எடை குறைப்புக்கு எளிய பயிற்சி! உடற்பயிற்சி!!
''ட யட், ஜிம் வொர்க் அவுட்ஸ், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் என்று உடல் எடைகுறைப்புக்கு ஏராளமான பயிற்சிக...
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_17.html
''டயட், ஜிம்
வொர்க் அவுட்ஸ், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் என்று உடல் எடைகுறைப்புக்கு
ஏராளமான பயிற்சிகளும்... ஏகப்பட்ட வழிகளும் இன்று கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால், இவை அனைத்தையும்விட மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுவது
யோகப்பயிற்சிதான். யோகாவில்தான் உடல், மனம், மூச்சு ஒருங்கிணைந்து
செயல்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கிறது.
அதிக உடல் எடையுடன் வந்த ஒரு பெண்மணிக்கு, வெறும்
பிராணாயாமத்தால் மட்டுமே கிட்டத்தட்ட 25 கிலோ எடையைக்
குறைத்துக்காட்டியிருக்கும் சென்னையைச் சேர்ந்த அக்குபிரஷர் மற்றும் யோகா,
ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் ஜெ.ஜெயலட்சுமியைச் சந்தித்தோம்.
''இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு திருநின்றவூரிலிருந்து ரேணுகாதேவி என்ற 25 வயது இளம்
பெண் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். உடல் பருமன் (95 கிலோ எடை),
அதிக வியர்வை, ஹைப்போதைராய்டு என்று அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட உடல்
கோளாறுகள். அவருக்கு முதலில் எடையைக் குறைப்பதுதான் அவசியமான சிகிச்சை
என்பதால், பிராணாயாமப் பயிற்சியைக் கொடுத்தேன். வயிற்றுத் தசையைச்
சுருக்கி, முறைப்படி செய்ய வேண்டும். ஒருநாள்கூட விடாமல், தினமும்
தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். நான்கு மாதப் பயிற்சிக்குப் பிறகு, நேரில்
வந்தவரை அடையாளமே தெரியவில்லை. கிட்டத்தட்ட 20 கிலோ எடை குறைந்திருந்தது.
காரணம் வெறும் பிராணாயாமப் பயிற்சி மட்டுமே. எடை மட்டுமல்ல, மற்ற
பிரச்னைகளும் ஓரளவுக்குக் குறைந்திருந்தன என்பதுதான் இந்தப் பயிற்சியின்
வெற்றி!' என்ற ஜெயலட்சுமி, பிராணாயாமத்தின் சிறப்புகளைச் சொன்னார்.
'எல்லா வயதினருக்கும் பிராணாயாமம் ஏற்றது. அதில்
ஆசனத்துடன் தியானமும் சேரும்போது, மூச்சும் மனமும் 'ரிலாக்ஸ்’ ஆகும்.
மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூச்சைக்
கட்டுப்படுத்தும்போது, மனமும் கட்டுக்குள் வந்துவிடும். பிராணாயாமங்களில்
பல வகைகள் உள்ளன. அவரவர் உடல் பிரச்னைக்கு ஏற்ப, பிராணாயாமங்களைச் செய்ய
வேண்டும். இதில் மிகவும் எளிமையானது வயிறு வரை செய்யும் பிராணாயாமம்
தான்!'' என்றவர், பிராணாயாமம் செய்வதன் மூலம் உடல் எடை குறைவதைப் பற்றி
விவரித்தார்.
'தினமும் பிராணாயாமம் செய்து வந்தால், சாதாரணமாக நாம்
வெளிவிடும் மூச்சே, ஒருசில மாதங்களில் ஆழமான மூச்சாக மாறிவிடும். அதிக
நேரம் மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதிக அளவு பிராண வாயு கிடைக்கிறது. அதிக
நேரம் வெளியே விடும்போது, நம் உடலிலுள்ள மொத்த அசுத்தக் காற்றும்
வெளியேறுகிறது. பிராண வாயுவுக்கு எரிக்கும் சக்தி உண்டு. மிக ஆழமாக மூச்சை
இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில்
கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை
அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள்
சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் செய்யும்போது வயிற்றுப்
பகுதியின் தசை வலுப்பெறும். தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து
எடையைக் குறைத்துவிடும்' என்கிறார் ஜெயலெட்சுமி.
'பிராணாயாமம்’ பயிற்சி முறை!
முதுகை நேராக நிமிர்த்தியபடி அமர்ந்துகொள்ளவும். இடது கையை வயிற்றின் மேல் வைக்கவும். கண்களை மூடி, மூச்சில் கவனம் செலுத்தவும்.
நிதானமாக மூச்சை, எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளே இழுக்கவும். தோள்களைத் தூக்கவோ, உடலை அசைக்கவோ வேண்டாம்.
சாதாரணமாக
மூச்சுவிடுவதையே, சற்று நீளமாக்கினால் போதும். வயிற்றின் மேல் இருக்கும்
கைகள், மேலெழும்புவதை உணரலாம். பிறகு, அதே நிதானத்துடன் எவ்வளவு நேரம்
முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை வெளியேவிடவும். அதே சமயம், வயிறு நன்றாக
உள்ளே சுருங்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
மறுபடியும்
மூச்சை வெகு நேரம் உள்ளே இழுத்து, அதே நிதானத்துடன் வெளியேவிடவும். முதல்
நாள், மூச்சை இழுக்க எத்தனை நொடி, வெளியேவிட எத்தனை நொடி ஆயிற்று என்பதைக்
குறித்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல் ஒருவேளைக்கு 20 முறை செய்ய வேண்டும். அன்றாடம் காலை, மாலை என இரு வேளைகள் செய்யலாம். வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும்.
மூச்சை
உள்ளே வைத்திருக்கவோ, மூக்கைப் பிடிக்கவோ தேவையில்லை. தினமும்
செய்யும்போது, நாம் உள்ளிழுக்கும் நேரமும் வெளியேவிடும் நேரமும் சிறிது
சிறிதாக அதிகரிப்பதை உணரலாம்.
Post a Comment