104‘‘நாங்க இருக்கோம்’’இலவச அழைப்பு உதவி மையம்! உபயோகமான தகவல்கள்!!

104‘‘நாங்க இருக்கோம்’’இலவச அழைப்பு உதவி மையம் 104 மருத்துவ உதவி மையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், 'நான்...

104‘‘நாங்க இருக்கோம்’’இலவச அழைப்பு உதவி மையம்

104 மருத்துவ உதவி மையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், 'நான் ஒரு விவசாயி... எனக்கு கடன் தொல்லை தாங்கலை, நான் ரயில் தண்டவாளத்தில் தலைவைச்சு சாகப்போகிறேன்...’ என்றார். 
அந்த அழைப்பை எதிர்கொண்ட தகவல் மைய அலுவலர் பதற்றம் அடையாமல், அவரிடம் ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தபடியே அவரது வயது, குடும்பத்தைப் பற்றி நிறையக் கேட்டார். பின்னர், 'கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க... நீங்க, இப்போ இறந்துட்டதா நினைச்சுக்குங்க... உங்க குடும்பம் என்ன செய்யும்? உங்க பசங்க நிலைமை என்ன ஆகும்?’ என்றார். எதிர்த்தரப்பில் அமைதி. சிறிது நேரத்தில் அந்த விவசாயி அழ ஆரம்பிக்க, அவரை ஆறுதல்படுத்தி, தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டது 104 சேவை.  

இரண்டு நாட்கள் கழித்து, 'நான் மிகப் பெரிய தவறு செய்ய இருந்தேன். நல்ல வேளையாக என் மனதை மாற்றி உண்மை நிலையைப் புரியவைத்தீர்கள்’ என்று நன்றி தெரிவித்தார் அந்த விவசாயி.

100, 101, 108 என பல்வேறு சேவைகளைப் பற்றி நமக்குத் தெரியும். போலீஸ், தீ விபத்து, மருத்துவ உதவி போன்றவைகளுக்கு இந்த எண்களைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். அதில் புதிதாக இணைந்திருப்பதுதான் 104 சேவை. பலரது பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கான தீர்வைச் சொல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த  அற்புத சேவை மையம். அரசு உதவியோடு, எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஜி.வி.கே (Emergency Management and Research Institute & GVK) என்ற நிறுவனம் இந்தச் சேவையை இயக்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் எந்த பகுதியிலிருந்தும், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7) இந்தச் சேவையை இலவசமாகப் பெறலாம்.
இந்த மையத்தின் மேலாளர் பிரபுதாஸிடம் பேசினோம். '104க்கு அழைப்பு வந்ததும், உடனடியாக தகவல் சேகரிக்கப்பட்டு, அது மனநல ஆலோசனைக்கா, மருத்துவ ஆலோசனைக்கா, அரசு மருத்துவ சேவைகளுக்கா என்று அழைப்புகளைத் தனித்தனியே பிரித்து, அதற்கான வல்லுநர்களிடம் அழைப்பை மாற்றி விடுவோம். பிறகு, தொடர்பு கொண்டவரின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவருக்கான முதலுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படும். உடல்நலப் பிரச்னைக்கான  முதலுதவி மற்றும் ஆலோசனை காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, வலிப்பு, வயிற்றுப் போக்கு, மாதவிலக்கு பிரச்னை, பிரசவ வலி, நாய்க்கடி, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளின் கடிக்கான முதலுதவி, இரவில் திடீரெனத் தோன்றும் உடல் உபாதைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபத்துகள் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் முதலுதவிகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம்.

* மனநல ஆலோசனை
சோர்வு, பயம், கோபம், தேர்வு பயம், மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணம், குடி மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான ஆலோசனை, தீய பழக்கத்தில் இருந்து தன் துணையைச் சரிசெய்வதற்கான ஆலோசனை, தாம்பத்ய உறவில் சிக்கல், துணையின் தவறான போக்கு, டென்ஷன், தம்பதியர்களின் உறவில் பிரச்னை, தூக்கமின்மை, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அனைத்து மனப் பிரச்னைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.

* தகவல் மற்றும் விளக்கங்கள்
முதலுதவி பற்றிய தகவல்கள்,  ரத்ததானம், கண்தானம், ப்ளூ கிராஸ் குறித்த உதவிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், சந்தேகங்கள், லேப் ரிப்போர்ட் விளக்கங்கள், மருந்்தகச் சீட்டிலுள்ள மருந்துகளின் தகவல்கள், மருத்துவமனைகள் அதைச் சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் போன்ற அனைத்துக்குமே 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அரசு தொடர்பான புகார்
அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் சேவையில் பிரச்னையோ, குறையோ என்றால்கூட, 104க்கு அழைக் கலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லை போன்ற அனைத்துப் புகார்களுக்கும் இந்த 104ஐ  தொடர்பு கொள்ளலாம்.  பிரச்னைகளைப் பதிவு செய்ததும்,  உடனடியாக அந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வரும் அழைப்புகளில் 90 சதவிகிதம் குடிப்பழக்கம் மற்றும் தாம்பத்ய உறவு சார்ந்த பிரச்னைகளே. மாணவர்கள் சிலர் பரீட்சை குறித்த பயத்துக்கும் அழைப்பது  உண்டு.
இந்த இலவச அழைப்பு உதவித் திட்டத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.  மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதால், மக்களுக்கு உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்கின்றன.   
                 
சேவை அலுவலகம்
104 அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் டாக்டர் கோட், தலையில் ஹெட்போனுடனேயே தொலை பேசியில் அழைத்தோருக்கு ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் மருத்துவம் தொடர்பான அனுபவத்தைப் பெற்றவர்கள். இந்த மையத்தில் 50 முதல் 60 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மூன்று ஷிஃப்டாகப் பிரித்து, 24 மணி நேரமும் (24/7) மக்களுக்கு முதலுதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி வருகின்றனர் என்பது சிறப்பு.
104க்கு ஒரு சல்யூட்!

Related

உபயோகமான தகவல்கள் 170359992066873837

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item