வேர்க்கடலை பூண்டு சட்னி! சட்னிகள்!!
தேவையானவை வறுத்த வேர்கடலை - 1 கப் பூண்டு - 1 கப் பச்சை மிளகாய் - 10 கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க உ...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_6514.html
- தேவையானவை
- வறுத்த வேர்கடலை - 1 கப்
- பூண்டு - 1 கப்
- பச்சை மிளகாய் - 10
- கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.
- கடலையை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
- வறுத்த வேர்கடலை, பூண்டு, பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்.
- கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேர்க்கடலை விழுதில் சேர்க்கவும்.
- தோசை சப்பாத்திக்கு ஏற்ற வேர்க்கடலை பூண்டு சட்னி தயார்.
வேர்க்கடலையும், பூண்டும் தேவையில்லாத கொழுப்பை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக்கும்.
பூண்டு இதயம் வலிமை பெற உதவும்.
Post a Comment