வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு! காய்கறிகளின் மருத்துவ குணங்கள்!

வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு! ''வா ழைத்தண்டு மாதிரி... எப்படி ஸ்லிம்மா இருக்கா பாரு'' என்று சில பெண்களைப் பார்த்து ...

வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு!
''வாழைத்தண்டு மாதிரி... எப்படி ஸ்லிம்மா இருக்கா பாரு'' என்று சில பெண்களைப் பார்த்து வியந்து சொல்வதுண்டு.   அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை 'சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப்பற்ற பயன்களைப்பற்றிக் கூறுகிறார் திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் அழகேந்திரன்.

'அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதன் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. இந்த கோடைகாலத்தில் நம்மை வாட்டி வதைக்கும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து அருந்தி வர, விரைவிலேயே எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும். ஆண்களுக்கு சிறுநீரோடு கலந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. விந்துப்பை வீக்கத்தை சரிசெய்யும்.

அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது அந்த பிரச்னையிலிருந்து விடுபட வழிவகுக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் பருமனைக் குறைக்கும். தொப்பை இருப்பவர்கள் வாழைத்தண்டை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டில் அதிகப்படியான தாது உப்புக்கள் மற்றும் புரதச் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு வாழைத்தண்டில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்க, அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.
  
பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் விளையாடுவதில்தான், அதிக நேரத்தை செலவழிப்பார்கள். அவர்களுக்கு வாழைத்தண்டை எப்போதும் போல பொரியலாக மட்டுமே செய்துகொடுக்காமல் ஜூஸ், மோரில் கலந்து நீர்மோர், பச்சடி, சூப்பாக செய்துகொடுக்கலாம். பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்யலாம். விரும்பிச் சாப்பிடுவார்கள்.
வாழைத்தண்டு ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு தவிர வாழைப்பூவும், பிஞ்சும் ரத்த விருத்தியை அதிகரிக்கும். வாழைப்பூவில் வடகம் செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகள் சரியாகும். விஷக்கடி, தீக்காயங்களுக்கு வாழைப்பட்டை, வாழைத்தண்டின் சாறைப் பூசினால், எரிச்சல் போவதுடன், சீக்கிரத்தில் ஆறிவிடும்.
எப்படிச் சாப்பிட வேண்டும்
  வாரம் முழுவதும் வாழைத்தண்டை உணவில் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வாரத்துக்கு மூன்று முறை சேர்த்துக்கொண்டாலே, அதன் முழுப் பயனையும் பெறலாம்.
  பகல் நேர உணவில் மட்டுமே வாழைத்தண்டு இடம்பெற வேண்டும். இரவு உணவில் கட்டாயம் சேர்க்கக் கூடாது.
 சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
வாழைத்தண்டு தயிர் பச்சடி!
ஒரு சின்ன துண்டு வாழைத் தண்டை நூல் எடுத்து வட்டமாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவேண்டும்.  இதில், 2 கப் தயிர், ஒரு பச்சைமிளகாய், கொத்தமல்லித் தழை, சின்ன துண்டு இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.      
சுவை அபாரமாக இருக்கும். விழுதாக அரைத்து செய்வதால், சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உடல் உஷ்ணப் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பச்சடி ஏற்றது.

Related

காய்கறிகளின் மருத்துவ குணங்கள் 263080639203576998

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item