ராகி மில்க் ஷேக்! சமையல் குறிப்புகள்-சைவம்!!
ராகி மில்க் ஷேக் தேவையானவை: ராகி மாவு - 100 கிராம், பால் - ஒரு லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது), பொடித்த சர்க்கரை - 150 கிராம், இஞ்சி - ...
https://pettagum.blogspot.com/2014/08/blog-post_54.html
ராகி மில்க் ஷேக்
தேவையானவை:
ராகி மாவு - 100 கிராம், பால் - ஒரு லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது),
பொடித்த சர்க்கரை - 150 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, பாதாம்,
பிஸ்தா, முந்திரி (சேர்த்து) - 50 கிராம் (சூடான நீரில் ஒரு மணி போட்டு
வைத்து, விழுதாக அரைக்கவும்), எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், சீவிய
முந்திரி - பிஸ்தா - 10 கிராம்.
செய்முறை:
ராகி மாவை சுடுநீரில் சேர்த்து, மாவு பதத்தில் கலக்கி, மூடி வைக்கவும்.
பின்னர் பொடித்த சர்க்கரை, இஞ்சி, பால் மூன்றையும் மிக்ஸியில் நுரை வரும்
வரை அடிக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, கலக்கி வைத்த ராகி மாவு
மற்றும் பாதாம் - பிஸ்தா - முந்திரி விழுது சேர்த்துக் கலந்து, மறுபடியும்,
நுரை வரும் வரை அடித்து நீளமான டம்ளரில் ஊற்றி சீவிய முந்திரி, பிஸ்தா
தூவி அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பருகலாம்.
குறிப்பு: இது வயதானவர்களுக்கு மிகவும் ஏற்ற பானம்.
அவர்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்காமல் அப்படியே கொடுக்கலாம். ஒல்லியாக
இருப்பவர்கள், இந்தப் பானத்தை தொடர்ந்து பருகினால், சதைபோடுவார்கள்.
Post a Comment