முர்தபா -- சமையல் குறிப்புகள்-அசைவம்!,

 முர்தபா சென்னையில் பிர்தெவுஸ் ஹோட்டல், சீலாடு, மற்றும் புகாரி ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய இல்லங்களில் செய்யபடும், ரிச் டிபன்....



 முர்தபா சென்னையில் பிர்தெவுஸ் ஹோட்டல், சீலாடு, மற்றும் புகாரி ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய இல்லங்களில் செய்யபடும், ரிச் டிபன்.

இது  இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் விஷேஷ சமையலில் இதுவும் ஒன்றாகும்.

இது சென்னையில் உள்ள பிர்தவுஸ் ஹோட்டலில் ரொம்ப பேமஸ்.


பரோட்டாவிற்கு

மைதா = இரண்டு கப்
உப்பு ‍= சிறிது
டால்டா உருக்கியது = ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று

பில்லிங்கிற்கு

எண்ணை = இரண்டு தேக்கரண்டி
மட்டன் கீமா = 200 கிராம் (இதில் சிக்கன் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = கால் கிலோ
தக்காளி = ஒன்று
கர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌மிள‌காய் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி த‌ழை = ஒரு கைப்பிடி
முட்டை = மாவில் த‌ட‌வ‌ தேவையான‌ அள‌வு
எண்ணை + டால்டா (அ) ப‌ட்ட‌ர் = சுட‌த்தேவையான‌ அள‌வு


செய்முறை

முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டகள் போட்டு ஓவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.

எண்ணையை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்துமல்லி தழை சிறிது, மட்டன் , மசாலா வகைகள் இப்படி எல்லா வற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா,கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.


.இப்போது மாவு நன்கு ஊறி இருக்கு அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும்.
மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்


வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவி, ஆறிய மட்டன்  பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவாலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.


தவ்வா சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்



இப்போது எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து ஒரு பக்கம் மட்டும் குறுக்கும் , நெடுக்குமாக முழுவதும் வெட்டாமல் லேசாக நான்கைந்து லைன் போட்டு விடவும். அப்ப தான் சாப்பிடும் போது துண்டு துண்டாக பிச்சி சாப்பிட வசதியாக இருக்கும்


இப்படி முக்கோண வடிவாகவும் மடிக்கலாம்.


சாப்பிடும் முன் சிறிது பெப்பர், லெமன் பிழிந்து கெட்சப்புடன் சாப்பிடவும்.

( இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து சாப்பிடலாம்)

காய் கறிகள் முட்டை கோஸ், கேரட், உருளை, சேர்த்து இதே போல் முர்தபா தயாரிக்கலாம்.


மிக அருமையான டிபன், ரிச் டிபன், ஒன்று சாப்பிட்டாலும் ரொம்பவே பில்லிங்காக இருக்கும். காய் கறி கீரைவகைகள் , சிக்கன், மட்டன் எதுவைத்து செய்தாலும் ரொம்ப நல்ல இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள்-அசைவம்! 6034621397956551751

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item