30 வகை மில்க் ரெசிபி! 30 நாள் 30 வகை சமையல்!!

கு ழந்தைகளின் வேகமான வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்பு உறுதிக்கும் உறுதுணை புரியும் கால்சியம் சத்து, பால...

குழந்தைகளின் வேகமான வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்பு உறுதிக்கும் உறுதுணை புரியும் கால்சியம் சத்து, பாலில் நிறைந்துள்ளது. அதேசமயம் தினமும் பாலை கிளாஸில் விட்டுக் குடிப்பது, சற்று அலுப்பு தட்டிவிடும். அதற்காகவே பாலை வைத்து செய்யக்கூடிய... கஞ்சி, கூட்டு, கொழுக்கொட்டை, கீர் உட்பட சூப்பரான சுவை கொண்ட 30 வகை ரெசிபிகளை இந்த இணைப்பிதழில் வழங்கும் 'சமையல் கலை நிபுணர்' சீதா சம்பத், ''பால் பொங்குவது போல், உங்கள் இல்லத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பொங்கி வழியட்டும்'' என்று உளப்பூர்வமாக வாழ்த்துகிறார்.
மில்க் காலா ஜாமூன்
தேவையானவை: பனீர் - 125 கிராம், மைதா - மூன்றரை டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் (கண்டென்ஸ்டு மில்க்) - அரை கப், பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை:  பனீரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி தூளாக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் உதிர்த்த பனீர், சிறிதளவு சர்க்கரை, மைதா, பேக்கிங் பவுடர், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கண்டென்ஸ்டு மில்க் விட்டு கெட்டியாகப் பிசைந்து... சிறிய உருண்டைகளாக செய்யவும் (நீளவாட்டிலும் உருட்டலாம்).
சூடான எண்ணெயில் 4, 5 உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும். மீதமுள்ள சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு கொழகொழப்பு பதம் வந்ததும் தீயை நிறுத்தி... செய்து வைத்த உருண்டை களை போட்டு, 5 நிமிடம் ஊறிய பின் எடுத்து தட்டில் வைத்து அலங்கரிக்கவும்.

வெஜ் மில்க் சூப்
தேவையானவை: பால் - ஒரு கப், காய்கறி துண்டுகள் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் சேர்த்து) - முக்கால் கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு - 4 பல், மைதா - 3 டீஸ்பூன், மிளகுத்தூள்- அரை டீஸ்பூன், வெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  காய்கறி துண்டுகளுடன் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். கடாயில் வெண்ணெயை உருகவிடவும். பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். மைதா தூவி சூடுபட கிளறவும். இதனுடன் காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும் (வெந்த காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்தவும்). உடனே பால் விட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

பயத்தம்பருப்பு பால் கஞ்சி
தேவையானவை: பால் - 2 கப், பயத்தம்பருப்பு - அரை கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:  பயத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும். வறுத்த பருப்பில் ஒரு கப் பால் விட்டுக் கலந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சி வைக்கவும்.
வெந்த பருப்புடன் பொடித்த வெல்லம், சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும், காய்ச்சிய பாலை சேர்த்து, தீயை நிறுத்திவிடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி - திராட்சையை வறுத்து கஞ்சியில் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான, மணமான இந்தக் கஞ்சி மிகவும் சத்துமிக்கது. விரதநாட்களில் இதை சாப்பிடு வார்கள்.

பால் பாயசம்
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், பச்சரிசி - கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் (விருப்பப்பட்டால்) - கால் கப்.
செய்முறை:  பச்சரிசியை சுத்தம் செய்து கால் கப் பால், கால் கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும். வெந்த சாதத்தை கரண்டியால் மசிக்கவும். மீதம் உள்ள பாலை பாத்திரத்தில் விட்டு காய்ச்சவும். பால் பொங்கி வரும்போது சர்க்கரை சேர்க்கவும். பிறகு, மசித்த சாதத்தை சேர்த்து கொதித்து வரும்போது, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

மில்க் கேசரி
தேவையானவை:  காய்ச்சிய பால் - 300 மில்லி, ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - கால் கப், முந்திரித் துண்டுகள் - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:   கடாயில் சிறிதளவு நெய் விட்டு... சூடானதும் முந்திரித் துண்டுகளை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் ரவையை வறுத்து, பாலை விட்டுக் கிளறவும். ரவை வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சேர்ந்தாற்போல வந்ததும், அடிபிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். பிறகு, வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்துள் சேர்த்துக் கலந்து, கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:  விருப்பப்பட்டால், கலர் சேர்க்கலாம்.

பனாரஸ் மில்க் டிரிங்
தேவையானவை: பால் - 2 கப், பூசணிக்காய் துண்டுகள் (தோல் நீக்கியது)  - அரை கப், சர்க்கரை - கால் கப், விருப்பமான எசன்ஸ் - 4 சொட்டு.
செய்முறை:  பூசணிக்காய் துண்டுகளை ஆவியில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக் கவும். பாலை காய்ச்சி, சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். அத்துடன் அரைத்த விழுதையும் கலந்து ஒரு கொதி வரவிட்டு இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் எசன்ஸ் விட்டு கலக்கி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்து... கிளாஸில் விட்டு பருகக் கொடுக்கவும்.

ரவா  கோகனட் மில்க் பர்ஃபி
தேவையானவை: பால் - ஒரு கப், ரவை, தேங்காய் துருவல் - தலா அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:  ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு ரவையை வறுக்கவும். வறுத்த ரவை, தேங்காய் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றைக் கலந்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்துக் கிளறவும். இறுகிவரும் சமயம், அடிபிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் பரவலாக விட்டு, மிதமான சூட்டில் இருக்கும்போது துண்டுகள் போடவும்.

தூத் பேடா
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 150 கிராம், பாதாம் - பிஸ்தா துண்டுகள், சோள மாவு -  தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.  
செய்முறை:  சோள மாவை சிறிதளவு பால் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டுக் காய்ச்சவும். பால்  குறுகி வரும்போது (சேறு போன்ற பதம்) சோள மாவு கரைசலை சேர்க்கவும். பிறகு, தீயைக் குறைத்து... சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து இறுகி வரும்போது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு அடிபிடிக்காது கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் இறக்கி... பாதாம் - பிஸ்தா துண்டுகள் சேர்த்துக் கலந்து வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். கையில் நெய் தடவிக்கொண்டு கலவையிலிருந்து சிறிது எடுத்து விருப்பமான வடிவம் கொடுக்கவும்.

மில்க் குலோப் ஜாமூன்
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், மைதா - 4 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண் ணெய் - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை:  அடிகனமான கடாயில் பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். பால் இறுகி, சர்க்கரை இல்லாத கோவா போல கிடைக்கும். ஆறியதும் இந்த கோவாவுடன் மைதா, ஆப்பசோடா, ஏலக்காய்த்தூள் கலந்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் 4, 5, உருண்டைகளாக போட்டு, வெந்து வந்ததும் திருப்பிவிடவும். மீண்டும் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். ஊசியால் மெதுவாக குத்திவிடவும். இப்போது ஜாமூன் தயார்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கொழகொழப்பான பதம் வந்ததும் இறக்கி, பொரித்து வைத்துள்ள ஜாமூன்களை போட்டு, 30 நிமிடம் ஊறவிட்டால்... குலாப் ஜாமூன் ரெடி.

டேட்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை: பால் - 300 மில்லி, பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10, சர்க் கரை - 3 டீஸ்பூன்.
செய்முறை:  பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் எடுத்து ஆறவிடவும். பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு பால் விட்டு அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை பால் கலவையில் சேர்த்துக் கலந்தால்... டேட்ஸ் மில்க் ஷேக் தயார்.

மில்க்  பிரெட் அல்வா
தேவையானவை: பால் - 500 மில்லி, பிரெட் - 5 ஸ்லைஸ், சர்க்கரை - 100 மில்லி, முந்திரித் துண்டுகள் (வறுத்தது) - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:  பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கி எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். பாதியாக குறுகி வந்ததும்... சர்க்கரை, பிரெட் தூள் போட்டு, நெய் விட்டு சுருள கிளறி எடுக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு ஃபுட் கலர் சேர்க்கலாம்.

மில்க்  ஆப்பிள் கீர்
தேவையானவை: பால் - 2 கப், ஆப்பிள் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:  ஆப்பிள் துண்டுகளை ஆவியில் வேக வைத்து எடுத்து, ஆறியதும் அரைக்கவும். பாலைக் காய்ச்சி... சர்க்கரை, அரைத்த ஆப்பிள் விழுது கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். முந்திரித் துண்டு களை நெய்யில் பொன்னிற மாக வறுத்து சேர்த்து, பருகக் கொடுக்கவும்.

ஃபட்ஜ்
தேவையானவை: பால், மில்க் பவுடர், க்ரீம், கடலை மாவு - தலா அரை கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், பாதாம் - பிஸ்தா துண்டுகள் - 2 டீஸ்பூன், நெய் - அரை கப்.
செய்முறை:  ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, நெய் விட்டு கலந்து, கட்டி இல்லாது தேய்த்துப் பிசையவும். இதை 5 நிமிடம் ஊறவிடவும். பின்னர், பால் விட்டு கட்டி இல்லாது கலக்கவும். கடாயில் க்ரீம், மில்க் பவுடர் போட்டுக் கலந்து, அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக வெண்ணெய் போன்று வரும் நேரம், கடலை மாவு கலவையை சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்து வைக்கவும்.  வேறு பாத்திரத்தில் சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு வைத்து, அதை கடலை மாவு கலவையில் விட்டுக் கிளறவும். கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் போட்டு, மேலே பாதாம் - பிஸ்தா துண்டுகள் தூவி லேசாக அழுத்திவிடவும். இது கதகதப்பான சூட்டில் இருக்கும்போது துண்டுகள் போட்டால்... அசத்தல் சுவையில் ஃபட்ஜ் ரெடி!

பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை: பால் - ஒரு கப், தோல் சீவிய பரங்கிக்காய் துண்டுகள் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பரங்கிக்காயில் பால் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து மசித்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் பரங்கிக்காய் கலவையைப் போட்டுக் கலக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் போட்டு நன்கு கலக்கவும். இறுகி, கெட்டியானதும் இறக்கவும்.

பப்பாளி மில்க் கீர்
தேவையானவை: பப்பாளிபழத் துண்டுகள் (தோல் சீவவும்) - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - கால் கப், சீவிய முந்திரி - பாதாம் - 2 டீஸ்பூன்.
செய்முறை:  பாலை நன்கு காய்ச்சி... சர்க்கரை சேர்த்துக் கலந்து, பால் ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, சூடான பாலில் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பப்பாளி - பால் கலவையை சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதனுடன் சீவிய முந்திரி - பாதாம் சேர்க்கவும். இதை சூடாகவோ, ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பரிமாறலாம்.

சப்போட்டா மில்க்ஷேக்
தேவையானவை: பால் - 500 மில்லி, சப்போட்டா (பெரியது) - 3, சர்க்கரை - 5 டீஸ்பூன்.
செய்முறை:  பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஆறவிடவும். சப்போட்டா பழத்தின் மேல் தோல் மற்றும் உள்ளிருக்கும் விதையை நீக்கி... மிக்ஸியில் போட்டு 2 நிமிடம் ஓடவிடவும். ஒரு கிளாஸ் அளவு ஆறிய பால் விட்டு மூடி மீண்டும் மிக்ஸியை அரை நிமிடம் ஓடவிட்டு நிறுத்தவும். இந்தக் கலவையை, மீதமுள்ள பாலில் விட்டுக் கலக்கினால்... சப்போட்டா மில்க் ஷேக் தயார்.
இதை அப்படியே சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம்.

மசாலா பால்
தேவையானவை: பால் - 500 மில்லி, சர்க்கரை - 50 கிராம், பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 10, குங்குமப்பூ - 4 இதழ்கள், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:  பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு, தோல் நீக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தா... இவற்றை சிறிதளவு பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாலை சூடாக்கி, பொங்கி வந்ததும் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலந்து தீயை நிறுத்தி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இந்த மசாலா பாலை மிதமான சூட்டுடன் பரிமாறலாம். நன்கு ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் பரிமாறலாம்.

ரஸமலாய்
தேவையானவை:  பால் - ஒரு லிட்டர், பனீர் - 100 கிராம், சர்க்கரை - முக்கால் கப், குங்குமப்பூ - 4 இதழ்கள், சீவிய பாதாம் - பிஸ்தா - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன்.
செய்முறை:  பாலை பாத்திரத்தில் விட்டு பாதியாகும் வரை காய்ச்சி... அரை கப் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பால் சூடாக இருக்கும்போதே ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் மைதா கலந்து பிசைந்து,  சிறுசிறு உருண்டைகளாக செய்யவும்.
குக்கரில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு, கால் கப் அளவு சர்க்கரை போட்டு கரையவிடவும். சர்க்கரைத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை மெதுவாக போடவும். குக்கரை மூடி, 2 விசில் வந்த பிறகு இறக்கவும். பிரெஷர் போனதும் உருண்டைகளை எடுத்து லேசாக அழுத்தினால் தண்ணீர் வடியும். இந்த உருண்டைகளை காய்ச்சி வைத்திருக்கும் பால் கலவையில் சேர்த்து, சீவிய பாதாம் - பிஸ்தாவை மேலாக தூவினால்... ரஸமலாய் தயார்.

வெனிலா ஐஸ்க்ரீம்
தேவையானவை:  பால் - ஒரு லிட்டர், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஐஸ்க்ரீம் பவுடர் (அல்லது) சோள மாவு - 4 டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம் (அல்லது விருப்பத்துக்கேற்ப).
செய்முறை:  பாலை சுடவைத்து, பொங்கி வரும்போது 100 மில்லி அளவு எடுத்து, ஆற வைத்து ஐஸ்க்ரீம் பவுடர் (அல்லது) சோள மாவு போட்டு கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள பால் பாதியளவு குறுகுமாறு நன்கு காய்ச்சி... சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு ஐஸ்க்ரீம் பவுடர் - பால் கலவையை சேர்த்து, நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். அப்படியே ஆறவிடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு 10 நிமிடம் அடிக்கவும். அடித்த கலவையை அலுமினியம் பாத்திரத்தில் விட்டு, வெனிலா எசன்ஸ் கலந்து ஃப்ரீசரில் வைத்து குளிரவிடவும் (குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஸ்விட்சை 'கூலிங் ஹை’யில் வைக்கவும்). 2 மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு கப்பில் வைத்து, ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

பனாரஸ் அல்வா
தேவையானவை: பால் - ஒரு கப், பூசணிக்காய் துண்டுகள் (தோல் நீக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப், பாதாம் - முந்திரி துண்டுகள் - 2 டீஸ்பூன், சர்க்கரை இல்லாத கோவா - அரை கப்.
செய்முறை: பூசணிக்காயில் பால் விட்டு, குக்கரில் வேக வைத்து, ஆறியதும் அரைத்து எடுக்கவும். அடிகனமான கடாயில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சேர்ந்தாற்போல வரும் சமயம் கோவாவை உதிர்த்துப் போட்டுக் கிளறவும். இறுகி வரும்போது அடி பிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் கீழே இறக்கவும். கடாயில் கொஞ்சம் நெய் விட்டு... பாதாம், முந்திரி துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்துக் கலக்கவும்.

இளநீர் வழுக்கை  பால் பாயசம்
தேவையானவை:  இளம் தேங்காய் (இளநீர் வழுக்கை) துண்டுகள் -  ஒரு கப், பால் - 500 மில்லி, சர்க்கரை - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - 10.
செய்முறை:  இளம் தேங்காயை அரைத்து விழுதாக்கவும். பாலைக் காய்ச்சி... சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கி... ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரித் துண்டுகளை பொன்னிற மாக வறுத்து, பாயசத்தில் கலக்கவும்.
இளநீர் வழுக்கைக்குப் பதில் நுங்கு, மாம்பழம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

பால் போளி
தேவையானவை:  பால் - ஒரு லிட்டர், மைதாவில் செய்த பூரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - 4 இதழ், சர்க்கரை - அரை கப்.
செய்முறை: பாலை அடுப்பில் வைத்து பாதியாகக் குறுகும் வரை காய்ச்சி... சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு கலந்து கொள்ளவும். உடனே மைதா பூரியை சூடான பாலில் போடவும். ஒரு நிமிடம் கழித்து மேலும், கீழும் கலந்துவிடவும். 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

பனீர் மில்க் கீர்
தேவையானவை:  பால் - இரண்டரை கப், பனீர் தூள் - ஒன்றரை கப், சர்க்கரை - கால் கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம் துண்டுகள் - 4 டீஸ்பூன்.
செய்முறை: சிறிதளவு பாலை காய்ச்சி ஆற வைத்து, இதனுடன் சோள மாவை சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சி, அடுப்பை குறைவான தீயில் வைத்து, சோள மாவு கலவையை விட்டு இடைவிடாது கிளறவும். பால் பொங்கி வரும் நேரம் சர்க்கரை, பனீர் தூளை சேர்த்துக் கலக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும். நன்கு ஆறியதும் ஃப்ரிட்ஜில் குளிர வைத்து, மேலே பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.

பாஸந்தி
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 150 கிராம், பாதாம் - முந்திரி துண்டுகள் - 2 டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:  பாலை அடிகன மான பாத்திரத்தில் காய்ச்சவும். பால் குறுகி முக்கால் பாகமாக வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கொதிக்கவிடவும். பால் பாதியாக குறுகியதும், சோள மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து பால் கலவையில் விட்டு கலந்து கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பால் பாத்திரத்தின் ஓரத்தில் படிந்துள்ள ஆடைகளையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து... பாதாம் - முந்திரி துண்டுகள் தூவி, குளிர வைத்து பரிமாறவும்.

மில்க் கேக்
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா பருப்பு துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப்.
செய்முறை: முதலில் பாலை காய்ச்சவும். 3-ல் இரண்டு பாகமாக குறுகியதும், எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். பால் திரிந்து தண்ணீர் பிரிந்து வரும். தண்ணீரை வடிகட்டி எடுத்துவிடவும். இதுதான் பனீர். இந்த பனீரை கடாயில் போடவும். சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வரும்போது, வெண்ணெயைப் போட்டு அடிபிடிக்காது கிளறவும். கெட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், பிஸ்தா பருப்பு தூவிக் கலந்து, நெய் தடவிய தட்டில் பரவலாக போட்டு தட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
------------------------------------------------------------------------------------------------------------
மில்க்  ஃப்ரூட்ஸ் வெற்றிலை தட்டு
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், பாதாம் - 100 கிராம், சத்து மாவு - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், மஞ்சள், பச்சை, கோகோ நிற ஃபுட் கலர் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி அரைத்து எடுக்கவும். பாலைக் காய்ச்சவும். பாதியாகக் குறுகி வந்ததும் சர்க்கரை, பாதாம் விழுது சேர்த்து, சத்துமாவு தூவி கலக்கவும். இறுகி வரும் சமயம் அடிபிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி மூன்று பாகமாக பிரிக்கவும். ஒன்றில் மஞ்சள் கலர், மற்றொன்றில் பச்சை கலர்,  மூன்றாவதில் கோகோ கலர் சேர்த்துக் கலக்கவும் கையில் நெய் தடவிக் கொண்டு, கலவை மிதமான சூட்டில் இருக்கும்போது சிறிது எடுத்து உருட்டி மஞ்சள் கலரில் வாழைப்பழ வடிவம் கொடுக்கவும். 4 பழம் சேர்த்து ஓட்டவும் (சூட்டில் ஒட்டிக் கொள்ளும்). பச்சை கலரில் வெற்றிலை செய்யவும். கோகோ கலரில் பாக்கு வடிவம் கொடுக்கவும். நன்கு ஆறியதும் தட்டில் எடுத்து வைத்து அலங்கரிக்கவும்.

பால் கொழுக்கட்டை
தேவையானவை: பால் - 750 மில்லி, பதப்படுத்திய பச்சரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்த மாவு) - அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து, வடிகட்டி எடுக்கவும். பச்சரிசி மாவில் உப்பு கலந்து, சிறிதளவு சுடுநீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவு ஆறியதும், கையில் நெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். 3-ல் இரண்டு பாகமாக வந்ததும், வெல்லக் கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்து வரும்போது ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மெதுவாக போடவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அழகுபடுத்தவும்.

சாக்லேட் மில்க் பர்ஃபி
தேவையானவை: கண்டென்ஸ்டு மில்க் (மில்க்மெய்ட்) - ஒரு டின், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக.
செய்முறை: கடாயில் நெய் விட்டு உருகியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும் (தீ குறைவாக இருக்கட்டும்). இதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். எல்லாம் சேர்ந்து இறுகிவரும் நேரம் கோகோ பவுடரை சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக வரும்போது நெய் தடவிய தட்டில் பரவலாக விடவும். ஆறியதும் துண்டுகள் போடவும். சதுரமாக துண்டு போடலாம். நீள வாட்டில் (ஓவல் ஷேப்பில்) உருட்டலாம். அல்லது சாக்லெட் பேப்பரில் ஒரு நீளமான துண்டு வைத்துச் சுற்றலாம்.

கஸ்டர்டு மில்க் ஃப்ரூட்
தேவையானவை:  பால் - அரை லிட்டர், கஸ்டர்டு பவுடர் - 4 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், பழ துண்டுகள் (ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, கிரேப்ஸ்) - ஒரு கப்.
செய்முறை: 100 மில்லி அளவு பாலில் கஸ்டர்டு பவுடரை கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை நன்கு காய்ச்சி... சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பால் பாதியாக வற்றியதும் கஸ்டர்டு கலந்த பாலை விட்டு, தீயை குறைவாக வைத்து 5 நிமிடம் கைவிடாது கிளறி, நன்கு கலந்து வந்ததும் இறக்கி, ஆறவிடவும். பிறகு பழத்துண்டுகளை அதில் கலக்கவும். அப்படியே ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். தேவையானபோது எடுத்து பரிமாறலாம்.

திரட்டுப் பால்
தேவையானவை:  பால் - ஒரு லிட்டர், வெல்லம் - 100 கிராம்.
செய்முறை:  பாலை அடிகனமான கடாயில் ஊற்றிக் காய்ச்சவும். பால் குறுகி முக்கால் பாகமாக வந்ததும் வெல்லம் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பாலும் வெல்லமும் கரைந்து சேர்ந்து, கெட்டியாக வந்ததும் இறக்கவும். நன்கு ஆறியதும் எடுத்து டப்பாவில் வைக்கவும். ஆறியதும் உதிரியாக வரும். நீண்ட நாள் கெடாது.

Related

30 நாள் 30 வகை சமையல் 2770058722763775459

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item