கணினி... கொஞ்சம் கவனி! கணிணிக்குறிப்புக்கள்!!

கணினி... கொஞ்சம் கவனி! உங்கள் பாஸ்வேர்டு பத்திரமா? இ -மெயில்களின் வரவுக்குப் பின்தான், இரண்டு பேருக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களி...

கணினி... கொஞ்சம் கவனி!
உங்கள் பாஸ்வேர்டு பத்திரமா?
-மெயில்களின் வரவுக்குப் பின்தான், இரண்டு பேருக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களின் காலம் குறைந்துள்ளது, பிரைவஸி அதிகரித்துள்ளது என அதன் ப்ளஸ் பாயின்ட்டுகளை மெச்சும் காலம் இல்லை இது. காரணம், உங்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கும் உங்களது பாஸ்வேர்டு மற்றவர்களாலும் எளிதில் திருடப்படக்கூடியதாக உள்ளதால், நீங்கள் சந்திக்க நேரும் ஆபத்துகள் பல.

என்ன ஆபத்துகள்?
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பயன்படுத்தும் கணினி, நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அதுவும் பாதுகாப்பில்லாததுதான். இன்டர் நெட்டில் தோன்றும் விளம்பரங்கள் சில பிரபல இ-மெயில் தளங்களைப் போன்றும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும் (ஃபிஷிங்). ஒரிஜினல் எது, டூப்ளிகேட் எது என்பதை அறியமால் 'லாக் ஆன்' ஆகிவிட்டால், உங்கள் தகவல்கள் திருடப்பட்டு வேறு ஓர் இடத்தில் பதிவு செய்யப்படும். மேலும் உங்கள் இமெயிலின் பாஸ்வேர்டு தெரிந்துவிட்டால் போதும்... உங்கள் பர்சனல் விஷயங்கள் அனைத்தும் திருடப்பட்டுவிடும்.
அடுத்ததாக, பெர்சனல் கணினி இன்றி, நீங்கள் அவசரத்துக்காக அருகில் உள்ள ஒரு பிரவுஸிங் சென்டருக்குச் சென்று, அலுவலகத்துக்கு ஒரு மெயில் அனுப்ப நேரிடலாம். அல்லது சமூக வலைதளம் வாயிலாக உங்கள் நண்பர், உறவினருக்கு செய்தி அனுப்பலாம். அப்போதுதான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. 'ஸ்கிரீன் கேப்ச்சரிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் கணினி திரையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கலாம். அல்லது உங்கள் கணினியின் உள்ளமைப்பில் பதிவாகும் 'ஹிஸ்டரி’யில் பதிவாகி இருக்கும் உங்களது சமீபத்திய இணையதள பார்வைகள் மூலம் கூட புரோகிராமை மாற்றி எழுதி, உங்கள் பாஸ்வேர்டை பெற முடியும்.

அடுத்த ஆபத்து நேரும் வழி இது. உங்கள் மின்னஞ்சல்களில் சில சமயம் இதுபோன்ற ஒரு செய்தி இடம் பெறலாம். 'உங்கள் பாதுகாப்புக்காக உங்கள் கணக்கை நாங்கள் மேம்படுத்துகிறோம். அதற்கு உங்கள் பாஸ்வேர்டு மற்றும் பாஸ்வேர்டு புதுப்பிக்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்’ என்று கேட்கும். அப்போது நீங்களும் நம்பி அளித்தால், சில நேரங்களில் அது ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கும். அப்போது அவர்கள் திருட நினைத்ததை நீங்களே தானாக முன்வந்து கொடுத்தது போல் ஆகிவிடும்.

தப்புவது எப்படி?
அலுவலக அல்லது வீட்டு கணினிகளை பயன்படுத்தும்போதும், நீங்கள் செல்ல வேண்டிய இமெயில் தளத்தையோ அல்லது ஷாப்பிங் இணையதளங்களையோ நீங்களே டைப் செய்து உள்நுழைவது சிறந்தது.

 பிரவுஸிங் சென்டரில் லாக் இன் செய்யும்போது, அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு, 'ஹிஸ்டரி’ பதிவுகளை அழிக்கத் தவறாதீர்கள். அதோடு பிரவுஸர் அமைப்பில் உள்ள குக்கீஸ் பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டே அங்கிருந்து செல்லுங்கள்.

 பிரவுஸிங் சென்டரில் கணினி பயன்படுத்தும் போது, நீங்கள் மவுஸை நகர்த்தாமல் கர்ஸர் எங்காவது நகர்கிறதா என்று கவனியுங்கள். அப்படி இருந்தால் உடனே அந்த கணினி மையத்தில் பிரவுஸிங் செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில், அந்த மையம் உங்களை ஸ்கிரீன் கேப்சரிங் அல்லது ஸ்கிரீன் வியூவர் மூலம் கண்காணிக்கிறது என்று அர்த்தம்.

 உங்கள் செல்போனில் இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை இணைத்து வைத்திருந்தால் அதனை யாரிடமும் பகிராதீர்கள். இன்று பெரும்பாலான போன்களில் உள்ள 'ஷோ பாஸ்வேர்டு’ ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக எடுக்கலாம் என்பதால், அதில் கவனமாக இருங்கள்.

உங்களுக்கு உதவும் 'அசிஸ்டென்ட்’!
ன்றாடம் நிறைய வேலைகள் உள்ளவரா நீங்களா? உங்களுக்கு யாராவது ஒருவர் உதவிக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்காகவே வந்திருக்கிறது ஒரு ஆப்ஸ். இந்த ஆப்ஸ் உங்களது அன்றாட வேலைகளை நினைவு வைத்து, நீங்கள் இன்று சந்திக்க இருக்கும் நபர்களை உங்களுக்கு சரியான நேரத்தில் நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல், குரல் வழியாகவும் நினைவூட்டுகிறது. இதனால் உங்களது முக்கிய சந்திப்புகளை மறந்தாலோ, அல்லது அவசரத்தில் மதிய உணவை சாப்பிட மறந்தாலோ இந்த ஆப்ஸ் உங்களுக்கு ஞாபகப்படுத்திவிடும். 

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ், சிறந்த ஆப்ஸுக்கான பல விருதுகளை குவித்துள்ளது. 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ள இந்த ஆப்ஸ் 5 கோடி டவுன்லோடுகளை தாண்டியுள்ளது.
நீங்களும் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்ய:  


Related

கணிணிக்குறிப்புக்கள் 6784478078462509385

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item