முக‘வரி’கள் மறைய...! மருத்துவ டிப்ஸ்!!

முக‘வரி’கள் மறைய... சு ருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே, தோலில் ஏற்படும் சுருக்கங்கள...

முக‘வரி’கள் மறைய...
சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே, தோலில் ஏற்படும் சுருக்கங்கள் 'மூப்பு நெருங்குகிறது’ என்பதைச் சொல்லாமல் சொல்லும். இந்தச் சுருக்கங்களைப் போக்க பலரும் பியூட்டி பார்லர், மாற்று மருத்துவ சிகிச்சைகள் எனத் தீவிர முயற்சியில் இறங்குவார்கள். ஆனால், அவர்களின் கவனம் முழுவதும் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதில் இருக்குமே தவிர, கை, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் சுருக்கங்களை பற்றிய அக்கரை இருக்காது. வயதின் மூப்பு, சருமத்தில் எங்கெல்லாம் தெரியும்? வந்த சுருக்கங்களைக் குறைக்கவும், வராமல் தடுக்கவும் என்ன செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ்களைத் தருகிறார் அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.

'நம் தோலில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்கள், தோலுக்கு மிருதுவையும், உறுதித்தன்மையையும் தருகிறது. வயது அதிகரிக்கும்போது புரதங்களின் அளவு உடலில் குறையும். இதன் காரணமாகவே தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. முதலில் உள்ளங்கையின் மேற்புறத்தில்தான் சுருக்கங்கள் தோன்றும். ஏனெனில், இந்தப் பகுதியில்தான் நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிறகுதான் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் தெரியும்.

பொதுவாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சுருக்கங்கள் அதிகம் வருவது இல்லை. வறண்ட தோல் உடையவர்களுக்கு கொலாஜென்  குறைபாட்டால், விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.
35 முதல் 40 வயதுடையவர்களுக்கு சுருக்கம் ஏற்பட்டால், அது இயற்கையாக வயது அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஆனால் 25 முதல் 30 வயதுடைய வர்களுக்கு சுருக்கம் ஏற்படுமானால், அவர்களின் வாழ்க்கைமுறையிலோ, உணவுப் பழக்கத்திலோ பிரச்னைகள் அல்லது மரபு சார்ந்த பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது.

புகைபிடித்தல், சோப் மற்றும் க்ரீம்களை அடிக்கடி மாற்றுதல், சருமத்தில் சூரிய ஒளி அதிகம் படுதல், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மற்றும் நம் முக பாவனைகளும்கூட சுருக்கங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. மேலும், சிலர் தூங்குவதற்கு முன்பு, முகத்தில் க்ரீம்கள், முல்தானி மட்டி, சந்தனம்  என ஏதேனும் பூசிக்கொண்டு படுப்பார்கள். எந்த ஒரு பொருளையும் முகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இதனால், தோல் வறண்டு, அச்சுப் பதிந்து சுருக்கங்கள் ஏற்பட்டு விடும்.

சரும சுருக்கங்களைப் போக்க மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் இருந்தாலும், அவற்றுக்கான கட்டணம் அதிகம். பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். எனவே, சுருக்கங்கள் வந்தவுடன் அதைப் போக்க முயற்சி எடுப்பதைவிட, வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும், என்றும் இளமையாக இருக்கலாம்!' என்கிறார் ஹசீனா.

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்..
பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும்.
 வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 இளமையை தக்க வைக்க, மீனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மீனில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்கும். 'காட் லிவர் ஆயில்’ தோலில் எண்ணெய் சத்தை அதிகரிக்கும்.
 வாரம் ஒரு முறை, குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெய் எடுத்து கை, கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு, சுருக்கங்களைத் தடுக்கும்.
 தயிர், சுருக்கங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படும். கழுத்து மற்றும் கைகளில் தயிரைத் தடவிக் கழுவுவதைத் தொடர்ந்து செய்து வந்தால் சுருக்கங்கள் வராது.
 வெயிலில் வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன், குளிர் காலத்தில் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்தலாம். அதுவும் சருமத்துக்கு ஏற்ற எஸ்பிஎஃப் அளவை பார்த்து க்ரீம்கள் வாங்க வேண்டும்.
 முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆயில் புல்லிங் செய்யலாம்.
 வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும்கூட சருமத்தில் முதுமையை நெருங்கவிடாது.  
 மூளையையும் மனதையும் எவ்வளவு ரிலாக்ஸ்டாக வைத்திருக்கிறோமோ அதே அளவு நம் உடலும் தோலும் சிறப்பாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம், யோக முத்திரைகள் போன்ற பயிற்சிகளைச் செய்வது அவசியம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4856262854008779605

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item