லி தண்ணீர் கலந்து, பிறகு வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, தேவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து பரிமாறவும்.

பயன்கள்: சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் குடித்துவர, நோய் கட்டுக்குள் இருக்கும். ஊளைச்சதை உள்ளவர்கள் குடித்துவர, உடல் மெலியும். ரத்தசோகை, மற்றும் உடல் பலவீனமானவர்கள் தொடர்ந்து குடித்துவர, உடல் பலப்படும்.
பச்சைக் கடலை மிக்சர்
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக் கடலை ஒரு கப், பாசிப் பயிறு அரை கப், பச்சை வேர்க்கடலை, தட்டை அவல்  தலா கால் கப், மிளகு, சீரகம்  தலா அரை டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை: பயறு வகைகளை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து, லேசாக முளை வந்தவுடன் ஒன்றாகக் கலந்துவிடவும். அதனுடன் அவல், தேவையான அளவு உப்பு, மிளகு, சீரகம் பொடித்துக் கலக்கவும். இப்பொழுது, பச்சைக்கடலை மிக்சர் தயார். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

பயன்கள்: தேகம் மெலிந்தவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் புஷ்டியாகும்.
வில்வ இலைச் சாறு
தேவையானவை: வில்வ இலை  அரைக் கைப்பிடி, மிளகு, சீரகப் பொடி, எலுமிச்சைச்சாறு, தேன் அல்லது  வெல்லப் பாகு  தேவையான அளவு.
செய்முறை: வில்வ இலையை மிக்சியில் போட்டு, அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். 50 மி.லி தண்ணீர் விட்டு அரைக்கவும். இதில் 300 மி.லி தண்ணீர் கலந்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு அல்லது  தேன்  கலந்து பரிமாறவும்.

பயன்கள்: உடல் சூடு தணியும். விடாத சளித் தொல்லை உள்ளவர்கள் இதனை அருந்திவர, உடல் பலம் பெற்று, ஆரோக்கியம் அடைவர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பானம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாவுஉருண்டை
தேவையானவை: துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு  200 கிராம், பொட்டுக்கடலை மாவு  100 கிராம், தினை அரிசி மாவு  100 கிராம், நாட்டுச் சர்க்கரை  சுவைக்கு ஏற்ப, எலுமிச்சம் பழம்  2.

செய்முறை: துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் எலுமிச்சைச்சாறு,  நாட்டுச் சர்க்கரை கலந்து, சம அளவு தினை அரிசி, பொட்டுக்கடலை மாவு சேர்த்து, லட்டுகளாகப் பிடித்துப் பரிமாறவும்.
பயன்கள்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சாப்பிட்டவுடன் குளுகோஸாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியைத் தரும்.
பாகற்காய் ஊறுகாய்
தேவையானவை: பாகற்காய்  100 கிராம், இஞ்சி துருவியது  50 கிராம், எலுமிச்சம்பழம்  2, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:நறுக்கிய பாகற்காய் மற்றும் துருவிய இஞ்சியுடன், எலுமிச்சைச்சாறைக் கலந்து, மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
பயன்கள்: சர்க்கரை நோயாளிகள் இந்த ஊறுகாயைப் பயன்படுத்தலாம்.
கம்புப் புட்டு
தேவையானவை: கம்பு ஒரு கப், நாட்டுச் சர்க்கரை  அரை கப், ஏலக்காய்  2, தேங்காய்த் துருவல்  அரை கப், பசு நெய் தேவையான அளவு

செய்முறை: 4 மணிநேரம் ஊறவைத்த கம்பை, நீர் போக வடிகட்டி, மிக்ஸியில் அல்லது  உரலில் போட்டு, அதனுடன் ஏலக்காய் சேர்த்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை, சிறிது நெய் கலந்து பரிமாறவும்.

பயன்கள்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறுதானிய உணவாகும்.
நெல்லிக்காய் சாஸ்
தேவையானவை: துருவிய நெல்லிக்காய் , தேங்காய்த்துருவல்  தலா 100 கிராம், முந்திரிப் பருப்பு  50 கிராம், வெல்லப்பாகு  தேவையான அளவு.
செய்முறை: துருவிய நெல்லிக்காய், தேங்காய்த்துருவல், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து, சப்பாத்தி, பிரெட், ரொட்டி, சமோசா, வகைகளுடன் பரிமாறவும்.

பயன்கள்: சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம். நெல்லியில் வைட்டமின் சி உள்ளதால், கண்பார்வைக்கு நல்லது, உடல் வலுவாகும்.
பப்பாளிப் பழச்சாறு
தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய நாட்டுரகப் பப்பாளி  200 கிராம், கொட்டை நீக்கிய பேரீச்சை  50 கிராம்,   வெல்லப்பாகு  தேவையான அளவு.

செய்முறை: பப்பாளித் துண்டுகளுடன் பேரீச்சையும் சேர்த்து,  மிக்ஸியில் சிறிதுத் தண்ணீர் விட்டு கூழாக அரைக்கவும், பிறகு அந்தக் கூழுடன் சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு  மற்றும் தேவையான அளவு நீர் கலந்து பரிமாறவும்.
பயன்கள்: பழமாகச் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்த வகைப் பழச்சாறைக் கொடுக்கலாம். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. உடனடியாக குளுகோஸாக மாறி, சக்தியைத் தரக்கூடியது. பேரீச்சை கலந்துள்ளதால் இரும்புச் சத்தும் உடலில் சேரும்.
தேங்காய்ப் பால் அவல் சாதம்
தேவையானவை: அவல்  100 கிராம், தேங்காய்  ஒரு மூடி,   வெல்லப்பாகு  சுவைக்கு ஏற்ப, முந்திரிப் பருப்பு  20 கிராம்.

செய்முறை: தேங்காயை மிக்ஸியில் அரைத்துப் பால் எடுத்துக்கொள்ளவும், முந்திரியை விழுதாக அரைத்து, இரண்டையும் கலந்து, அவலை நீரில் கழுவிச் சேர்க்கவும். பிறகு சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்துப் பரிமாறவும்.
பயன்கள்:  சிற்றுண்டியாக விரும்பி உண்ணக்கூடிய உணவு. சர்க்கரை நோயாளிகள் இதனைத் தொடர்ந்து சாப்பிட, நோய் கட்டுக்குள் இருக்கும்.
முருங்கைக் கீரை சுவை நீர்
தேவையானவை: முருங்கைக் கீரை  அரைக் கைப்பிடி, மிளகு சீரகப் பொடி  ஒரு டீஸ்பூன், எலுமிச்சை  ஒரு பழம்,   வெல்லப்பாகு  சுவைக்கு ஏற்ப.

செய்முறை: முருங்கைக் கீரை, மிளகு, சீரகப் பொடியை மிக்ஸியில் போட்டு 100 மில்லி தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதனுடன் 500 மில்லி தண்ணீர் கலந்து, வடிகட்டி எலுமிச்சைச்சாறு  கலந்து, சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து பரிமாறவும்.

பயன்கள்: முருங்கைக் கீரை தொடர்ந்து சாப்பிட  ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி, இரும்புச் சத்து குறைபாடு, ஆண்மைக் குறைபாடு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும்.

Related

மூலிகை சமையல் 8603923413912780618

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item