சோள ரவை பிடி கொழுக்கட்டை அம்மா ரெசிபி! --- சமையல் குறிப்புகள்,

''தினமும் எங்க வீட்டுல செய்யற உணவு சத்தானதா, உடலுக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியதா இருக்கணுங்கிறதுல நான் ...

''தினமும் எங்க வீட்டுல செய்யற உணவு சத்தானதா, உடலுக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியதா இருக்கணுங்கிறதுல நான் ரொம்பவே மெனக்கெடுவேன். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பைத் தரணும்னா, சமையல் செய்யறதுலயும் சோம்பல் படக்கூடாது.  வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சது சத்தான சோள ரவை பிடி கொழுக்கட்டை. வாரம் ஒரு தடவை செஞ்சிடுவேன். செய்யறதும் சுலபம்... டேஸ்டும் சூப்பர்''  என்கிற கோவையைச் சேர்ந்த நம் வாசகி ஷியாமளா வெங்கட், அதன் செய்முறையை விளக்குகிறார். 
தேவையானவை: மக்காசோள ரவை - ஒரு கப், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விடவும். இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடிவைக்கவும்.  அடுப்பை 'சிம்’மில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.
ஊட்டச்சத்து நிபுணர் காந்திமதி:  இது ஹை ப்ரொட்டீன் ரெசிபி. சோளத்தில் புரதம், மாவுச் சத்து, கால்ஷியம், இரும்புச்சத்து, பீட்டா கரோடின்... போன்ற பல சத்துக்கள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது

Related

சமையல் குறிப்புகள் 7228173516216364742

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item