அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்!உடற்பயிற்சி!!

அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்! ஆ ரோக்கியமாக வாழ நமக்கு நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 2,800 கலோரிகள் தேவை. ஆனால், மாறிவிட்ட உணவு...

அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்!
ரோக்கியமாக வாழ நமக்கு நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 2,800 கலோரிகள் தேவை. ஆனால், மாறிவிட்ட உணவுப் பழக்கம்,  உடல் உழைப்புக் குறைவு போன்ற காரணங்களால் 2,800-க்கும் அதிகமான கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம். இப்படி அதிகப்படியான கலோரிகள் உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இதன், விளைவாக உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
 
என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும்'' என்கிற திருநெல்வேலியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் சாம், அதற்கான அசத்தல் வழிமுறைகளை விவரித்தார்.
  வீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி செலவிடப்படுகிறது என்பது அவரவர் உடல் எடையைப் பொருத்தது. ஒருவரின் எடை 45 கிலோவாக இருந்து, 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால் 38 கலோரிகள் வரை எரிக்கப்படும். தரையை சுத்தம் செய்தால் 65 கலோரிகள் வரை எரிக்கலாம்.
  வீட்டுச் சுவற்றில் பந்து வீசிப் பிடிப்பதன் மூலம், அரை மணி நேரத்தில் 105 முதல் 285 கலோரி வரை எரிக்கலாம்.  
  வீட்டில் தினமும் 50 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் விளையாடினால், 500 கலோரிகளை எரிக்கலாம்.
  ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு போன் பேசுவதற்குப் பதில், பாதுகாப்பாக நடந்தபடியே பேசுங்கள். அவ்வப்போது எழுந்து உட்காருங்கள். இதனால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும்.
  வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு, சில நிமிடங்கள் நடனம் ஆடலாம்.
  மணிக்கணக்கில் உட்கார்ந்த நிலையில் இல்லாமல், ஃபைல், பேப்பர் படிக்கும்போதுகூட எழுந்து நின்று படிக்கலாம். காலாற ஓய்வு அறைக்கு நடந்து ஐந்து நிமிடங்கள் புஷ் அப்ஸ் அல்லது ஜம்ப் செய்யலாம். இதனால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன் 50 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
 துடிப்பான வேகத்துடன் அதாவது மணிக்கு 4 மைல் வேகத்தில் 90 நிமிடங்கள் நடந்தால், 500 கலோரிகளை எரிக்கலாம்.
 அலுவலகத்தைச் சுற்றிலும் ஒரு 10 நிமிடத்துக்கு நடந்தாலே, குறைந்தது 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும்.
 இளைஞர்கள், மூட்டுப் பிரச்னை இல்லாதவர்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஓடலாம். இதன் மூலம் 42 நிமிடங்களில் 500 கலோரிகளை எரித்துவிடலாம்.
 குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகளுடன் ஒரு ஒன்றரை மணி நேரத்தை செலவிடுவதன் மூலம் 500 கலோரிகளை எரிக்கலாம். இதனால், மன அழுத்தமும் குறையும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
  தினசரி 65 நிமிடங்கள் நீச்சல் செய்யலாம். நீச்சல் செய்யும் திறன், என்ன மாதிரியான நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து, ஒரு மணி நேரத்தில் 450 முதல் 950 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
  சைக்கிளிங் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பெடல் மிதிப்பதைப் பொருத்து 75 முதல் 670 கலோரிகளை வெறும் அரை மணி நேரத்திலேயே கூடுதலாக எரிக்க முடியும்

Related

உடற்பயிற்சி 755150499471090505

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item