இமேஜை பாதிக்கும் பொடுகுத் தொல்லை! ஹெல்த் ஸ்பெஷல்!!

இமேஜை பாதிக்கும் பொடுகுத் தொல்லை! அ ல்ட்ரா மாடர்னான சங்கீதாவுக்கு மெரூன், கருப்பு, கரும் பச்சை என அடர்ந்த நிறத்தில் டிரெஸ் போட ஆசை. ...

இமேஜை பாதிக்கும் பொடுகுத் தொல்லை!
ல்ட்ரா மாடர்னான சங்கீதாவுக்கு மெரூன், கருப்பு, கரும் பச்சை என அடர்ந்த நிறத்தில் டிரெஸ் போட ஆசை. ஆனால், சின்ன வயதில் இருந்தே, பொடுகுத் தொல்லை இருந்ததால் ஆசைப்பட்ட கலரில் ஆடை அணிவதைத் தவிர்த்துவிடுவார். வெள்ளை வெள்ளையாக பொடுகு உதிர்ந்து, தோள் பட்டையின் மீது படிந்து சங்கடத்தில் ஆழ்த்திவிடுவதுதான் காரணம். என்னதான் மாடர்னாக இருந்தாலும், பொடுகுப் பிரச்னை அவரை மற்றவர்களிடம் இருந்து விலக்கியே வைத்திருந்தது. இன்று பெண்கள் மட்டுமல்ல... ஆண்களுக்கும், தலைபோகிற பிரச்னையே பொடுகு தான்.
 பொடுகு ஏன் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து தோல் நோய் சிறப்பு மருத்துவர் காளீஸ்வரனிடம் கேட்டோம்.

'பொதுவாக மலசேசியா ஃபர்ஃபர் (Malassezia furfur) என்னும் பூஞ்சையால் பொடுகு ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். இளம் வயதினருக்கு, நியாசின் (வைட்டமின் பி3), துத்தநாகம் குறைபாட்டினால் பொடுகு மாதிரியான பிரச்னைகளுடன் தோல் உரிதலும், அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். நம் தலையில் உள்ள செபேசியஸ் (Sebaceous) எண்ணெய் சுரப்பியின் சுரப்பு அதிகமாகும்போது, பொடுகுப் பிரச்னைகள் உருவாகும். இளம் வயதினருக்கு இந்த சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பொடுகு, பரு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

பொடுகுப் பிரச்னை, குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அதிகப்படியான வியர்வை காரணமாக இந்தியாவில் கோடைகாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு, பொடுகுத் தொல்லை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆரம்பகாலத்தில் வரும் பொடுகுகள் வெள்ளை நிறத்திலும், முற்றிய நிலைகளில் மஞ்சள் நிறத்திலும் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும்கூட இருக்கும்.

சாதாரண பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூஞ்சை எதிர்ப்புத்தன்மை வாய்ந்த (ஆன்டிஃபங்கல்) ஷாம்பு பரிந்துரைப்போம். டாக்டரின் பரிந்துரையின்பேரில் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகைக் குறைக்கலாம். அதிக அளவு பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஷாம்புவுடன், மாத்திரைகளையும் சில வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். ஆனால், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும்.

எண்ணெய் சுரப்பியினால் ஏற்படும் பொடுகுப் பிரச்னைகளை சரிசெய்யவில்லை எனில், கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதுடன் சின்னச்சின்ன பருக்கள் வர வாய்ப்புள்ளது. சாதாரணமான பொடுகுப் பிரச்னைகளால் தலை முடி உதிர வாய்ப்பு இல்லை. ஆனால், பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், முடி உதிர்வதுடன் அரிப்பும் ஏற்படலாம்.
மேலும், தொற்றுதல் மூலமாக பொடுகு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதாவது தலையில் பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்தும் துணிகளைப் பயன்படுத்தினால் பொடுகு வரும்.  இதற்காக, ஒட்டுவார் ஒட்டி என்று பயப்பட வேண்டாம். அருகில் தூங்குபவர்களிடமிருந்து நமக்குப் பரவக்கூடிய தொற்றுவியாதி இல்லை.'' என்கிறார் டாக்டர் காளீஸ்வரன்.
பொடுகிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்னென்ன?
''ஒருவர் பயன்படுத்தும் சீப்பு, தலையணைகளை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. முடி அதிகம் வறட்சியுடன் (Dryness) இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஹேர் கன்டிஷனர் பயன்படுத்தலாம். அதுவே ஈரப்பசையுடன் இருக்கும்போது ஷாம்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக இறுக்கமான முடி அலங்காரங்கள், அதிகம் வெயிலில் அலைவது  போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். தூசி நிறைந்த இடங்களில் உள்ளவர்கள் டாக்டரின் பரிந்துரைக்கும் ஷாம்புவை வாரத்துக்கு நான்கு முறையும், மற்றவர்கள் வாரத்துக்கு இரண்டு முறையும் பயன்படுத்தி இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்'' என்றார்.


பொடுகு போயே  போச்!
பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சைமுறைகளைப் பற்றி சித்த மருத்துவர் முகமது மாலிக் சொல்லும் டிப்ஸ்.

கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.  

 தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும்.

 மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.

 அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து  மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2664657846721397662

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item