எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?வீட்டுக்குறிப்புக்கள்!

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு? கி ச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார...

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?
கிச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

வாங்கும் டப்பாக்கள் எல்லாம் ஒரே அளவிலோ அல்லது ஒரே டிசைனாகவோ இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

காய்கறி நறுக்கும்போது அடியில் ஒரு பேப்பரை போட்டுக்கொண்டால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

25 கிலோ அரிசியை வாங்கிவந்தால், அதை இரண்டு, மூன்று டப்பாக் களில் பிரித்துச் சேமிக் கலாம்.

எண்ணெய் வைக்கும் இடத்துக்கு அருகில் கத்தி, தேங்காய் துருவி, குட்டி ஸ்பூன் போன்றவற்றை வைத்தால், அவசரத் துக்கு தேடும்படி இருக்காது.

அன்றாட தேவைக்கான மளிகை, மசாலா பொருட்களை அடுப்புக்கு இடதுபுறத்தில் வைத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் கீழே கொட்டி விட்டால், உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவைப் போட்டு, வழித்தெடுத்தால், எண்ணெய் பசை இருக்காது.
அடுப்புக்கு கீழே உள்ள 'சிலாப்’பில், தினமும் பயன்படுத்தும் குக்கர் மற்றும் கடாய்களை முதல் வரிசையில் வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மட்டுமே பயன் படுத்தும் மாவு டப்பாக்களை அடுத்த வரிசையில் வைத்துக் கொள்ளலாம்.

முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால் உடனே அதன் மீது உப்பைக் கொட்டினால், வாடை குறைந்துவிடும், சுலபமாக சுத்தம் செய்யலாம். 

சமையலறையில் நாம் நிற்பதற்கு வலதுபுறத்தில் மிக்ஸி, கிரைண்டர், 'மைக்ரோவேவ் அவன்’ போன்றவற்றை வைத்தால், கையாள சுலபமாக இருக்கும்.

கண்ணாடிப் பொருட்கள், கப் அண்ட் சாஸர் போன்றவற்றை எப்போதும் அடுப்புக்கு எதிர்புறத்தில், மேலேதான் வைக்க வேண்டும். அடுப்பு அருகில் வைத்தால் பிசுபிசுப்பு ஒட்டும். வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

'சிலாப்’களாக இல்லாமல், மாடுலர் கிச்சன்களில் வரிசையாக பல 'டிரா’க்கள் வைத்திருப்பவர்கள், முதல் வரிசையில்... டீ, காபித்தூள், சர்க்கரை போன்ற... காலை எழுந்ததும் தேவைப்படும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது அடுக்கில்... சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா பொருட்கள்; மூன்றாவது அடுக்கில்... பருப்பு வகைகள்; நான்காவது அடுக்கில்... அஞ்சறைப் பெட்டி, அருகிலேயே காய்ந்த மிளகாய் என வைத்துக்கொள்ளலாம். மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளை ஐந்தாவது அடுக்கில் வைக்கலாம். கடைசி அடுக்கில் அரிசி வகைகளை வைக்கலாம்.

அடுப்புக்கு வலப்புறம் எண்ணெய் கன்டெய் னர்களை வைக்கலாம். சந்தையில் இப்போது பலவிதமான 'ஹூக்’கள் கிடைக்கின்றன. அவற்றை சுவரில் மாட்டி, ஆயில் கன்டெய்னரை  மாட்டிவிட்டால், கீழே சிலாப்பில் எண்ணெய் பசைபடும் என்கிற கவலை இல்லை. சுவரில் மாட்ட வசதியில்லை என்றால், சின்ன ஸ்டாண்டு வைத்து, அதில் தடிமனான அட்டை வைத்து, அதன் மீது எண்ணெய் கன்டெய்னரை வைத்துப் பயன்படுத்தலாம். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.

உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். வெறும் கையில் உப்பை எடுத்தால், உப்பில் நீர் கசியும். பச்சை மிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒருமுறை அதனை மாற்றினால் போதுமானது.

துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்துவிட்டால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

'என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி' என்ற நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் அதன் மீது உரிமையும், அக்கறையும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் வரும்!

Related

வீட்டுக்குறிப்புக்கள் 2917447425723153806

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item