கோதுமைப் பொங்கல்! அம்மா ரெசிபி!! சமையல் குறிப்புகள்!!!
அம்மா ரெசிபி! ''என் அம்மா கற்றுக்கொடுத்த ரெசிபி இது. நிறைய நார்ச் சத்து, இதில் இருப்பதால், வீட்டில் வாரம் தவறாமல் இந்த டிபனை ...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_2093.html
அம்மா ரெசிபி!
''என்
அம்மா கற்றுக்கொடுத்த ரெசிபி இது. நிறைய நார்ச் சத்து, இதில் இருப்பதால்,
வீட்டில் வாரம் தவறாமல் இந்த டிபனை செய்வேன். எண்ணெய் சேர்க்காமல்
செய்தாலும், பொங்கல் ருசியாக இருக்கும். என் மகன் விரும்பிக் கேட்பதும்,
வீட்டுக்கு வர்றவங்க செய்யச் சொல்லிக் கொஞ்சுவதும் இந்தக் கோதுமைப்
பொங்கலைத்தான். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். சத்தும் நிறைந்தது''
என்கிறார், மதுரையைச் சேர்ந்த வசந்தி.
தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - கால் கிலோ,
பச்சைப்பயறு - 100 கிராம், வேர்க்கடலை அல்லது முந்திரி - 25 கிராம், உடைத்த
மிளகு, சீரகம், அரைத்த கறிவேப்பிலை விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி
விழுது, தலா ஒரு ஸ்பூன் நெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில்.
செய்முறை: கோதுமை ரவையையும், பச்சைப்பயறையும் வாசனை
வரும் வரை வறுத்து, பிறகு லேசாக ஊறவைத்து, உப்பு சேர்த்து, குக்கரில்
வேகவைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் மிளகு,
சீரகத்தைப் போட்டுப் பொரித்து, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி விழுதுகளைப்
போட்டு நன்றாக வதக்கவும். இதை வேக வைத்துள்ள கோதுமை, பச்சைப்பயறு கலவையில்
கொட்டவும். முந்திரி அல்லது வேர்க்கடலையை வறுத்து, கலவையில் சேர்த்து
நன்றாகக் கிளறவும். இப்போது சுவையான மணம் உள்ள சத்தான கோதுமைப் பொங்கல்
ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள, புதினா சட்னி அருமையாக இருக்கும்.
டயட்டீஷியன் சோஃபியா: கோதுமை ரவை குறைந்த கலோரி உணவு
என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் சர்க்கரை நோயாளிகளும்
தினமும் சாப்பிடலாம். மேலும், பச்சைப்பயறு சேர்ப்பதால் புரதச் சத்தும்,
கறிவேப்பிலை, கொத்தமல்லியை அரைத்துச் சேர்ப்பதால், இரும்புச் சத்தும்
கிடைப்பதுடன் குடலில் உள்ள கிருமிகளும் அழிக்கப்படும். நல்ல பசியைத்
தூண்டும்.
Post a Comment