உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்! 'ரோ ஸ்ட் பண்ணலியா? அப்பன்னா... எனக்கு வேணாம்’ - இப்படி எந்த கிழங்காக இருந்தாலும் அதை நன்றாக மொறும...

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!
'ரோஸ்ட் பண்ணலியா? அப்பன்னா... எனக்கு வேணாம்’ - இப்படி எந்த கிழங்காக இருந்தாலும் அதை நன்றாக மொறுமொறுவென்று எண்ணெய்விட்டு வறுத்துத் தந்தால்தான் இன்றைய குழந்தைகளுக்கு சாப்பாடே வயிற்றில் இறங்கும். அந்த அளவுக்கு, கிழங்கும்கூட கரகரப்பாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.  அதிலும், குட்டீஸ்களின் ஆல்டைம் ஃபேவரைட் டிஷ் உருளைக்கிழங்கு ஃப்ரை.  தட்டில் வைத்த நொடியில் காலி செய்துவிடுவார்கள். 
 

''குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளை இன்றைய பெரியவர்களும் வெளுத்துக் கட்டுகின்றனரே! எல்லோருமே கிழங்கை சாப்பிடலாமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? - என்பது குறித்து டயட்டீஷியன் சோஃபியா விளக்குகிறார்.  
'பொதுவாக, நாம் உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு இவைதான் கிழங்கு வகைகள் என்று தவறாக எண்ணி வருகிறோம். ஆனால், மண்ணுக்குக் கீழ் வளரும் அனைத்துமே கிழங்கு வகையில் தான் சேரும். கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம் இவைகூட கிழங்கு வகைதான்' என்றவரிடம் பொது  வான சந்தேகங்களைக் கேட்டோம்.
'கிழங்கு வகைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன?'
மாவுச்சத்துதான் அதிகமாக உள்ளது. அதனால்தான் இவை உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்கின்றன. உருளைக்கிழங்கில் மிக அதிக மாவுச்சத்து இருக்கிறது. ஆனால் கேரட், பீட்ரூட், முள்ளங்கியில் குறைந்த அளவே இருக்கிறது.
கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. கேரட்டில் மட்டும் பாஸ்பரஸ், பீட்டாகரோட்டின் என்ற வைட்டமின் சத்தும் அதிகம் உள்ளன. மேலும், இதில் உள்ள 'கோலின்’ என்ற சத்து மூளைக்கு மிகவும் நல்லது. இதுபோன்ற கிழங்குகளை உட்கொள்ளலாம்.  
மற்ற கிழங்குகளில் நார்ச்சத்தும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதுபோன்ற கிழங்குகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அவற்றை எண்ணெயில் பொரித்தெடுத்துப் பயன்படுத்தினால் கலோரி சேர்ந்து, உடல் பருமன் மற்றும் வேறு பல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்.'
'யாரெல்லாம் சாப்பிடலாம்?'
'உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள், கடின உடல் உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.'
'யாரெல்லாம் சேர்க்கக் கூடாது?'
'சர்க்கரை நோயாளிகள், அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும். வாயுப் பிரச்னை, வாத நோய் மற்றும் மூலநோய் பிரச்னை உள்ளவர்கள் கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் உருளைக்கிழங்கை அறவே சாப்பிடக் கூடாது.'
'கிழங்கு வகைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லதா? இதனால் சத்துக்களை இழக்கக் கூடுமா?'
'பெரும்பாலும் உடலுக்குத் தேவையான மாவுச்சத்துக்கள் அனைத்தும் நாம் தினமும் சாப்பிடும் சாதம், கோதுமை, தானியங்களில் இருந்து கிடைத்துவிடுகிறது. அதனால், கிழங்கு வகைகளைத் தவிர்த்தாலும் நலமாக வாழ முடியும்.'
'கிழங்கு வகைகளை எப்படிச் சாப்பிடலாம்?'
'வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. இன்றோ ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுகின்றனர். எண்ணெயில் உள்ள கொழுப்பும் உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். மேலும், கிழங்கில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போகும்.  கருணைக் கிழங்கு நீங்கலாக ஏனைய கிழங்குகள் அனைத்துமே வாயுப் பிரச்னையையும் வாத நோயையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் கிழங்குகளை அளவோடு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.'

Related

ஹெல்த் ஸ்பெஷல் 874704429523153837

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item