தக்காளி கோதுமை தோசை! சமையல் குறிப்புகள்!!
...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_4160.html
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
• தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
• பின்னர் ப.மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
• நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் உப்பு, தக்காளி வெங்காய கலவை, சீரகம், கொத்தமல்லி போட்டு தோவை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
• அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்
Post a Comment