உழைப்புக்கேற்ற வேலைக்கேற்ற உங்களுக்கேற்ற உணவு

'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள்...


'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இரவு நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள், வெப்பம் மிகுந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பலருக்கும் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.  இவர்களுக்கான உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து, ஊட்டச் சத்து நிபுணர்களான தாரிணி கிருஷ்ணன் மற்றும் ஷைனி சந்திரன் அளிக்கும் ஆலோசனைகள். 
இரவுநேரப் பணியில் ஈடுபடுபவர்கள்:
இவர்களுக்கு சோர்வு, தூக்கம் தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் இன்றி உடல் எடை அதிகரிப்புதான் இவர்கள் சந்திக்கும்  மிக முக்கியமான பிரச்னை.   இரவில் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க, இவர்கள் உணவில் அதிக அளவில் புரதச் சத்தைச் சேர்த்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதச் சத்து, கவனம் மற்றும் விழிப்புத் தன்மையை (அலர்ட்) அளிக்கிறது. இதேபோல்,  இனிப்புமிக்க பானங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரைச் சத்துள்ள உணவுப்பொருள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இருப்பினும், நம் உடலின் சர்க்கரையைக் கையாளும் திறன் இரவு நேரத்தில் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில், அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது உடலைப் பாதிக்கும். இரவு பணியில் உள்ளவர்கள், நொறுக்குத் தீனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வர். இது தேவையற்ற கலோரிகளைச் சேர்த்து, கொழுப்பாக மாற்றிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும்.
இரவு நேரத்தில் சப்பாத்தி, இட்லி, பொங்கல் போன்ற ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நல்லது. இரவு ஒரு மணிக்கு 'ஃப்ரூட் சாலட்’ அல்லது ஏதாவது ஒரு 'ஃப்ரெஷ் ஜூஸ்’ குடிக்கலாம். பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களையும் சாப்பிடலாம். அதிகாலை மூன்று மணிக்கு நல்ல குளிர்ச்சியான பானங்கள் குடிக்கலாம். பணியின் இடையே பசித்தாலும் முளைகட்டிய பயறு வகைகளை, சாலட் செய்து சாப்பிடுவது நல்லது.
அதிகம் உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள்:
இவர்களுக்கு நீரிழப்புதான் மிக முக்கியமான பிரச்னை. நம்முடைய உடலில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, குளிர்விப்பதற்காக அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. இதனால் உடலில் உள்ள நீரும், தாது உப்புக்களும் வெளியேறுகின்றன. வெப்பமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம். இதைத் தவிர்க்க 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்த வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.  தினசரி உணவில் இளநீர், மோர் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் அருந்துவதைத் தவிர்த்து, மண் பானைத் தண்ணீர் அருந்தினால் மிகவும் நல்லது.
நீண்ட நேரம் நடந்து/நின்றுகொண்டு வேலை செய்பவர்கள்:
இவர்கள், குறைந்த கலோரி,  புரதம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும்.  இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரி உணவு தேவை. வேலை நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு அலைந்துகொண்டே இருப்பதால், பஜ்ஜி, போண்டா என்று ஆங்காங்கே கிடைக்கும் பொரித்த உணவைச் சாப்பிடுவதையும் இவர்களால் தவிர்க்க முடியாது. இதனால், கலோரியின் அளவும் 2,200-க்கு மேல் அதிகரித்துவிடும். நொறுக்குத் தீனியைத் தவிர்த்து, வேகவைத்த கடலை, பழங்கள் சாப்பிடலாம். காலையில் மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் ஒன்று முதல் ஒன்றரை கப் அளவு சாதம், அதற்குச் சரிசமமாக காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். மூன்று மணியளவில் தேநீர் அருந்தலாம். மாலை வேளையில் முளைகட்டிய பயறு வகைகளை வேகவைத்துச் சாப்பிடலாம்.
அமர்ந்தே வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்கள்:
அதிகம் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து, எனர்ஜி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் தவிர்த்து பழங்கள் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான சாதத்துடன், அதிகம் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்காராமல் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருமுறை, சிறிது தூரம் நடந்து போய்விட்டு வரலாம். இரவு உணவை எட்டு மணிக்கு முன்னால் முடித்துக்கொள்வது மிகவும் நல்லது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1713835305470138965

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item