மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்! பழங்களின் பயன்கள், !!

ஊர்த் திருவிழா, வீட்டு விசேஷங்கள், தாம்பூலத் தட்டுக்களில் தவறாது இடம்பிடிக்கும் மூத்தோர்கள் மொழிந்த மு...

ஊர்த் திருவிழா, வீட்டு விசேஷங்கள், தாம்பூலத் தட்டுக்களில் தவறாது இடம்பிடிக்கும் மூத்தோர்கள் மொழிந்த முக்கனிகளுள் மூன்றாவது கனி- வாழை. பூவன், ஏலக்கி, செவ்வாழை, நேந்திரம் என்று வாழைகளில் பல வகைகள் இருந்தாலும், மலைக்கவைக்கும் மருத்துவ குணங்கள் மலைவாழைப்பழத்தில்தான் அதிகம் இருக்கின்றன. அதன் குணங்களைப் பற்றிக் கூறுகிறார், மதுரை சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.
 'மலைவாழைப்பழத்தில் சிறுமலைப் பழம், பெரு மலைப் பழம் என்று இரண்டு வகைகள் உண்டு. பெரு மலை வாழைப்பழம், உடலுக்கு அதிக சூட்டைத் தருவதால், அதை, குளிர் பிரதேசங்களில் வாழும் மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள்.  
'செரட்டோனின்’ என்னும் ஹார்மோன், நமக்கு மகிழ்ச்சியான உணர்வை தருகிறது. மேலும், செல்களின் அழிவைத் தடுத்து நம் உடலுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். மலைவாழைப்பழத்தில் இது இயற்கையாகவே இருப்பதால், புத்துணர்வு கொடுக்கிறது.
தென் தமிழகத்தில் மட்டுமே கிடைப்பதால், இந்தப் பழ வகைக்கு, மார்க்கெட்டில் பெரும் தட்டுப்பாடு இருக்கிறது. சாதாரண வாழைப்பழங்களைக் காட்டிலும் மலை வாழைப்பழம் சற்று விலை அதிகமானாலும், ஆரோக்கியம் காப்பதில் அருமருந்து!' என்கிற மருத்துவர் ஜெய வெங்கடேஷ்,

மலை வாழைப்பழத்தின் மகிமையை விளக்கினார்.
 குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வரும்போது ஒரு மலை வாழைப்பழம் கொடுத்தால், உடனே சரியாகும்.
 க‌ர்ப்பிணிகளுக்கு ஆறு, ஏழு மாதங்களில் வரும் மலச்சிக்கலுக்கும் இது சிறந்த தீர்வு.
 பிரசவத்துக்குப் பின், தாய்ப்பால் சுரப்பதற்கு உண்டான சத்துக்களை அளிக்கிறது.
 நீர்ச் சத்து இல்லாதவர்கள், தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இந்தப் பழத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் உடம்பில் உள்ள நீர்ச் சத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
  சர்க்கரைச் சத்து இதில் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.
மலைப்பழத்துடன் கற்கண்டு, தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், மந்தத்தைப் போக்கிப் பசியைத் தூண்டும்.
 ரத்தசோகையைப் போக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

மலைவாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் குறித்து டயட்டீஷியன் முருகேஸ்வரியிடம் கேட்டோம்.
 ''நூறு கிராம் மலைப்பழத்தில் 80 கலோரிகளே இருப்பதால், உடல் பருமனாக இருப்பவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம். மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள செல்கள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மலக்குடலில் வரும் புற்று நோயைத் தடுப்பதில் மலைவாழைப்பழத்துக்குப் பெரும்பங்கு உண்டு. நாம் உண்ணும் உணவுகளை அதிவேகமாக ஜீரணிக்கும் தன்மை மலைவாழைப்பழத்தில் இருப்பதால், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும். ஃப்ரக்டோஸ், லாக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருட்கள் அதிகம் இருப்பதால், ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை, தாராளமாகச் சாப்பிடலாம். சோடியம் அதிகம் இருப்பதால், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மலைவாழைப்பழத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது' என்றார்.

Related

பழங்களின் பயன்கள் 7359919695124067262

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item