மாதுளை லாலிபாப் ! சமையல் குறிப்புகள்-சைவம்!
மாதுளை லாலிபாப் தேவையானவை: மாதுளம்பழ ஜூஸ் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள்ஸ்ப...
https://pettagum.blogspot.com/2014/07/blog-post_8616.html
மாதுளை லாலிபாப்
தேவையானவை: மாதுளம்பழ
ஜூஸ் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், வெண்ணெய்
அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன், டூத் பிக் குச்சி - தேவையான அளவு.
செய்முறை: மாதுளம்பழ
ஜூஸுடன் சர்க்கரை சேர்த்து வாணலியில் கொதிக்கவிடவும். பாகு உருட்டு பதம்
வரும் சமயம் (கலவையிலிருந்து சிறிது எடுத்து உருட்டினால், உருண்டை செய்ய வர
வேண்டும்), மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெண்ணெய் (அ) நெய்
சேர்க்கவும். பிறகு, கீழே இறக்கி வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி, சிறுசிறு
உருண்டைகளாக உருட்டி, டூத் பிக் செருகினால்... குழந்தைகளின் மனம் கவரும்
மாதுளை லாலிபாப் தயார்!
இதேபோல் விதம்விதமான பழ ஜூஸ்களைக் கொண்டு லாலிபாப் செய்து தரலாம்.
Post a Comment